Sunday, June 10, 2018

வேங்க மவன்





'வியட்நாம் காலனி'ன்னு ஒரு படம் , பிரபு கவுண்டமணில்லாம் நடிச்சது. அதான் இப்ப காலா! அதேதான் 'அவ்தார்'னு ஒரு பிரம்மாண்ட இங்கீலீஷ் படமாவும் வந்துச்சூ. நிலமே எங்கள் உரிமைன்னு அங்க ஒரு பார்ப்பனர் போராடுவார். இங்க தாழ்ந்த இனத்தை சார்ந்த ரவுடி போராட்றார் அவ்வளவுதான் வித்தியாசம். என்னைக்கேட்டால் ரஞ்சித்துக்கு சரக்கு தீர்ந்திருச்சுன்னுதான் சொல்வேன். இனியும் தொடர்ந்து வணிக நாயகர்களுக்காக படம் பண்ணி'க்கொண்டு இருந்தால் அதோகதிதான். இப்படியாப்பட்ட பட வரிசையில் இது ரெண்டு லெட்சத்து எழுபத்தை யாந்திரத்து முன்னூத்து முப்பதாவது படம், நில அபகரிப்பு எதுத்து போராட்றது, எதிரிங்கள்லாம் உள்ளூர் போலீஸுக்கு காசு குடுத்து தன்னக்கட்டுவது இதெல்லாம் என்னய்யா புதுசு ??
கபாலிய வளைச்சி உள்ளுர் கதையாக்கிட்டா புதுசாயிருமா ?!கெரகம். சோபாசக்தி பெரு விமரிசையா எழுதீட்டார்,அரைமென்டல் வசனமெல்லாம் இல்லைன்னு. ஏன் குசினி ஜரீனா கிட்ட இடுப்பில கை வெச்சுக்கிட்டு 'முழூ ரவுடித்தனத்த' இனிமே தான் பாக்கபோறன்னு.சொல்வார். அது ஒரு தடவ சொன்னா ஒம்போது தடவ சொன்னமேரிய விட இது பஞ்சு டயலாக்குங்ணா..வேணா இரும்பு டயலக்குன்னு கூட வெச்சிக்கலாம். வேங்க மவன் ஒத்தைல நிக்கேன்லாம் அரை மென்டல் வசனத்துல சேராதாங்ணா? என்னகேட்டா இதெல்லாம் முழுமென்டல் வசனம் தான்!ஓட்டை விலீஸ் ஜீப்பை எடுத்து அப்பப்ப உதார் காட்றார் கரிகாலன்.
இதுல காலா காலத்துல கட்டைல போற வயசில எம்பெத்தெட்டு காதலிஹ வேற. ஆனாலும் ஹூமா குரைசி 'கரிகாலன்'ன்னு கூப்டறப்ப குழையத்தான்யா செய்யுது. அந்த ஓட்டல் சந்திப்புல ஹூமா,காலாவின் கையை தடவுறார் பழைய ஞாபகத்துல. ஒரு கட்டத்துக்கு மேல போகும் போது இல்ல இனிமே வேணாம்னு ரவுடி காலா சொல்ற முகபாவம், பத்து நாளா கக்கூஸே போவாம கான்ஸ்டிப்பேஷன்ல இருந்தா மேரி ஒரு எக்ஸ்ப்ரெஷ்ன். தேவையா இது ? சரி இப்டி ஒரு காதலி இருந்ததை ஏன் குலவிளக்குகிட்ட மறைக்கணும் ? என் குல சாமிய்யா செல்வி என்று மருகும் காலா 'செல்வி'யிடம் இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்ததை மறைப்பாரா?. அப்டிக்கும் செல்வி இவரை மட்டுமே கடவுள்னு நினைச்சு வாழ்ந்திக்கிட்டிருக்கும் பொண்ணு. எல்லாப்பயலுக்கும் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கத்தான்யா செய்யும்? மறைக்கத்தான் செய்வான். இருந்தாலும் உருகி மருகும் காலா இதை குலசாமியிடம் மறைப்பதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை என்னால். அப்படிக்கும் ஹூமா உள் நுழைந்தவுடன் இருவரின் கண் ஜாடைகளை கண்டு புரிந்து கொண்டு தாமாக , சுற்றியிருக்கும் எல்லோரையும் விலகிச்செல்ல பணிக்கும் அன்புச்செல்வியிடமா இப்படி ஒரு துரோகத்தை செய்தாய் காலா ?? உன்னை நாத்திகன் கூட மன்னிக்கமாட்டான் காலா..கரி காலா..!

