Sunday, January 13, 2019

டான்ஸ் கில்லர்


மாஸ் மரண மாஸ் படம் ரஜ்னிஃபைடு!.. பரமக்குடி தியேட்டர்ல காளி,தீ , அப்புறம் ஊர்க்காவலன்லாம் பாத்த ஞாபகம் வந்திருச்சு. என்ன கொஞ்சம் வயசாயிருச்சு தாத்தாவுக்கு அவ்ளவ்தான். தரமான சம்பவம் சொல்லில் மட்டுமே இருக்கு. பழைய பஞ்சாங்கத்தான் கதெ.  கார்த்திக் இந்த நான் லீனியர், அவன் லீனியர்ன்லாம் போட்டு கொழப்பிக்காகம ரசினி படமாவே எடுத்து வெச்சிருக்கார். இன்னும் எனக்கு என்ன ஆதங்கம்னா ஜிகர்தண்டாவில பாபி சிம்ஹா கேரக்டரா ரசினி நடிச்சிருக்கணும். அதுக்கு வாய்க்கல.!

ஆமா படத்துல ஏன் இவ்ளவ் இந்தித்திணிப்பு ?! என்னவோ கொஞ்சம் பாம்பேல இருந்ததால அவா பேஸ்ரதுல்லாம் புரியுது. நம்ம கவிதாயினி கனிமொழி இப்பதான் பாராளுமன்றத்துல எனக்கு புரியும் மொழியில பேசுங்க என கர்சித்தார். ஆப்ரஹாம் பாம்பே ஏர்போர்ட்ல இந்தி தெரியலைன்னா தமிழ்நாட்டுக்குப் போன்னு சொன்ன அதிகாரியை இருக்கிற அத்தனை டாப் தலைவர்களையும் ட்வீட்ல செருகி நாறடிச்சார். இங்க கார்த்திக் அப்டியே எல்லாரையும் ஹிந்தி பேச வெச்சிருக்கார். ஒரு வேள நவாஸுத்தீன் சித்திக்'கிற்கு வசதியா இருக்கட்டும்னு அப்டியே கதெயெ நார்த் இன்டியாவுக்கு தள்ளிக்கினு போய்ட்டார்னு நெனக்கிறேன். ஆதன்ட்டிக்கா இருக்கும்லயா அதுக்காக.. ஹிஹி..

இஸ்லாமியரை தவறாக சித்தரிக்கவில்லைன்னு ஒரு பதிவு பார்த்தென். நவாஸுதீன் யாருங்ணா?! பிறப்பால் முஸ்லீம்தானே.? சரி கதெல அவர் இந்து, வெறியாட்டம் போடும் இந்து. இப்பத்தான் 'லுங்கி உட்டாவோ புங்கி பஜாவோ'ன்னு பதினெஞ்சு தடவ பொழிஞ்சு தள்ளினார் பால் தாக்கரே படத்துல. ஏன் இப்டி ஒரு வாட்டமா ரொம்ப நாள் சாப்டாத மேரி ஒரு கெட்டப்பு. அதுல ஆஸ்த்துமா பேஷன்ட் போல. கொடும. மன்ட்டோ பாத்தே செம காண்டுல இருக்கேன் நான். கொல பண்ணிடுவேன் ஆமா. ஹிஹி.. ராஹீஸ்ல அவரின் நடிப்பு பின்னர் ரமன் ராகவ் இதிலெல்லாம் கலக்கின மனுசன். பாவம் ரஸ்னிகிட்ட வந்து அடிபட்டு சாகிறார். ரைட்டு விடு.





எவ்ளவ்தான் ரசினி தன் பழைய ஸ்டைல திரும்ப கொண்டு வந்தாலும் , வயசு தள்ளாட வெக்கிது, வெறி கண்ணுல மட்டுந்தான் இருக்கு உடல் கை கால் இன்னபிற பாகங்கள்லாம் ஒத்துழைக்கல. காற்றைக்கிழிக்கும் சப்தம்லாம் இல்லை. என் வலி தனி வலின்னு பாவம் புலம்பிருப்பார் ஒவ்வொரு சண்டைக்காட்சிக்கப்புறமும். போதுமே...ஹ்ம்? அமிதப் மேரி ஒரு பிங்க்,அஸ் குட் அஸ் இட் கெட்ஸ் இந்திப் பதிப்பு மாதிரி படங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கலாமே.?

