பீலா பீலா பீலா விடாத (தானா சேர்ந்த கூட்டம்) , ஹொலா மீகோ (ரம்) வரிசையில இந்த உல்லாலா.. ஹ்ம்.. இதுவும் ஒரு ஹிஸ்பானியா தீம். ராசைய்யாவி 'மாருகோ மாருகோ மாருகயே' கூட இதே ஜானர் தான். எல்லாரும் கொஞ்சம் ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொள்ளத்தான் செய்வர். யுவனின் 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' கூட இந்த ஜானர்ல வந்த பாட்டுதான். மென்மையா மெலடியா, அதிராத தாளம் கொண்ட பாடல் முழுக்க ரிதம் மாற்றாம, கிட்டார் வைத்துக்கொண்டு தலைவன் பாடுவது போன்ற பாடல்கள், ஆன்டானியோ பந்தேராஸ் பாடுவார் 'எல் மரியாச்சீ' லூயி ஃபொன்ஸி 'டெஸ்பாஸீத்தோ'ன்னு எடக்கு மடக்கா அந்தப்பெண்ணோட பாடி ஆடுவார். போர்ச்சுகல்/ஹிஸ்பானியா டைப் ஸாங்.
கோவா' டைப் ஸாங்னு வெச்சிக்கலாம். இத வயசான காலத்துல ரசினிக்காக போட்டது தான் எப்டீன்னு தெரியல. ஏன் வயசானவா எல் மரியாச்சி பாடக்கூடாதா? ஹ்ம்.. ரசினிக்கு இது மாதிரி பாட்டு இப்பதான் முதன்முறை :)
கார்த்திக் சுப்பராஜ் போயி சந்தோஷ் கால்ல விழணுமாம் இந்தப்பாட்டுக்காக. யாரோ எழுதியிருந்ததப்பார்த்தேன். ரஹ்மான் கூட ராசைய்யாவின் பாணியில் தான் இசைத்திருந்தார் வணிக நாயகனுக்கு, அதை உடைத்து பிற பாடல் ஜானர்களையும் இசைக்கலாம் என கொஞ்சம் முயற்சித்தால் தவறு. என்னதாண்டா உங்களுக்குப்பிரச்ன ?! #உல்லாலா
No comments:
Post a Comment