சரி எனக்கு ஒண்ணு புரியவேயில்ல. ஹரிதாதா மதக்கலவரைத்த தூண்டி ஹூமா/காலா நிக்கா;வை நிறுத்தறார் சரி. அப்பால இவ்வளவு திமிரும் அடாவடியுமாக இருக்கும் காலா ஹூமாவை இழுத்துக்கொண்டு போய் தாலியக்கட்ட வேண்டிதுதானே ? ஏன் செய்யல?! ஹூமா பட்டப்படிப்புக்காக வெளிநாடு போறாராம். அப்பால அங்கயே நிக்கா பண்ணிண்டு ஆப்ரிக்கா போறாராம். நல்ல கதையொட்டம்ங்ணா!  கபாலீல சொந்தப்பொண்டாட்டிய தேடி கடல் கடந்து வந்து காத்துக்கெடந்து தரிசிக்கிறார், இங்க கள்ளத்தனமா பொண்டாட்டிக்கு தெரியாம நள்ளிரவில் பைக்கில பின்னால ஏறிக்கொண்டு முன்னாள் காதலி ஜரீனா'வை சந்திக்கிறார் காலா.

படம் முழுக்க செட் தெள்ளத்தெளிவாகத்தெரிகிறது. தாராவி நானும் போயிருக்கேன், கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகள் மும்பையில் தங்கி வேலை பார்த்தவன் நான். காலா'வின் வீடு எனக்காட்டும் இடம் முன்பக்கம் விசாலமான போர்ட்டிக்கோ, அத்தனை பெரிய வீடு இப்படியெல்லாம் இருக்க வாய்ப்பேயில்லை. குறுக்கு மறுக்கு சந்துகள், சந்துகளினூடே வாய்க்கால் சாக்கடைகள், இருமருங்கும் துணி காயப்போட்டு அந்த முட்டுச்சந்து வழியே ஒற்றையடிப்பாதை போல ஒருவர் கூட நடக்கவியலாத இடம் அது. அதில் இத்தாதண்டி வீடும் காரும், போர்ட்டிக்கோ'வும் கொஞ்சம் கூட பொருந்தவில்லை.பாலத்தின் சண்டை,சம்பத்தை கொலை செய்வது எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியென தெரியும் செட்டூ. வேஸ்ட்.பேசாம பக்கத்து ஸ்க்ரீன்லயே 'ஜூராஸிக் பார்க் ஃபாலன் கிங்டம்' போட்ருந்தான் அதுக்குப்போயிருக்கலாம், கொஞ்சம் நம்புற மேரியாவது சிஜி இருந்திருக்கும்.



சாயாஜி ஷின்டே, நாநா பட்டேகர் இவாள்லாம் ஏன் தமிழ இப்டி பேஸ்ரா? யாராச்சும் கேக்கப்பிடாதோ?..இதுல சாயாஜி இங்க 'பாரதியாரா' வேற நடித்தார் பின்னரும் நேரடித்தமிழ்ப்படங்களில் தமிழில் பேசி நடிக்கவும் செய்தார். அவரா இப்படி பேசுவது ? நாநா பட்டெகருக்கும் இது இரண்டாவது படமென நினைக்கிறேன் தமிழ்ல. சிங்கத்தக்கூட்டி வந்து செல்லுல அடைச்சா மேரி இருக்கு. யாராலும் நெருங்கமுடியாத நடிப்பை அளிப்பார். 'தோடா ஸா ருமானி ஹோஜாயே' பாருங்க. அப்புறம் இந்த 'பாம்பே ட்ரீம்ஸ்'னு நினைக்கிறேன் அந்த படத்துல சேரிகளில் போதை மருந்து விற்பவராக நடித்திருப்பார். அப்ப்பா ...செம நடிப்பு. இங்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ்ச்சொற்களை மட்டுமே பேச வைத்துவிட்டு எல்லாம் மராத்தியில் என்று ஆக்கியிருந்தால் இன்னமும் ஆதென்டிக்காக இருந்திருக்கும். சம்பவம் நடத்துவது எல்லாம் எல்லா கேங்ஸ்ட்டர் படத்துலயும் வர்றது தானே? போஸ்ட்டர்ல கல்லவிட்டு எறிஞ்சவன தூக்கில தொங்கவிட்றது. வீட்டுக்கு தீ வெக்கிறது, வேணுமின்னே போலீஸத்தூண்டி விட்டு கலவரம் பண்றது எல்லாம் வழக்கமான க்ளீட்ஷே! சரி எதோ மெட்ராஸ் எடுத்த ரஞ்சித் 'நீட்ஷெ' பத்தீல்லாம் பேசீருப்பார்னு போனா எல்லாம் ஒரே க்ளீட்ஷே :)

