நாங்கள் உங்கள் கவிதைகளை
வாசிப்பதில்லை
அதற்கான நேரமும் இருப்பதில்லை
இரை தேட வேண்டியிருக்கிறது
மழைக்காலமானால் கூடுகளை இடம் மாற்ற
வேண்டியிருக்கிறது
நனைந்து போன சிறகுகளை உலரவைக்கவே
வெகுதூரம் பறக்க வேண்டியிருக்கிறது
பெரிய கழுகுகளின் பார்வையிலிருந்து
எங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது
ஆண்டில் பலமுறை புலப்பெயர்வுக்கென
இடம் தேடிப் பறப்பதிலேயே
வாழ்க்கையின் பாதி நாள் வீணாகிறது
இப்படி நாங்கள் வானில் சஞ்சரிக்கும்
சில நேரப்பொழுதுகளை மட்டும்
பார்த்து வைத்துக்கொண்டு
கவி பாடித் திரிவதில் கொஞ்சமும்
அர்த்தமில்லை
மேலும்
நாங்கள் உங்கள் கவிதைகளை
வாசிப்பதில்லை
.
வணக்கம்
ReplyDeleteவித்தியாசமான கற்பனையில் மலர்ந்த கவிதை சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நாங்களும் உங்கள் கவிதைகளை வாசிப்பதில்லை... ஹிஹி...
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழரே...
அருமை.
ReplyDeleteசர்வதேசத் தரத்தில் -மொழிபெயர்ப்பு நடையில்- கவிதை இருக்கிறதே! அருமையான உருவகம். தொடருங்கள். நானும் உங்கள் வலைப்பக்கத்தைத் தொடர்கிறேன். நன்றி
ReplyDeleteபேர்தான் சின்னப்பயலா இருக்கு! விஷயம் ரொம்பப் பெரியதாக அல்லவா இருக்கு? நல்லது தொடர்க
ReplyDeleteநன்றி ரூபன்..!
ReplyDeleteநன்றி தனபாலன் :) :)
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி முத்துநிலவன். .மிக்க நன்றி .
ReplyDeleteஅருள்முருகன் பொன்னுசாமி
ReplyDeletesuper
kosinra
ReplyDeleteமிக அருமை தோழரே. வாழ்த்துகள். கோசின்ரா