மெகா சீரியல் கில்லர் - இரண்டாம் பகுதி
“பாஸ் போச்சு பாஸ், எல்லாமே போச்சு,அடுத்து நம்ம ரெண்டு பேர் தான்,
அது சரி இந்த பெங்காலிக்குட்டிய எங்க புடிச்சீங்க..? பாஸ், பேசாம நம்ம கிட்ட வேலைக்கு சேர்த்துக்கலாம்..யாருக்குமே புரியாத சத்யஜித்ரே படத்தை தெளிவா புரியவெச்சுடுவாங்க..” ”டேய் அவங்களுக்கு தமிழ்
தெரியும் “ என்றான் கணேஷ்.அடுத்த அறையிலிருந்த சைக்கோஸிஸ்டரிடம் ஏதோ ஒரு
அதீத அமைதி, எப்பவுமே யாருமே பாக்க இயலாத என்னவோ ஒண்ணூமே நடக்காத
மாதிரி.சும்மா அவளிடம் ஒப்புக்கு ஏதேதோ கேள்விகள் கேட்டுவைத்து
விட்டு வந்தான் வஸந்த்.
“பாஸ் எனக்கு என்னவோ அந்த ஸைக்கோ ஸிஸ்டர் மேல தான் பாஸ் சந்தேகமாயிருக்கு.புருஷன் ஏதோ கோயிலுக்கு வேண்டிக்கிட்ட மாதிரி
ஊர்ல இருக்கிற பெயின்ட்டெல்லாம் பூசிக்கிட்டு செத்துக்கெடக்கான், இவ என்னவோ ஒண்ணுமே நடக்காத மாதிரி ஒக்காந்திருக்கா பாஸ்.செமக்கிராதகியா இருப்பா போலருக்கு , இவ மேல ஒரு கண்ணு
வெக்கணும் பாஸ். “ஒனக்கு எல்லார்மேலயும் தாண்டா கண்ணு “ என்றான் கணேஷ்.
காலையில் நேரே சீஃப் மீட்டிங்கிற்கு
போய் நின்றது கார். ‘ம்…என்ன பண்ணிட்ருக்கீங்க..? பழய நம்பியார் பாணியிலேயே , வஸந்த் சொன்ன மாதிரியே கொஞ்சம் மப்பு அடித்திருந்தது போல கேட்டார்.
“பஸ் ஸ்டாண்ட் , ரெயில்வே ஸ்டேஷன் எல்லாத்துலயும் மஃப்டில நிக்க
வெச்சிருக்கோம்.அவன் ஃபோட்டோவ கையில வெச்சு சுத்திக்கிட்டு இருக்காங்க..சந்தேகப்படும் படியா யார் இருந்தாலும் உடனடியா அரெஸ்ட் பண்ண சொல்லிருக்கோம்.” “அதத்தான் உள்ளூர் போலீஸ்காரங்களே
பண்ணிருவாங்களே..நீங்க என்ன பண்ணிட்டுருக்கீங்க..?” “பாஸ் அந்த புது knot பத்தி சொல்லுவமா..? ’எது.? ‘சைக்கோஸிஸ்டர் இன்வால்வ்மென்ட் பத்தி…ம்.சரி. “சார் எனக்கு என்னவோ அந்த ஸ்டீபன் ராஜோட
ஸிஸ்டர் மேல தான் சந்தேகமா இருக்கு.,அவங்க கொஞ்சம் காஷியஸா மூவ் பண்ற மாதிரி தெரியுது, “சரி அந்த ஆங்கிள்லயும்
யோசிச்சு பாப்போம்”..ஆனா இந்த கேஸ் ஒரு வாரத்துக்குள்ள முடிஞ்சிடணும்,
ஹோம்மினிஸ்டர் எங்கிட்ட பேசினார்.ஏமாத்த மாட்டீங்கன்னு
நெனக்கிறேன் மை பாய்ஸ்…போய்ட்டு வாங்க” என்றார்.
“அப்பாடா..இன்னிக்கு
சீஃப் என்ன மூடில இருந்தார்னு தெரியல..சும்மா விட்டுட்டாரே..?
“அப்டி நெனக்காத..அவர் இருக்கிற பிரஷர்ல எப்ப வேணா கூப்ட்டு காய்ச்சுவார்.,,ஜாக்ரத..! “ அவரால சாராயம் கூட காய்ச்ச முடியாது பாஸ்” “டேய் கொஞ்சம் மரியாதை
கொடுத்து பேசு..!” “ஸாரி பாஸ்”.