ஆளாளுக்கு குறியீடு கிறீயீடுன்னு என்னென்னமோ எழுதுறாங்யள். ஹிட்ச்காக் ஒரு படத்தில் ஒரு டீ கப்பை எடுக்க மறந்து போய் காட்சியில் பதிவாகிவிடுகிறது, அதை எடிட்டிங்கிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். விமர்சகர்கள் அதற்கென ஆயிரத்தெட்டு குறீயீடு இட்லி ஈடு கண்டு பிடித்து ஹிட்காக்கிடமே சொன்னார்கள். அப்படி பல குறியீடுகளை என்னால் அடுக்க முடியும் இந்த ரவுடி ராஜ்யத்தில். லெனின் எப்பவுமே சிவப்பு சட்டையில் தான் வருகிறார். காலா எப்பவுமே கருப்பு சட்டையில் தான் வருகிறார். ஹரிதாதா எப்பவுமே வெள்ளைச்சட்டையில் தான் வருகிறார். எண்ணமெல்லாம் வண்ணமம்மா.... இதெல்லாம் குறியீடு இல்லீங்ளாண்ணா?! வெள்ளாவி வெக்கிறவனுக்குத்தான் இந்த குறியீடெல்லாம் அவசியம்..இல்லைன்னா உருப்படி துணில்லாம்  எடம் மாறிப் போயிரும்லா...ஹிஹி...பெண்களை எந்த இடத்திலும் இழிநிலையில் படம் பேசவில்லை தான் அப்படிப்பட்ட காட்சிகளும் இங்கு இல்லை தான். இதே ரஞ்சித்தின் 'அட்டக்கத்தி'யில் நந்திதாவின் தோழி ஓடும் பஸ்ஸில என்ன செய்கிறார்னு மட்டும் எனக்குச்சொல்லுங்க தினேஷோட?! 



பொழைக்கப்போன எடத்துல அடக்கஒடுக்கமா இருந்தமா, வேலைகீலையப்பாத்தமா அப்டி இப்டி சொத்து பத்த சேத்தமா, அப்டிய்யே நம்ம ஊர் பக்கம் ஒதுங்கினமான்னு இல்லாம 'நிலம் உரிமை'ன்னு குரல் எழுப்பினா எவன்தான் பொறுத்துக்குவான், உள்ளூர்க்காரன்லாம் முள்ளவிட்டு சாத்தமாட்டான் ? நம்ம ஐ.ட்டீ காரனுகளையே எடுத்துக்கலாம். சிலிக்கான் வேலிக்கு பொழைக்கப்போய் காசக்கீசப்பாத்துட்டு,(எதோ மோடி புண்ணியத்துல இன்னும் ஐ என் ஆர் :) டாலருக்கு நூறு ரூவா ஆகியிருச்சின்னா,) ஊர்ப்பக்கம் வந்து தோட்டந்தொறவ வாங்கிப்போட்டு காலா காலத்துல செட்டல் ஆகிறதப்பாக்காம, "சில்லிக்கான் வேலி எங்க ஊர் மேரீ" ன்னு சொல்லி உரிமை நிலம்னு போராட்னான்னு வெச்சுக்க. அப்டீல்லாம் பண்ண மாட்டாங்ய..இருந்தாலும் ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவோம், வெள்ளக்காரன் விடுவானா ? நியூக்ளீயர் பாமே போட்டு தரமட்டமா ஆக்கிட்டுத்தான் விடுவான். உண்டா இல்லியா ஞாயம்மாரே சொல்லுங்க. மண்ணின் மைந்தர்கள் விடமாட்டான்கள்னு சொல்ல வர்றேன். எழுபது எண்பதுகளில் தாக்கரே கோஷ்ட்டி தென்னிந்தியர்களை விரட்டி விரட்டி வெட்டிக்கொன்று கூறு போட்டது இதற்காகத்தான். அங்க போய் இருந்துக்கிட்டு என் நிலம் என் உரிமைன்னு எப்டி போராட்றது? நான் இந்தியன் எனக்கு எல்லா இடத்துலயும் உரிமை இருக்குன்னு பெங்களூர்லயே சொல்லமுடியாது. தூத்துக்குடியிலயே இருக்க முடிவதில்லை. என் உரிமைன்னு..இதுல வெளி மாநிலத்துல போயி??

