Sunday, November 15, 2020

வானம் வசப்படும்

 


சூரரைப்போற்று , நானும் பார்த்தேன். சூர்யாவைப் போற்று. அது தான் சரி படம் முழுக்க சத்யா’ கமல். தோற்றமும், ஒப்பனையும், தலைமுடி பாணியும், நடிப்புமென சூர்யா நகல் எடுத்திருக்கிறார்.பயோபிக் என்றால் அப்படியேதான் அட்சரம் பிசகாமல் எடுக்க வேணும் என்று அவசியமில்லை. கொஞ்சம் கற்பனை கலந்தால் தான் உணமையையும் கேட்க பார்க்கத் தோன்றும்.

நிறைய எழுதிவிட்டனர் அத்தனை பேரும். எல்லாரும் எழுதாத ஒன்றை எழுத வேணுமெனில் , சூர்யாவின் அப்பா யார்.? வாத்தி ரெய்டுடா. அதே போல அந்த காளி கேரக்டர், அற்புதமான பொம்மி வலுவான திரைக்கதை. சொல்லுவதில் எந்த குழப்பமும் இல்லை. கூடவேயிருந்த அந்த நண்பர் யார்,? மல்லையாவின் மீட்டிங்கிற்குப்பிறகு திருகி வெளியேறும் நிலையில் சூர்யாவை நீயெல்லாம் என்னடா நடிக்கிற என்று கேட்கிறார். பொம்மி எப்போதும் புறமுதுகு காட்டுகிறார். சூர்யா ஒவ்வொரு முறை தோற்று வரும்போதும். அதை உணர்த்த. ...அப்படித்தான் நான் பார்க்கிறேன். 

 

அதேபோல அவசரமான ஒரு ஃபோன் காலில் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும் சூர்யா, அபர்ணாவை அப்படியே விட்டு விட்டு செல்கிறார். சூழல் கருதி மன்னிக்கலாமென நினைக்கும் போது , குற்ற உணர்வில் சூர்யா திரும்பிப் பார்க்கிறார், பொம்மி ‘இல்ல நான் போய்க்கிறேன் ஆட்டோ பிடித்துக் கொண்டு என்று. அவசரமா போறேன் நீ போய்க்கொ என்று என்று சூர்யா சொல்லவில்லை அப்படி சொல்லி யிருந்தால் அது இரண்டு பேரின் கேரக்டர்களுக்கு பொருந்தியிருக்காது இதுதான் ரியாலிட்டி. நல்ல புரிதல் இருக்கிறது தம்பதிகளிடம். இது இருந்தால் போதும் வாழ்ந்து விடலாம் எவரும்.

எத்தனையோ பேர் பொண்டாட்டிய உக்காத்தி வெச்சு சோறு போட்றான், அது மாதிரி புருஷனுக்கு நீ சோறு போடேன். ஆஹா. வசனம் விஜயகுமார் – அவரின் உறியடி சொல்லியடித்த படம் யாரும் கண்டு கொள்ளவேயில்லை.


 டிக்கெட்டிற்கு பணமில்லை என்ற காட்சி அமைத்ததை என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு ஃபைட்டர் பைலட், அவர்களுக்கென சில இட ஒதுக்கீடுகள் இருக்கக்கூடும். அதிலும் அதே துறையிலிருப்பவர். அப்பாவை முறுக்கி கொண்டு இருந்தவனை அவர் மகனைப்பற்றி என்ன நினைத்திருந்தார் என்பதை ஊர்வசி காகிதங்களை சூர்யா மீது விசிறியடிக்கும் காட்சிக்கென, அந்த அழுத்தத்துக்கென அமைத்ததிற்கான அடிப்படையாகத் தான் பார்க்கவியலும். #வானம்வசப்படும்

 


 

No comments:

Post a Comment