இந்தக்குழுவின்
பாடல்கள் இப்போது அத்தனை
எடுபட மறுக்கிறது.
எப்போது
கேமிலா கேபலா நீங்கினாரோ
அப்போதிலிருந்தே கொஞ்சம்
டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது,
இப்போ
அவர் 'crying in the
club' என்று
அழப்போய் விட்டார் :)
, இந்தப்பாடலில்
இடம்பெறாமல் போனதற்கு
சரியானபதில் சொல்லாது,பரவால்ல
அவங்க ஆல்பம் நல்லா வந்தா
போதும் என்று மழுப்பியிருக்கிறார்.
இப்போது
வெளிவந்திருக்கும் 'டவுன்'
பாடல்
உண்மையிலேயே டவுன் தான் :).
Work from Home போன்றே
இருப்பது க்ளீஷே!
ஒரே மாதிரியான பாணியில் பாடல்கள் அமைப்பது என்ற வியாதி பிடித்தாட்டுகிறது. பாப்பில் ஆரம்பித்து பின்னர் கருப்பின ஒரிஜினல்களை வைத்து ராப்'பில் பாடவத்து பாடல் உருவாக்குவது என்ற பாணி சலிக்கிறது அம்மணிகளே. இந்த குழு மட்டுமல்ல பெரும்பாலும் இதே பாணியில் அத்தனை பாடல்களும் தொடர்ந்தும் வருவது சீக்கு ! ஐவரானோம் என்றிருந்து விட்டு கேமிலா நீங்கிய பின்னும் குழுவின் பெயரை இன்னமும் மாற்றாது ஃபிஃப்த் ஹார்மனி என்றே வைத்திருப்பதை மட்டும் வேணுமானால் மெச்சிக்கொள்ளலாம். Its Just a Fourth Harmony :) #downdown
.
No comments:
Post a Comment