திண்ணை இணைய இதழில் [ ஞாயிறு நவம்பர்-7 ] வெளியான எனது கவிதை.
எதிர்பார்ப்புகள்
என் காதலியின்
எதிர்பார்ப்புகள்
அதிகம் ஒன்றுமில்லை..
எனக்கென
மட்டும் வாழ்வாயா ?
எனது
பாதுகாப்பை உறுதி செய்வாயா ?
எனக்காகப்
பரிந்து பேசுவாயா ?
என்னை
அவ்வப்போது சிரிக்க வைப்பாயா ?
என்னைப்
பிறர் முன்னில் அவமதிக்காமலிருப்பாயா ?
என்னை
உதாசீனம் செய்யாமலிருப்பாயா ?
என்னையும்
ஒரு சக உயிரென மதிப்பாயா ?
உன்னுடைய
துன்பங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வாயா ?
எனது
மகிழ்வுகளை ஆராதிப்பாயா ?
உனது
விருப்பத்துடன் என்னுடன் ஊடுவாயா ?
எனது
விருப்பத்துடன் என்னுடன் கூடுவாயா ?
இது போன்றவையே
அவள் என்னில் எதிர்பார்த்தவைகள்
என் கவிதைகளையல்ல....!
.
அட............ நல்லா இருக்கே........
ReplyDeleteதிண்ணையில் இடம் பிடித்ததர்க்கு வாழ்த்துக்கள்.......
நன்றி வழிப்போக்கன்..
ReplyDeleteஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
ReplyDeleteதமிழ்
ஆங்கிலம்