ஒவ்வொரு தடவையும் எதிரியைக்கொல்லும் போது ஒரு டான்ஸ் போட்டு அப்புறந்தான் கொல்றார். டான்ஸ் கில்லர். அதே மாதிரி ஒவ்வொருத்தரும் எதிரிகள் கிட்ட மாட்டிக்கிட்டு காப்பாத்துங்கன்னு கத்தாம 'பேட்ட'ன்னு கூவுறாங்கள். ஆதிமூலமேன்னு ஆனை கூவினதைப்போல. இருகைகளையும் உயர்த்தி கூவினாள் திரெளபதை அது மாதிரி இங்கயும் , உடனே பேட்ட பராக் அங்க ஸ்பாட்டுக்கு. ஹ்ம்..பார்க்க குதூகலமாத்தான் இருக்கு, விசிலடிக்குது தெட்டர்ல. எதிர்பார்த்த மேரியே எல்லாம் நடக்குது. ஹைலி பிரிடிக்டபிள். ஹிஹி. இயக்குநர் மகேந்திரன் முன்னர் ரசினி பேசும் வசனங்கள் , அவருக்கு முள்ளும் மலரும் காளியை ஞாபகப்படுத்தியிருக்கும்.

மாட்டுக்கறி, பீஃப், வேலன்டைன்ஸ் டே, பக்தாள் எல்லாரும் வரிசையா லைன் கட்டி வாறாங்கள். ஒவ்வொண்ணா புடிச்சு அடிச்சுத்தள்றார் வேலன்.சிகரெட் பிடிக்கிறது உடல் நலத்துக்குக்கேடுன்னு விஜய் சேதுபதிகிட்ட சொல்றார். காயத்துக்கு மருந்து போட்டுக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பாணில. எவ்வளவு அடிச்சாலும் தாங்க முடியுமா என்ன? அதான். கொஞ்சம் யதார்த்தமா இருக்கட்டுமென்னு முதுகச்சுத்தி நெஞ்சு வரைக்கும் பேன்டேஸ்..ஹிஹி.கலை அற்புதம். ஒரே ஒரு தடவ தான் சொல்றார் ரசினி, குழப்பமா  இருந்தா பாட்டு போட்டு டான்ஸ் ஆடி அப்புறமா முடிவெடுங்கன்னு, க்ரானிக் ஹீலர்,அடுத்தவர் மனசுல இருக்கிறத உடனே சொல்றவருக்கு இதெல்லாம் தெரியாதா? ஹ்ம்.. உடனே சிம்ரன் கதவ சாத்திட்டு டான்ஸாட்றார். ஹிஹி. அதான்டே லவ்வூ...ஹிஹி..




ஆமா யாரு இவருக்கு ரிக்கமென்ட் பண்ணினது அந்த ஹாஸ்டல் வார்டன் போஸ்ட்டுக்கு? தெரியவேயில்லை. ஏன் பாபி சிம்ஹா திடீர்னு சேம்சைட் கோல் போட்றார் ? தெரியலை. சிம்ரன் , ஜானு எல்லாம் எங்கே போனாங்கோ, தெரியலை. ஏற்கனவே இருக்கிற கார்த்திக்கோட அதே ஷேவிங் செட்தான் , நிலைய வித்வான்கள் தான் படம் முழுக்க, பாபி சிம்ஹா, விஜே சேதுபதி அப்பால முனீஸ்காந்த்துன்னு. சித்திக்கும் ரஜினியும் மட்டும் வெளீலருந்து. ரஜினிக்காக பல இடங்கள்ல காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டா மேரி இருக்கு. இது மாதிரி காதலைச்சேர்த்து வெக்கிற படம் நெறய இருக்கூங்ணா. 'பூந்தோட்டக் காவல்காரன்', 'வைதேகி காத்திருந்தாள்', இது மேரி சொல்லிக்கிட்டே போலாம்.

