நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி ..ஹிஹி.. அதுக்கப்புறம் நம்ம முருக்டாஸைத்தான் கேக்கோணும். பிறர் அழுவதைபார்த்து மகிழும் செம்மம். எல்லாருந்தான். எஸ் ஜெ சூர்யாதான் ஹீரோ. 'டை ஹார்ட் வித் வெஞ்சென்ஸ்' ஜெரீமி அயன்ஸ் போல பாறையை உடைக்க சொல்யூஷனை ஊற்று எனக்கூறிவிட்டு இந்தப் பக்கம் ஆஸுபத்திரியை தகர்க்க,இல்லை இல்லை பேங்க்கை கொள்ளையடிக்க முற்படும் வில்லன். மகேஷு பாவு என்டு ஒருத்தர் தான் ஈரோவாம். எப்படிப்பாத்தாலும் 'அம்மா பாட்டில்ல இவ்ளவ்தான் பாலா, இன்னுங்கொஞ்சம் ஊத்தும்மா'ன்னு கேக்கறா மேரி ஒரு மூஞ்சி. ஆக்ரோசம், அவமானம், அழுகை, சிரிப்பு,எல்லா எழவுக்கும் ஒரே மொகச்சாடை. பீடை. அடக்கருமமே இவனெயெல்லாம் அக்கட டேஸம் எப்டித்தான் சூஸ்த்துன்னாரோ ? கெரஹம்டா.
எஸ் ஜெ சூர்யா, கதாப்பாத்திரத்தேர்வு அமர்க்களம். அந்த மனிதி
படத்துக்கப்புறம் ஆளு சொம்மா எல்லாருக்கும் சவால் விட்றாபோல
நடிக்கிறார்ங்ணா. என்ன கிறிஸ்டோஃபர் நோலனின் 'ஜோக்கர்' போல வேஷங்கட்டிக்காம
நடிச்சிருக்கார். இரண்டு விரல்களை துப்பாக்கி போல குறுக்கி
வைத்துக்கொண்டு ஆசுவாச நடை பயிலும் ஜோக்கர். முன்னவர் ஸ்கேட்டிங்க்
போர்டில் வருவார், இங்கு வெறுமனே நடை அவ்ளவ்தான். தம்பியை அந்த ஈரோ 'பால்
புட்டி' கன்பாயிண்ட்ல நிக்கவெச்சு பாயிண்ட் ப்ளாங்க்ல போட்டுத்தள்ளும்போது
இதழ்க்கடையோரம் ஃபூ'ங்கறார். பயம்னா என்னான்னு கைல விலங்க அவுத்துவிடச்
சொல்லிட்டு முன்னால உக்காந்திருக்கிற 'ஃபீடிங்க் பாட்டிலுக்கு' வெளக்கம்
சொல்றார். ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி எஸ் ஜெ சூர்யா. எல்லாரும்
அழணும் தான் அதப்பாத்து மகிழணும். இயல்பாவே அது போலவே இருக்கார். ஆமா
எதுக்கு,அது மட்டும் கேக்கப்பிடாது. அது அப்டித்தான்.
ஹாரீஸுக்கு ஒரு வேலையுமில்லை. சூர்யாவின் காட்சிகளில் வெறுமனே மயானச்சங்கை ஊதி ஊதி வாய் வலிச்சது தான் மிச்சம் போலருக்கு, அவருக்கு எப்பவோ சின்னப்பயலுஹள்லாம் இங்க சேர்ந்து ஊதீட்டாங்ய :) #ஸ்பைடர்
.
ஹாரீஸுக்கு ஒரு வேலையுமில்லை. சூர்யாவின் காட்சிகளில் வெறுமனே மயானச்சங்கை ஊதி ஊதி வாய் வலிச்சது தான் மிச்சம் போலருக்கு, அவருக்கு எப்பவோ சின்னப்பயலுஹள்லாம் இங்க சேர்ந்து ஊதீட்டாங்ய :) #ஸ்பைடர்
.
No comments:
Post a Comment