இவ்வளவு களேபரத்துல அங்கங்க ஹீனமான குரலாக ஒலிக்கும் சந்தோஷ் நாராயண் இசை. நாநா பட்டேகருக்கென உருவாக்கியிருக்கும் தீம் இசை சால பாக உந்தி, வழக்கமான ஹிந்து மத ஆலயங்களில் ஒலிக்கும் அந்த கனமான மணியோசையுடன் , சலங்கையொலியும் பின்னர் பவுத்தமத ஆலயங்களில் ஒலிக்கும் சிங்கியொலியும், கொஞ்சம் இலங்கை ஆலயங்களில் ஒலிப்பதைப்போன்ற ஒலி புரட்டி எடுக்கிறது அந்த வேய்ங்குழலுடன். காடுகளில் திரியும் மாடுகளில் அவ்வப்போது  திரும்பும்போது கணங்'கென்று ஒலிக்கும் அது போல நெஞ்சை விட்டகலாத கருவிசை. சப்பாஷ் சந்தோஷ். பாடல்களை சரிவரப்பயன்படுத்தவேயில்லை ரஞ்சித் அப்படியே டீல்ல விட்டுட்டார். இழப்பு சந்தோஷுக்குத்தான். கண்ணம்மாவை விரிவுபடுத்தி முக்கியபாடலாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக், ஓல்ட் ஃப்ளேம் எப்பவுமே ஸ்பெஷல் தான். இடையிடையே ஒலிக்கும் ஹிப் ஹாப்'ராப் பாடல்களை ஏன் முழுதுமாக ஒலிக்கவிடவில்லை, நேரங்கருதி சுருக்கிவிட்டார்களா ? 'வாடி என் தங்கச்சிலை'  அப்படியே 'இத்துனூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா இல்ல இங்கிலீஷு முத்ததுல" பாட்டுதான். கொஞ்சம் கவ்வாலி கிவ்வாலில்லாம் விட்டு இடையில மராத்தி லாவணில்லாம் போட்டு புதுச்சரக்காக்கி இருக்கிறார். கேரியர் பெஸ்ட் 'நிலமே எங்கள் உரிமை' தான்!




வெளியே நிலைப்பாடு வேற, உள்ளே சினிமாவுக்கென நிலைப்பாடு வேறே என்று இருக்கும் ரசினி , சத்தியமாக அடிச்சு சொல்லலாம் இவர் பக்கா அரசியல்வாதி தான்யா :)  பெரியார் படத்துக்கென ராசைய்யா இசையமைக்க மறுத்ததை நினைவு கூறலாம் இங்கு. துப்பாக்கில சுட்டும் எப்படி காலா கடையில் வர்றார்?,ஒவ்வொருத்தனும் காலாதாண்டே அந்த தாராவில. அதான்!

ரஜினி இனிமேலும் இப்படி கேங்ஸ்டர், டான் எல்லாம் விட்டுவிட்டு 'ஆறிலிருந்து அறுபது வரை', 'தப்புத்தாளங்கள்,' புவனா ஒரு கேள்விக்குறி, இப்படியான படங்களில் நடித்தால் மெச்சலாம். இல்லையெனில் பச்சன் போல 'பிங்க்' படத்தில் வயதுக்கேற்ற வேஷம் கட்டி ஆடலாம்! ரஞ்சித் இனிமேலும் வணிக நாயகர்களை கட்டி அழாமல், அட்டக்கத்தி போல புதுமுகங்களை வைத்துக்கொண்டே சாதிக்கலாம்.



3 comments:

  1. காழ்ப்புணர்ச்சியில் என்னென்னவோ எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்க பேரோட கருத்தை பதிவு செய்தீங்கன்னா இன்னமும் நல்லாருக்கும் …

      Delete
  2. ***ரஜினி இனிமேலும் இப்படி கேங்ஸ்டர், டான் எல்லாம் விட்டுவிட்டு 'ஆறிலிருந்து அறுபது வரை', 'தப்புத்தாளங்கள்,' புவனா ஒரு கேள்விக்குறி, இப்படியான படங்களில் நடித்தால் மெச்சலாம். ***

    வேங்க மவனை விகடன், ரெடிஃப் எல்லாரும் மெச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. நீர் ஏன் ரஜினி படம் பார்க்க போயிட்டு எனக்கு இப்படித்தான் படம் இருக்கனூம்னு சின்னத்தனமா அடம் பிடிச்சுக்கிட்டு/? அடுத்த படம் வரும்போது ஏதாவது ஜல்லிக்கட்டு அல்லது ஸ்எர்லைட்ல போயி போராடி சுடுபட்டு சாவும்!

    ReplyDelete