’ஆஸ்டின் இல்லம்’னு ஒரு
பெருங்கதை எழுதீருந்தார் அப்ப வந்த ‘இந்தியா டுடே’யில் சுஜாதா. அது தான் இப்பத்தைய வடிவம் கடக்குட்டீ சிங்கம்!
கிட்டத்தட்ட ஒரு பெரும் கிராமத்தின் ஆட்கள் வீட்டுக்குள்.அத்தனை கதா பாத்திரங்கள், அத்தனை பெயர்கள், அவர்களின் உறவுமுறை எங்கும் பிசகாது அத்தனை உறவுமுறைகளையும் தெளிவாக உச்சரிக்கும்
அத்தனை பாத்திரங்களும். அதுல வர்ற ஒரு சின்னப்பையன் கேப்பான்
சக வயது பெண்டுகள்ட்ட ”எஃப்’ல ஆரம்பிச்சு
‘கே’ல முடியற இங்கிலீஷ் வார்த்தை நாலு சொல்லு பாப்பம்னு.அது மட்டும் தெளிவா எனக்கு ஞாபகம் இருக்கு ஹெவிலீ இன்ஸ்பையர்டுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்
பாண்டிராசு.
வயலும் வாழ்வும், விவசாயின்னு பைக்ல எழுதி வெச்சுக்கிட்டு ஊர் சுத்துவது, காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல கதா காலட்சேபம் நடத்துறது எல்லாம் ஜிகினா வொர்க். எங்க ‘விவசாயீஈ விவசாயீஈன்னு பாடீருவாரோன்னு ஒரு பயம். அது மாதிரி எதுவும் இல்லை :) சொல்லப்போனா கார்த்திக்கி அழவே தெரியலை. மூஞ்சைப்பாக்கவே சகிக்கலை. அந்த ரேக்ளா ரேஸ் யுகங்கள் கடந்தும் பயணிக்கும் ‘பென் ஹர்’. எத்தனை ஈரோயினி, யப்பாப்பா எல்லோருக்கும் அழகிய தமிழ்ப்பெயர்கள். கண்ணுக்கு இனியாளா’ன்னு ஒரு இடைவெளி விட்டு மெளனிகா கேக்கும் போது பக்குனு சிரிப்பு வருது. கண்ணுக்’கினியா’ கல்ச்சுரல்ஸ்ல கைல பறை வைத்துக்கொண்டு அடித்து தாளமிட்டு ஆடுகிறார். எதோ சேட்டு வீட்டுப்பொண்ணுஹ நம்மூர் கிரமத்திருவிழாவ வாயப்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பது போல ஒரு ஃபீலிங்கி.ஹிஹி.. கொஞ்சமும் பொருந்தவில்லை.
சத்யராஜ் அப்படியே ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’ பெரியவர்! அப்பாகிட்ட காதலிய காட்டீட்டு அப்பால லவ்ஸ் உட்றதெல்லாம் புதுசு கண்ணா :) ஆமா,இந்த எதிரி எதுக்கு இந்தப்படத்துக்கு? தேவையேயில்லையே ..?! ஹ்ம்..காட்டுல
போயி கருவேலத்த அறுப்பாராம். அப்பால கார்த்திட்ட அடிவாங்கி எங்க
ஓடுனார்னே தெரியாமப் போவாராம்.அடக்கருமமே.. அதே மாதிரி இம்மானு, இருக்க எடமே தெரியல.! என்ன பாட்டு ஒண்ணும் வெளங்க இல்ல!
ரொம்ப நாளைக்கி பிறகு வந்த பாண்டிராசுக்கு ஒரு சிறு வெற்றி இதன் மூலம் கிடைக்கலாம். பெண்கள் மனது வைத்தால்.எப்பவும் தமிழப்பய ’செண்ட்டிமெண்டல் இடியட்’ தானே அதனால,! ஹிஹி இந்தக் காலத்துல இம்மாம்பெரிய பெத்த ஃபேமிலீல்லாம் ஏதுங்ணா.? கண்ணாலமே பண்ணாத சும்மானாச்சுக்கும் தத்து எடுத்துக்கிற கலாச்சாரம் தான் வளந்துகெடக்கு. என்னவோ ஒரு தெலுங்கு படம் பாக்றாமேரீயே ஒரு ஃபீலிங்கி ஒஅடுது படம் முழுக்க. ஆஹா அதானே பாத்தேன் இதே படம் உள்ளூர் விநாயகா தேட்டர்ல ‘சின்னபாபு’ன்னு தெலுகுலோ ஒடுதூங்ணா :)
No comments:
Post a Comment