Thursday, September 13, 2012

தேன் கூடு


மலைகள் இணைய இதழில் வெளியான கவிதைகள்





எரிதம்


க்றீச் என ஒலியெழுப்பும்
தகரக்கதவைத்திறந்து
முன் பாய்ந்த  கோழியை விலக்கி
காரை பெயர்ந்த படியேறி
தபால்காரன்  கொண்டு வரும்
செய்தியை விட
மின்னஞ்சல்  செய்தி
அத்தனை சுவாரசியமாக  இருப்பதில்லை
அது எனக்குரியதாகவே இருப்பினும்

உரிச்சொல்


எழுதி முடித்த  கவிதையைக்காட்டிலும்
அதற்கெனச்செலவழித்த  நேரங்களும்
அடித்துத்திருத்தியவையும்
கிடைக்காத சொற்களைத்தேடி
அவை கிட்டக்காத்திருந்ததும்
இருப்பினும் பரவாயில்லை என
உரிச்சொல்லுக்கு மாற்றென
இட்டு நிரப்பியவைகளும்
ரசிக்கும்படியே  இருக்கிறது
எனக்குள்.

தேன்  கூடு

விட்டெறிந்த கல்  பட்டு வலித்தபோதிலும்
தேன் கூடு தேனே சொரிவதுபோல
உன் கண் அம்பு  பட்டு
என் நெஞ்சு கிழிந்த போதும்
அது காதலை மட்டுமே  பொழிகிறது

ஞமலி

வால் சுருண்ட  வெண்டைக்காய்கள்
தம் வால் நிமிர்த்த  இயலாத
ஞமலிகள் போலக்கிடக்கின்றன


கடல்

சூரியனுக்காவது  கடல் உண்டு
சென்று மூழ்கி விடுவான்
எனக்கு ?


மரம்

வேர்களைக்கீழ் பரப்பி
நிலத்தடி நீரை
உறிஞ்சக்காத்திருந்த மரம்
தம் இலைகளை மேலே பரப்பி
மேகங்களிலிருந்து
மழையையும் உறிஞ்ச
எத்தனிக்கிறது



***

7 comments:

  1. மின்னஞ்சல் செய்தி
    அத்தனை சுவாரசியமாக இருப்பதில்லை
    அது எனக்குரியதாகவே இருப்பினும்

    தேன் துளிகள் தித்தித்தன... பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. தேன் சுவைத்த நண்டு கூறியது ம்..! :-)))

    ReplyDelete
  3. @ ராஜராஜேஸ்வரி: நன்றி..!

    ReplyDelete
  4. வித்தியாசமா இருக்கே.உரிச்சொல்,தேன்கூடு,ஞமலி,கடல்,மரம்,எரிதல்....ஏதாவது ஒன்றைச் சொல்ல வந்து எல்லாம் நல்லாயிருக்கு சொல்லிட்டன்போல.ஞமலி.....அகராதி புரட்டுகிறேன்.பாராட்டுக்கள் பையா !

    ReplyDelete
  5. @ ஹேமா : புதிதாக ஏதேனும் எழுதலாமே என்ற விருப்பமே இது...பாராட்டுகளுக்கு நன்றி..

    ReplyDelete
  6. மிகவும் பிடித்தவை : 1)மரம் 2)கடல்

    ReplyDelete