Saturday, June 30, 2018

இனியும் அழக்கண்ணீர் இல்லை




ஏரியானா க்ராண்டிசின்னப்புள்ளதான பாடுதுன்னு சரியாக்கவனிக்காம விட்டது தவறு. இந்தப்பாடல் கேளுங்க. சம்திங் சைக்கடலிக். No Tears Left to Cry’ அற்புதமான பாடல். இயல்பாகவே இந்த பெண்களுக்கு Yodellingக்கு பஞ்சமே இல்லை அவர்களின் குரலில். இதுல ஹைட்டாக கேக்கணும்னா ‘Body Guard’ படத்துல விட்னி ஹூஸ்டன் பாடின ‘will alwas love you’ பாடலைக்கேளுங்கள். இவ்வளவு எனர்ஜி எங்கருந்து வருது. இத்தனை இழுவை. தொடர்ந்தும் பாடிக்கொண்டே இருப்பார். நம்மூர்ல ஆண்ட்ரியாவ மட்டும் சொல்லலாம். கமல் மகள் முயற்சி தான் செய்கிறார். இன்றைக்கும் ஒரு ப்ளைன் வெஸ்ட்டர்ன் பாடிவிட இயலவில்லை. தம்பி அநிருத்தின் இசையில்வேதாளமில்முயற்சி தான் செய்தார். கமல் படம் மன்மதன் அம்புவில் பாடியிருப்பார் ஒரு பாடல் ஆண்ட்ரியா. Whos the Hero Whos the Hero !ன்னு
:)
 
பரிமாணங்களைக்கடந்த இசை காணொலி உருவாக்கம். எல்லாரும் செய்தது தான். க்றிஸ்டஃபர் நோலன் இதுல கில்லாடி. இன்ஸெப்ஷன்லருந்து கொஞ்சம் இன்ஸ்பிரேஷன். நம்மூர் புலி படத்துல கூட ஸ்ரீதேவி அப்படியே தூண் மேல குறுக்கால நடப்பார். அதுல கொஞ்சம் சுட்டு இந்த இசைக் காணொலியை உருவாக்கியிருப்பர் போலும்.இந்தப்பத்தி வரிகள் வரும்பொது பாடுவதைக்கேளுங்க. ஆஹா. அற்புதமாக எக்கோவுடன் அடிச்சு தூக்கிட்டுப்போகுது வயசுக்கு மீறின குரல். அளவெடுத்து தைத்தது போல பிசிறில்லாத குரல் உச்சத்திலும்,மத்தியிலும் ஒலிக்கிறது.

Right now, I'm in a state of mind
I wanna be in, like, all the time
Ain't got no tears left to cry
Oh, I just want you to come with me
We're on another mentality
Ain't got no tears left to cry (so don't cry)

பாடல் வரிகளெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் காதல் ஏக்கம் தான் மயக்கந்தான், 18 வயசுப்புள்ள என்னாதன் பாடும் இதத்தான் பாடும் ஹீஹிஆரம்பத்தில ஹார்மனியோடு தொடங்கி , எதோ சர்ச் பாட்டு, பள்ளிப்பாட்டு மேரி ஆரம்பித்து ஆமேல எல்லாமாச்சேர்ந்து அமுக்குதுய்யா :) 

No comments:

Post a Comment