“மேடம்..கொஞ்சம்
உள்ள வர்றீங்களா..?” “எஸ் ஸார்” “நான் ஒரு வேலை விஷயமா கொஞ்சம் வெளில போறேன்.மொபைல் அணைச்சுடுவேன்..ஏதாவது ஃபோன் கால் வந்தா குறிச்சு வைங்க..” என்று கூறிவிட்டு சீஃப்
கிளம்பிச்சென்றார் அந்த ஸிஸ்டர் வீட்டிற்கு.
பெல்லடிக்க சுவிட்சில் கை
வைத்தபோது உள்ளிருந்து பேச்சு சத்தம் கேட்டது. “எதுக்கு இங்க வந்த..?போலீஸும், சி.பி.ஐயும் என்னையே சுத்தி சுத்தி வந்துட்டுருக்கு,இங்க வராத போயிடு..” “நான் எங்க போவேன்,,ஒளியறதுக்கு வேற எடம் கெடக்கலியே…” “என்னோட ஃப்ரெண்ட் வீட்டுல தங்கிக்க,,எல்லாப்பிரச்னையும் முடிஞ்ச பிறகு இங்க வா..!
சீக்கிரம் கிளம்பு.” “ஏன் இப்டி வெரட்டுற..?” …கதவு திறந்தே இருந்தது,,,, சத்தமில்லாமல் உள்ளே புகுந்த சீஃப் ,
ஸ்டீபன் ராஜின் முதுகை நோக்கி குறி வைத்து “ஸ்டிக் தெம் அப்” “வேண்டாம் எங்கிட்டயும்
துப்பாக்கி இருக்கு.சுட்டுறுவேன்
“உன்ன சுடுறது என் குறிக்கோள்
இல்ல..கையைத்தூக்கு..ம்..” “வேகமாகத்திரும்பியவனின்
கையில் துப்பாக்கி…நவீன ரகம்,கையடக்கமானது.
துப்பாக்கியைப் பார்த்ததும் சுட்டார் சீஃப். ஸைலன்ஸர்
பொருத்தப்பட்டிருந்ததால் சத்தம் வெளிவரவில்லை.
ஸ்டீபன் கீழே விழுந்து கிடந்தான்.அருகில் சென்று அவன் கைகளைக்கவனித்தபோது ,
ஆள்காட்டி விரலும் பெருவிரலும் மட்டும் நீண்டிருக்க, மற்ற விரல்கள் மடங்கியிருந்தன.கையில் துப்பாக்கி என்று
ஏதும் இல்லை.திடுக்கிட்ட சீஃப் “ச்….அவசரப்பட்டுட்டேனே..?”என்று துப்பாக்கியால்
நெற்றியை சொறிந்தார்.அவன் ஸிஸ்டர்
ஏதும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.ஏதும் பேசவேயில்லை.சீஃப் மொபைலை ஆன் பண்ணி ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு அலுவலகம் திரும்பினார்.
டெலிஃபோன் மணியடித்தது கணேஷின்
வீட்டில். “டேய் யாருன்னு பாரு.’ ‘எஸ் ஸார் இப்பவே வர்றோம்
“கணேஷ் நம்மளத்தான் கூப்டுறார்
சீஃப்..இன்னிக்கி பெருங்காய்ச்சல் தான் மவனே,போகலாம்.” சீஃப் அலுவலகத்தை அடைந்து அறை வெளியே காத்திருந்தனர்.” “சொல்லுங்க மேடம் , நாங்க வந்திருக்கோம்னு” “ம்ஹூம் அவர் யாரையும் பாக்க விரும்பல.. “இல்ல அவர்தான் எங்களைப் பாக்கணும்னு கூப்ட்டார். அப்டியா இருங்க கேட்டு சொல்றேன். டெலிஃபோனில் கொஞ்சி விட்டு “ம்…நீங்க உள்ள போலாம்” திரும்பி உயிரோட வந்தா உனக்கு கடா வெட்டி பொங்க வெக்கிறேன்
தாயி.”என்று கணேஷைப்பின் தொடர்ந்தான் வஸந்த்.
