Wednesday, August 27, 2014

துளிப்பாக்கள்



யாரும் இறங்கவும்
ஏறவும் வேண்டியதில்லை
பரிசலும் ஆறும்
இடைவிடாது
ஆடிக்கொண்டுதானிருக்கிறது

**
என்னுடன் பயணிக்கும்
யாருக்கும் என்னுடன் பேச
ஏதோ ஒன்று இருக்கிறது

**

என் மதத்தில்
தண்டிக்கவியலாத கடவுளை
அடுத்த மதத்தில்
தண்டிக்கலாமென்றிருக்கிறேன்

**
உன்னைக்கண்டால்
கடவுள்களுக்கும்
சொப்னஸ்கலிதம் நேரும்

**
கூட்டுப்புழுக்காலத்தில்
அனுப்பிய செய்தி
வண்ணத்துப்பூச்சியின்
காலம் வரை வந்து சேரவில்லை

**

மூங்கில் துளைகளைப்புணரும் காற்று
இசைக்குழந்தையை
உடனே பெற்றெடுக்கிறது

**

பென்சில் சீவும்போது
கிளம்பிய வாசம்
மரம் கடைசியாகத்
தக்கவைத்துக்கொண்டது

**

ஏணியிலும்
முதற்படிக்கே
துயரம் அதிகம்.

***




  .

4 comments:

  1. வணக்கம்
    மலைகள் இதழில் தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் கவிதை அட்டகாசமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அழகிய அர்த்தம் நிறைந்த துளிப்பாக்கள்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர் :)

    ReplyDelete