Monday, August 27, 2012

நீர்க்குமிழிகள்



தங்கமீன்கள் தமது உணவென நினைத்து
அழகிற்கெனப் போடப்பட்டிருந்த சிறு கற்களை
விழுங்கிப் பின் துப்பிக்கொண்டிருந்தன

எண்ணற்ற நீர்க்குமிழிகள் புனலிலிருந்து
வெளிக்கிளம்பி நீர் மேல் மட்டம் வரை சென்று
காற்றில் பட்டு உடைந்து கொண்டிருந்தது

நீர்த்தாவரம் போலிருந்த அந்தப்பச்சை
நிறப் பிளாஸ்டிக் பாசிகள் மீன்களுடன் சேர்ந்து
நீருக்குள் அல்லாடிக்கொண்டிருந்தன

கூட்டுக்குள் தம்மை மறைத்துக்கொள்ளாமல்
சிறு ஆமைகள் தம்மால் முடிந்தவரை நீந்தி
நீரின் மேல் மட்டம் வரை வந்து பின்
நீர்ச்சுழலில் தடுமாறி கீழே போய்க்
காயப்படாமல் விழுந்துகொண்டிருந்தன

என்னாலியன்றவரை ஷூ ஒலிகளை
அதிகம் வெளிப்படுத்தாது
தானியங்கிக் கதவை நோக்கி
என்போக்கில் நடந்துகொண்டிருந்தேன்
“முடிவு பிறகு தெரிவிப்போம்” என்ற குரல்
என் முதுகில் ஒலித்துக்கொண்டிருந்தது


.

6 comments:

  1. மிக்க நன்றி ராமலஷ்மி.. :-)

    ReplyDelete
  2. முன்னுக்கு சரியா வந்து......கடைசிப்பந்தி விளங்காமப்போச்சு பையா !

    ReplyDelete
  3. நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்... நன்றி… (TM 3)

    ReplyDelete
  4. தனபாலன் மிக்க நன்றி :-)

    ReplyDelete