தம்பி அநிருத் அடிச்சுப்பட்டையக் கெளப்பிட்டான் பாடல்களில் மட்டும். பின்னணி இசைக்கு நிறைய ஹிஸ்பானியா, கொஞ்சம் இட்டாலியன் மாஃபியா, ஒரு இடத்தில் 'குட்பேட் அக்லி' படத்தில் வரும் ரெம்ப ஃபேமஸான  என்னியோ மரிக்கோனின் தீம் இசையைப் பயன்படுத்தியிருக்கிறார். சீழ்க்கை ஒலி. வடநாட்டுப்பின்னணிக்கு டோலக்,சித்தார்னு சமாளிச்சு வெச்சிருக்கிறார். பின்னணி இசைக்கென ராசைய்யாவிடம் கொஞ்சம் உஞ்சவிருத்தி பண்ணி சாதகம் பண்ணீண்டான்னா எல்லாம் சரியாயிரும். நிறைய பழைய பாடல்கள் அதுவும் பிபிஸ்ரீனிவாஸின் பாடல்கள் பின்னணியில் ஒலிக்கிறது. அது என்ன ரேடியோவா இல்லை டேப் ரிக்கார்டா? ,,ஹ்ம்..என்னவோ கேரவான்'னு ஒண்ணு விட்டாங்ய..அதுல என்னவோ அஞ்சாயிரம் பாட்டுகள் இருக்குன்னு அந்த அம்மா கடும் குளிர்ல கட்டின குரல்வளையில் சொல்லும். ஒரு வேள அதத்தான் ரசினி தூக்கிக்கிட்டே திரியிறார் போல.கதெ எண்பதுகளிலா இல்லை தொண்ணூறுகளிலா இல்லை எல்லாமே ஃப்ளாஷ்பேக்லயாங்ற குழப்பத்தில இசையும் ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறது. 




அந்தக்காலேஜூ பாத்தா என்னவோ மலை மேல இருக்கிற பைத்தியக்காரக்கூடம் மாதிரி தான் எனக்கு தோணுது. நிறைய இருளில் சண்டைக்காட்சிகள். அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு சண்டை. அபாரம். அக்னி நட்சத்திரத்தில கடைசி உச்சக்கட்ட காட்சில பிசி ஸ்ரீராம் பளிச் பளிச்னு ஒளி அடிச்சு பாக்க வந்தவன் கண்ணெல்லாம் ஒரு வழி பண்ணி விட்டாமேரி இங்க இல்லை. ப்ளூ டின்ட், டார்ச் லைட் ஹ்ம்.. 'மவனெ கொல காண்ட்ல இருக்கேன் மவனே ஓடிப்போய்டு'ன்னு வசனம், அடிக்கடி வருதே ஏனுங்ணா கார்த்திக்? பாக்க வந்தவன சொல்றீங்ளாண்ணா ?!.ஹிஹி.. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே.. #டான்ஸ்கில்லர்

.

3 comments:

  1. நமக்குப் பூர்வீகம் பரமக்குடியா, ராசா?! நமக்கு ரொம்ப பக்கத்துலதான் பொறந்து வளந்து இருக்கீங்க. ஆனா இப்படி பட்டணம் போயி நாசமாப் போயீட்டீங்களா ராசா!!

    டான்ஸ் கில்லர்!! நான் இந்தக் கோணத்தில் யோசிக்கவே இல்லை.

    ரஜினி-சிம்ரன் கெமிஸ்ட்ரி செமையா இருந்துச்சுனு சொல்லவே இல்லை, ராசா!! எல்லாரும் சொல்லிக்கிறாங்க. ஏன் அந்த சீன்ல எல்லாம் தம் இல்ல கஞ்சா அடிக்கப் போயிட்டீங்களா, ராசா?

    யு எஸ்ல 2 மில்லியன் 5 நாள்ல கலக்ட் பண்ணீ இருக்கு இந்தப் படம். அட் லீஸ்ட் 2.5 மில்லியன் கலக்சன் வரைப் போகும்.

    பழைய பாடல்கள் (வந்த நாள் முதல், மலர்ந்து மலரான) எல்லாம் ரசிக்கும்படித்தானே இருந்துச்சு? உம் ரசனை ஏன் ராசா இப்படிக் கேவலமா இருக்கு?!!

    இப்படி விமர்சனம் தமிழ்க்கொலை செய்து எழுதி ஏன் உம் தரத்தை குறச்சுக்கிற ராசா?!

    நீவீர் எப்படி கதறீனாலும் இந்தப்படம் சூப்பர் ஹிட்தான் ராசா!:)

    ReplyDelete
    Replies
    1. ;) :) :) ஆஹா…பேஷ் பேஷ்

      Delete
    2. சை... வருண் ,

      என்ன தான் இருந்தாலும் பேட்ட விசுவாசத்துக்கு முன்னால் மண்டி போட்டிருச்சே

      Delete