தங்கமீன்கள் தமது உணவென நினைத்து
அழகிற்கெனப் போடப்பட்டிருந்த சிறு கற்களை
விழுங்கிப் பின் துப்பிக்கொண்டிருந்தன
அழகிற்கெனப் போடப்பட்டிருந்த சிறு கற்களை
விழுங்கிப் பின் துப்பிக்கொண்டிருந்தன
எண்ணற்ற நீர்க்குமிழிகள் புனலிலிருந்து
வெளிக்கிளம்பி நீர் மேல் மட்டம் வரை சென்று
காற்றில் பட்டு உடைந்து கொண்டிருந்தது
வெளிக்கிளம்பி நீர் மேல் மட்டம் வரை சென்று
காற்றில் பட்டு உடைந்து கொண்டிருந்தது
நீர்த்தாவரம் போலிருந்த அந்தப்பச்சை
நிறப் பிளாஸ்டிக் பாசிகள் மீன்களுடன் சேர்ந்து
நீருக்குள் அல்லாடிக்கொண்டிருந்தன
நிறப் பிளாஸ்டிக் பாசிகள் மீன்களுடன் சேர்ந்து
நீருக்குள் அல்லாடிக்கொண்டிருந்தன
கூட்டுக்குள் தம்மை மறைத்துக்கொள்ளாமல்
சிறு ஆமைகள் தம்மால் முடிந்தவரை நீந்தி
நீரின் மேல் மட்டம் வரை வந்து பின்
நீர்ச்சுழலில் தடுமாறி கீழே போய்க்
காயப்படாமல் விழுந்துகொண்டிருந்தன
சிறு ஆமைகள் தம்மால் முடிந்தவரை நீந்தி
நீரின் மேல் மட்டம் வரை வந்து பின்
நீர்ச்சுழலில் தடுமாறி கீழே போய்க்
காயப்படாமல் விழுந்துகொண்டிருந்தன
என்னாலியன்றவரை ஷூ ஒலிகளை
அதிகம் வெளிப்படுத்தாது
தானியங்கிக் கதவை நோக்கி
என்போக்கில் நடந்துகொண்டிருந்தேன்
“முடிவு பிறகு தெரிவிப்போம்” என்ற குரல்
என் முதுகில் ஒலித்துக்கொண்டிருந்தது
அதிகம் வெளிப்படுத்தாது
தானியங்கிக் கதவை நோக்கி
என்போக்கில் நடந்துகொண்டிருந்தேன்
“முடிவு பிறகு தெரிவிப்போம்” என்ற குரல்
என் முதுகில் ஒலித்துக்கொண்டிருந்தது
.
மிக அருமை!!!
ReplyDeleteமிக்க நன்றி ராமலஷ்மி.. :-)
ReplyDeleteமுன்னுக்கு சரியா வந்து......கடைசிப்பந்தி விளங்காமப்போச்சு பையா !
ReplyDeleteநல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடருங்கள்... நன்றி… (TM 3)
@ ஹேமா: ஹ்ம்... :-))))
ReplyDeleteதனபாலன் மிக்க நன்றி :-)
ReplyDelete