சிலந்தி வலையில்
சிதறித்தெளித்த
மழைத்துளி
சிறைப்பட்டுக்கிடந்த
சிலந்தியின் கால்களையும்
நனைத்திருந்தது ஈரம்.
சிதறித்தெளித்த
மழைத்துளி
சிறைப்பட்டுக்கிடந்த
சிலந்தியின் கால்களையும்
நனைத்திருந்தது ஈரம்.
குடித்துவிட்டுக்கீழே வைத்த
உள்ளிருப்பவை வெளித்தெரியும்
கண்ணாடிக்குவளையில்
அடியிலிருந்து மேலே
வந்த மீதமுள்ள நீர்
சிறு பாசிமணிகள் போல்
அதன் சுவரில்
ஒட்டிக்கொண்டிருந்தது
கண்ணாடிக்குள்ளும் ஈரம்.
உள்ளிருப்பவை வெளித்தெரியும்
கண்ணாடிக்குவளையில்
அடியிலிருந்து மேலே
வந்த மீதமுள்ள நீர்
சிறு பாசிமணிகள் போல்
அதன் சுவரில்
ஒட்டிக்கொண்டிருந்தது
கண்ணாடிக்குள்ளும் ஈரம்.
அடித்துப்பெய்த
மழையின் சாரல்கள்
என் ஜன்னல் கம்பிகளிலும்
தொக்கி நின்று
கொண்டிருக்கின்றன.
இரும்புக்கம்பிகளிலும் ஈரம்.
மழையின் சாரல்கள்
என் ஜன்னல் கம்பிகளிலும்
தொக்கி நின்று
கொண்டிருக்கின்றன.
இரும்புக்கம்பிகளிலும் ஈரம்.
அழகிய கவிதை
ReplyDeleteநன்றி கவிதை வீதி சௌந்தர்
ReplyDeleteதிண்ணையில் வெளியான அழகான ஈரமான கவிதைக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி நன்றி இராஜராஜேஸ்வரி ..!!
ReplyDeleteஅடித்துப்பெய்த
ReplyDeleteமழையின் சாரல்கள்
என் ஜன்னல் கம்பிகளிலும்
தொக்கி நின்று
கொண்டிருக்கின்றன.
இரும்புக்கம்பிகளிலும் ஈரம்.
மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ....
நன்றி அம்பாளடியாள் ..!
ReplyDelete