Saturday, November 24, 2012

முயன்று தோற்கிறேன்




முழு வானவில்லைப் பார்க்க 
முயன்று தோற்கிறேன்

சோம்பல் முறிக்கும் அணிலின்
முதுகைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


கூவி வரவழைத்த மழையில்
கரைந்து போன அந்தக்

குருவியைப்பார்க்க முயன்று தோற்கிறேன்

சீராகப்பெய்து கொண்டிருந்த மழைச்சாரலை

மெல்லவே கலைக்க முயன்ற
தென்றலைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மரங்களினூடே தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கும்
மைனாவின் இருப்பிடத்தைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மழை இல்லாக்காலங்களில் தென்படாத
நத்தைகளைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மழை பெய்து முடித்த பின் அதற்கு முந்தைய
நிலப்பரப்பைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


பல நாட்கள் சகஜமாகப்பழகிய பின்னரும்
என் காதலை அவளிடம்
சொல்ல முயன்று தோற்கிறேன்


இந்தப்பட்டியலில் இன்னமும்
கோர்க்கவியலும் தோல்விகளை
சுவைபடச்சொல்ல இயலாமல்
உங்களிடம் இன்னமும் தோற்கிறேன்.


.

13 comments:

  1. கவிதை அருமை, வித்தியாசமாகவும் உள்ளது. :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி இக்பால் செல்வன் :)

    ReplyDelete
  3. முயன்று முயன்று தோற்றுக் கொண்டே இருங்கள்
    இறுதியில் வெற்றி நிச்சயம் கிட்டும்
    அந்த வெற்றி நிச்சயம் முயலாது கிட்டிய வெற்றியை விட
    மிகச் சிறந்ததாக இருக்கும்
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @ ரமணி சார் : வரவுக்கு நன்றி வாழ்த்துகளுக்கும் :)

    ReplyDelete
  5. சில வெற்றிகள் வருத்தத்தைக் கொடுக்கும்
    சில தோல்விகள் மகிழ்வைக் கொடுக்கும்..

    கவிதை நன்று.

    ReplyDelete
  6. தோற்பதிலும் இத்தனை ரசனைகளா...!

    தோல்வி அவ்வப்போது வந்தால் வெற்றி சுனாமி போல் ஒரு நாள் வரும்... நம் மனதைப் பொறுத்து தான் எல்லாமே...
    tm4

    ReplyDelete
  7. @ முனைவர்.இரா.குணசீலன் : வாழ்த்துகளுக்கு நன்றி :)

    ReplyDelete
  8. @ திண்டுக்கல் தனபாலன் : தொடர்ந்தும் கவனித்து வரும் தனபாலனுக்கு நன்றி :)

    ReplyDelete
  9. அசத்திட்டீங்க! அருமையா இருக்கிறது, இதுபோல் முயற்ச்சியும் தோல்வியும் எல்லோருடைய மனதிலும் இருக்கும்.

    இப்போதுதான் முதல்முறையாக உங்கள் பக்கம் வருகிறேன், நிறைய நல்ல நல்ல பதிவுகள் வாசிக்க கிடக்கிறது. இதோ இப்பொழுது முதல் உங்களை பின்தொடர்ந்து நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.

    ReplyDelete
  10. நன்றி செம்மலை..தொடர்ந்து வாசிங்க :)

    ReplyDelete
  11. சின்னப்பயல்....இன்னும் உங்கள் முயற்சி போதாது.இன்னும் முயற்சியுங்கள் வெற்றி உங்கள் பக்கம்தான் !

    ReplyDelete
  12. @ ஹேமா : ஹ்ம்...தொடர்ந்து முயல்கிறேன் :)

    ReplyDelete