“ஸ்டீபன்ராஜ் ஸிஸ்டரோட வீட்டுக்கு போயிருந்தேன்.அவனும் அங்கதான் இருந்தான்.கைகலப்பில அவசரத்துல அவன நான் சுட்டுட்டேன்.ஸ்பாட்லயே
ஆள் காலி.கேஸில இனியும் அதிக கவனம் செலுத்த வேணாம்.வஸந்த் சொன்ன ஆங்கிள் எனக்கு சரியாப்படல.அதச்சொல்லத்தான்
உங்கள இங்க கூப்ட்டேன்.நீங்க இப்ப போலாம்” என்று கூறிவிட்டு பதிலுக்கு
காத்திராமல் வீல் சேரைச்சுற்றி விட்டு அமர்ந்துகொண்டார்.ஸ்டீபன் ராஜ் கையில் துப்பாக்கி இல்லாததை அவர்களிடம்
விவாதிக்கவில்லை சீஃப்.
வெளியே வந்த வஸந்த் “கணேஷ் பாத்தியா..?நம்மள ஒரு கேஸுல கூட பேரெடுக்க விடமாட்டேங்கிறார்
இந்த சீஃப்..இப்பக்குருவியச்சுடுற மாதிரி சுட்டுட்டு வந்து ரொம்ப
கூலா அதிக கவனம் செலுத்த வேணாம்.போயிட்டு வாங்கன்றார்.” “சரி விடுடா, இனி வேற வேலையப்பாக்க வேண்டியதுதான்.
இருவரும் வீடு திரும்பினர்.வஸந்திற்கு மட்டும் இந்த கேஸ் இன்னும் முடியவில்லை
என்றே தோன்றியது,கணேஷ் அந்த ஸிஸ்டரக்கொஞ்சம் பாத்துட்டு வரலாமா..?
“எதுக்கு துக்கம் விசாரிக்க
போறியா,,? அதெல்லாம் வேணாம் , நீ வேற போயி குட்டையை குழப்பாத,,,பேசாம ஒக்காரு” என்று கூறிவிட்டு பாத்ரூம்
பக்கம் சென்றான் கணேஷ்.
சிறிது நேரத்தில் வெளியே வந்து
பார்த்ததில் வஸந்த அங்கே இல்லை. ‘எங்க தொலஞ்சான்னு தெரியல..எங்க போயிரப்போறான் அந்த பெங்காலிக்குட்டிய
பாக்கபோயிருப்பான்,’ என்று நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டான் கணேஷ்.சாயங்காலம் எழுந்து பார்த்தபோது கதவைத்திறந்தே
வைத்து விட்டு தூங்கியது தெரிந்தது. ‘ச்ச இப்டித்தூங்கிட்டேனே,
இவன வேற காணம் எங்கதொலஞ்சான்னு நினைத்துக்கொண்டிருக்கும்போது டெலிஃபொன்
அடித்தது.
கணேஷ் சீக்கிரம் புறப்பட்டு
வாங்க.உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.வஸந்தின் குரல் கரகரத்தது.ஏதோ சரியில்லை எனத்தோன்றியது.இருப்பிடமறிந்து சென்று பார்க்கையில் , துப்பாக்கியை
உயர்த்திப்பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான் வஸந்த். ‘கணேஷ் ஹேண்ட்ஸப்..” ‘என்னடா செய்ற..?’ ‘எதுவும் பேச வேணாம் கணேஷ், இல்லன்னா சுட்றுவேன்’ ‘பைத்தியம் பிடிச்சுப்போச்சா
உனக்கு…துப்பாக்கியக் கீழ போடு” இல்ல அவ என்ன மாத்திட்டா..அவ எங்கருந்தோ எனக்கு ஆர்டர் குடுத்துக்கிட்டு
இருக்கா.. உன்னக்கொல்லச் சொல்லி எனக்கு ஆர்டர்..என்னால மீற முடியாது கணேஷ் நீ சாகப்போற” “வேண்டாம் நீ என்ன செஞ்சிக்கிட்டு
இருக்கேன்னு உனக்கே தெரியாது…நான் சொல்றதக்கேளு…” கிட்ட வராதீங்க..”ரொம்ப நெருங்கினா நான்
என்னயே சுட்டுக்குவேன், அங்கயே நில்லுங்க” “வேணாம் வஸந்த், வேணாம்”
சொல்லச்சொல்லக்கேட்காமல்
வஸந்த் தன் நெற்றியில் ட்ரிக்கரை அழுத்தினான்,சத்தம் மிக மெதுவாகக்கேட்டது.கீழே விழுந்தான் வஸந்த்.ரத்தம் வெள்ளமாகப்பெருகியது.அருகில் சென்று நின்ற கணேஷின்
ஷூவைத்தொட்டது ரத்தம்.பின்னால் ஏதோ சத்தம் கேட்டுத்திரும்பி பார்த்தான்
கணேஷ் “கணேஷ்..நான்
இங்க இருக்கேன்..என்று கூறிக்கொண்டே கையில் துப்பாக்கியுடன் வந்து
கொண்டிருந்தான் வஸந்த்.குழம்பியது கணேஷூக்கு,.
