Thursday, December 22, 2016

அழகிய சூடான பூவே


அழகிய சூடான பூவே - ரொம்ப நீட்டான பாடல். ட்ரெம்ப்பெட்டும்/சாக்ஸும், வழக்கமான பெர்குஷனும் வைத்துக்கொண்டு ஜாஸில் இசைத்திருக்கிறார். இப்பதான் அழகா ஒரு ஜாஸ் ஒண்ணு போட்ருந்தார் 'அக்கம் பக்கம் பார்'னு .இருந்தாலும் மக்களுக்கு போரடிக்கும் இதைக்கேட்டு. 02:44-ல் ஆரம்பிக்கும் அந்த வயலின் இனிமை. விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இந்தப்பாடல் டூயட்டா...கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருக்குதுங்ணா.. :) இருப்பினும் குரல்கள் புதிது! சூப்பர் சிங்கர்லருந்து யாரோ ரெண்டு பேரப்புடிச்சுக்கொண்டு வந்து பாடவெச்சமாதிரி இருக்கு :) ஹாரிஸ் ஸ்டைல்ல போட்ட மாதிரி இருக்கு. படம் பாக்கப்போனா எங்கூர்ல அதுவரைக்கும் பீகாரில் வெள்ளம் பிரதம மந்திரி போனார் கொல்லம்னு  போட்டு அறுத்துத் தள்ளிட்டு,மெயின் பிக்சர் போடும்போது ஒரு ம்யூஸீக் போடுவாங்ய சாந்தி தியேட்டர்ல அது மாதிரி இருக்கு பாட்டு ஆரம்ப இசை.

நில்லாயோ - வயலினிசையுடன் துவங்கும் பாடல் , கொஞ்சம் பாப்' மற்றும் ஜாஸ் கலவை.வெகு நாட்களுக்குப்பிறகு இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைத்த மெலடி.! எலெக்ட்ரானிக் பாக்ஸ்களை காண இயலவில்லை. அருமை! பெண்பால் வெயிலோ?! வெளியூர் நிலவோ? பதினாயிரம் ஆண்டுகள் அகவை ஆயினும் இன்னும் இளங்கன்னியாக உலவும் தமிழ் வைரமுத்துவின் வரிகளில்..ஆஹா! கொஞ்சம் முன்னால 'நீர்ப்பறவை'யில்  ரகுநந்தன் இசைத்திருந்தார் 'பற பறவென பறவை ஒன்று' என! ஏறக்குறைய அதேதான். எனினும் இனிமையாக இருக்கிறது இதுபோன்ற இசை கேட்பதற்கு. 'வெரசாப் போகயில'ன்னு இமான் போடிருந்தார் விஜய்க்கென ஜில்லாவில. இப்டி ஏகத்துக்கு க்ளீஷே கிழிஞ்சு தொங்குது! இருப்பினும் ஹரிச்சரன் குரல் பாடலைக்கேட்க வைக்கத்தான் செய்கிறது!


பட்டையக்கெளப்பு - இதெல்லாம் எண்பதுகளில் ராசைய்யா இடதுகையாலயே போட்ட பாடல்களப்பா சலிக்கிறது சநா. பாப்பா பாப்பா - டப்பாங்குத்து! வேறொண்ணுமில்லை! இதுல விஜய் வேற பாடீருக்கார். ஹாரீஸ் கூட நல்ல பாடல் கொடுத்திருந்தார் விஜய்க்கு. கூகிள்ல தேடிப்பாக்காமலேயே கேக்கலாம் அந்தப்பாடலை. விஜய் ஆன்டனி மாதிரி ஒரு நாக்க மூக்கா, இல்ல தம்பி அநிருத் 'செல்ஃபி புள்ள' மாதிரி போட்ருக்க வேணாமா சநா. போரடிக்குதூங்ணா.


வர்லாம் வர்லாம் வா - காபாலீஈடாஆ நெருப்புடாஆ ப்ளாக்யிரஸம்டாஆ ..விட்ருங்க சநா போதும் ..இதே மாதிரி 'கொடி'ல தனுஷ்க்காகவும் ஒண்ணு போட்டு எதுக்கு இதெல்லாம்?! ஹ்ம்...இப்ப விஜய்க்காக ஒண்ணு! புதிய இசையாகத் தோன்றவில்லை.பழகிய இசை! எனக்கென்னவோ இது ரெட்ரொ'வாக இசைத்தது போலவே தோன்றுகிறது அரைத்த மாவுக்குப் பேர்தான் ரெட்ரோ'வா ?!..ஹிஹி .... 


 .


No comments:

Post a Comment