வீட்டில் காண்பிக்க இயலாத
மதிப்பெண்களை சிலேட்டிலிருந்து அழித்துவிட
இன்று மழை வரவில்லை
மதிப்பெண்களை சிலேட்டிலிருந்து அழித்துவிட
இன்று மழை வரவில்லை
சாலைகளின் மேடு பள்ளங்களை நிரப்பி
குதித்துத் தாண்டிக்கொண்டே வீடு செல்ல
இன்று மழை வரவில்லை
குதித்துத் தாண்டிக்கொண்டே வீடு செல்ல
இன்று மழை வரவில்லை
ஆசிரியரின் ‘ஏண்டா லேட்டு’க்கு
‘மழைல நனைஞ்சிட்டேன் சார் அதான்
உடுப்பு மாத்தப்போயிருந்தேன்’
என்று சாக்கு சொல்ல
இன்று மழை வரவில்லை
‘மழைல நனைஞ்சிட்டேன் சார் அதான்
உடுப்பு மாத்தப்போயிருந்தேன்’
என்று சாக்கு சொல்ல
இன்று மழை வரவில்லை
வகுப்பறையில் மூன்று பேர் அமரும் இடத்தில்
நெருக்கியடித்துக்கொண்டு ஐவராக அமர்ந்து
உடற்சூட்டை பரிமாறிக்கொள்ள
இன்று மழை வரவில்லை
நெருக்கியடித்துக்கொண்டு ஐவராக அமர்ந்து
உடற்சூட்டை பரிமாறிக்கொள்ள
இன்று மழை வரவில்லை
ஓட்டிலிருந்து தொடர்ந்து விழும் மழைத்துளிகள்
உண்டாக்கும் சிறுகுழிகளைக் கண்டு மகிழ
இன்று மழை வரவில்லை
உண்டாக்கும் சிறுகுழிகளைக் கண்டு மகிழ
இன்று மழை வரவில்லை
‘ஈரத்துல போய் விளையாடாதே
காய்ச்சல் வந்துரும்’ என்று
அம்மாவிடம் ஏச்சு வாங்கவைக்க
இன்று மழை வரவில்லை
காய்ச்சல் வந்துரும்’ என்று
அம்மாவிடம் ஏச்சு வாங்கவைக்க
இன்று மழை வரவில்லை
‘அம்மா இன்னிக்கு மழை பெய்யுது
அதனால பள்ளிக்கூடம் போகமாட்டேன்’
என்று சாக்கு சொல்ல
இன்று மழை வரவில்லை
அதனால பள்ளிக்கூடம் போகமாட்டேன்’
என்று சாக்கு சொல்ல
இன்று மழை வரவில்லை
தொடர்ந்தும் போடும் பந்துகளில்
சொற்ப ரன் கூட எடுக்க முடியாமல்
திணறும்போது சாக்கு சொல்லி
எப்படியாவது விளையாட்டை நிறுத்திவிட
இன்று மழை வரவில்லை
சொற்ப ரன் கூட எடுக்க முடியாமல்
திணறும்போது சாக்கு சொல்லி
எப்படியாவது விளையாட்டை நிறுத்திவிட
இன்று மழை வரவில்லை
இங்ஙனம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்
என்னை எழுத விடாமல் தடுக்க
இன்றும் மழை வரவில்லை
என்னை எழுத விடாமல் தடுக்க
இன்றும் மழை வரவில்லை
.
விரைவில் மழை வரட்டும்...
ReplyDeleteஅருமை... ரசிக்க வைக்கும் வரிகள்...
tm3
மழையின் வரவுக்காகச் சின்னப்பயலுக்குள் எத்தனை எதிர்பார்ப்பு...அழகான ஜில்லென்ன்று ஒரு கவிதை !
ReplyDeleteநன்றி தனபாலன் :)
ReplyDeleteமழையில் நனைந்த ஹேமாவிற்கு நன்றி :))
ReplyDelete