சிறிது சுதாரித்துக்கொண்டு
தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு வஸந்தை நோக்கி குறி வைத்து
“ ஒரு அடி முன்னெ எடுத்து
வைக்காத…நீ யாருன்னு எனக்கு தெரியும்…நீ அந்த ஸைக்கோவொட ஸிஸ்டர்
தான், உருவத்த மாத்திக்கிட்டா எனக்கு தெரியாதுன்னு
நெனக்காத.” இல்ல பாஸ்,,,,நான்
தான் உண்மையான வஸந்த்..என்று சொல்லிக்கொண்டே கணேஷின் சொந்த விஷயங்களைப்பற்றி
, வஸந்துக்கு மட்டுமே தெரிந்தவற்றை ஒவ்வொன்றாக கூறிக்கொண்டே வந்தான்.
“ உருவத்தையே மாத்திக்கிற
உனக்கு , இந்த சின்ன விஷயங்களைப்பத்தி தெரிஞ்சிக்கிர்றது
பெரிய விஷயமில்ல..என்னை ஏமாத்தப்பாக்காத…”என்று சொல்லிக்கொண்டே
முன்னேறிய கணேஷை நோக்கி சுட்டான் வஸந்த்.சரியாக கணேஷ் விலகி விட , அவனின் பின்னால் எழுந்து நின்ற
ஸைக்கோ ஸிஸ்டர் தலையில் குண்டு பட்டு கீழே சரிந்தாள். “பாஸ் இப்ப பாருங்க …யார் வஸந்துன்னு…” திரும்பிப்பார்த்தான்
கணேஷ். ஸைக்கோ ஸிஸ்டர் இரண்டாவது முறையாக ரத்த வெள்ளத்தில்
கிடந்தாள்.
ஆம்புலன்ஸும், ஃபாரன்ஸிக் ஆட்களும் குழுமிவிட்டனர்.
அஃபீஷியல் போட்டோகிராஃபர் க்ளிக்கிக்கொண்டிருந்தார்.கணேஷ் சோர்ந்து போய் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தவாறே
யோசித்துக்கொண்டிருந்தான்.ஏன் இப்படி வழக்கத்துக்கு மாறாவே நடக்குது
? ஒரு வேளை வஸந்த் சொன்னது தான் சரியா அந்த ஸைக்கோ ஸிஸ்டரப்பத்தி.?
“என்னடா வஸந்த் இடது கன்னம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு ? “அது அந்த பெங்காலிக்குட்டி கிட்ட ‘பாலோபாஷி’ன்னா என்னன்னு கேட்டுக்கிட்டு
இருந்தேன்..அதுக்கு அவ சொன்ன அர்த்தம் தான் இது..!”நான் கூட இப்பவும் உன்ன அந்த ஸைக்கோஸிஸ்டர் தான்னு நெனச்சிக்கிட்டுருந்தேன். “ நீ தாண்டா உண்மையான வஸந்த்..!” “ போங்க பாஸ்….உங்களுக்கு
எப்பவுமே கேலி தான்.”
.
ஓரிரு இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும்
ReplyDeleteஅங்கங்க உள்ள திருப்புமுனைகள் சுவாரஸ்யப்படுத்துகின்றன.
உதாரணமாக /சைலன்சர் பொருத்தினால் சத்தம் வெளிவரவில்லை/ போன்றவை கதையிலிருந்து செய்தியாக தனித்திருக்கின்றன.
மேலும் உங்களின் கவிப்புலமையையும் இடையிடையே தெளியுங்கள்.இன்னும் சிறக்கும்.
வாழ்த்துக்களுடன்..
இது ரொம்ப முன்னால எழுதினது அருண். திருத்தங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே வெளியிட்டது.அதான் இப்படி தகவல் பிழைகள்.. வாழ்த்துகளுக்கு நன்றி,,!
ReplyDelete