Thursday, November 17, 2011

மெட்டமார்ஃபஸிஸ்

நவீனவிருட்சத்தில் வெளியான கவிதை


எனக்கே தெரியாமல்
எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி
நுழைந்து விட்டது,
என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை
அதை அது எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட பெரும்பாடாயிற்று.

சில நாட்கள் கழித்து
பின்னர் அதைத்தொடர்ந்து
ஒரு பாம்பும் நுழைந்து விட்டது,
சரி பச்சோந்தியைப்பாம்பு
தின்று விடும் என்று
எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்

சில நாட்களாக பச்சோந்தியைக்காணவில்லை
பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால் காண நேர்ந்தது.
சரி உண்டு விட்டது என்று
நினைத்து மகிழ்ந்த போது
பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து
மீண்டும் பச்சோந்தியாகி விட்டது.

இப்போது
பச்சோந்தியிடம் பாம்பாக
மாறும் வித்தையைப்பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத்தொந்தரவு செய்யாதீர்கள்
.



3 comments:

  1. நீங்க தமிழக முதல்வரை குறித்து சொல்லவில்லையே

    ReplyDelete
  2. குமரி எஸ். நீலகண்டன் said...

    பசுமைக்குள் விஷமேற பசுமை அச்சுறுத்தும் இனி பாம்பாக...
    11/11/11 1:06 AM

    ReplyDelete
  3. ராமலக்ஷ்மி said...

    அருமை.
    11/11/11 1:27 PM

    ReplyDelete