Sunday, May 4, 2014

மெகா சீரியல் கில்லர்



தீவிரமா எழுத வர்றதுக்கு முன்னால ( இப்ப மட்டும் என்ன ? :) ) கொஞ்சம் கொஞ்சமா அப்பப்ப எழுதிப்பார்த்த ஒண்ணு ரெண்டு கதைகள்ல இது கொஞ்சம் முக்கியமானது. எக்ஸ் ஃபைல்ஸ்-ன்னு ஒரு சீரியல் ஸ்டார்ப்ளஸ்ல தொண்ணூறுகளில் இறுதியில் வந்துகொண்டிருந்தது. அதில ஒரு கதை/எபிஸோட் ரொம்பப்பிடிச்சுப்போச்சு எனக்கு. ஜில்லியன் ஆண்டர்சன் (செம செம, இவாளுக்காகத்தான் ஒக்காந்து ஒக்காந்து ஒரு எபிஸொட் விடாமப்பாப்பேன் ) டேவிட் டக்கௌனியும் கலந்து கட்டி அடிச்ச அமானுஷ்யமான வகையில் சேரும் ஒரு மெகா ஸீரியல் அது. அதுல வந்த ஒரு கதையை ‘சுஜாதா’ பாணியில் அவரின் கதாபாத்திரங்களின் பேரோடு எழுதிப்பார்த்தது இது. இலக்கணம்/வாக்கிய அமைப்பு/சொல்ல வந்ததை சரியா நீட்டி முழக்காம எல்லாம் சரியா இருக்கான்னு நீங்களே வாசிச்சுப்பார்த்து சொல்லுங்க :) அவரின் பிறந்தநாள் நேற்று...பெரிய கதைங்கறதால ஒன்றிரண்டு பாகங்களா வெளியிடலாம்னு நினைக்கிறேன். முதல் பகுதி இதோ.




முழுக்கமுழுக்க ரப்பரால் செய்யப்பட்ட உருளை அது,நல்ல ரோடு ரோலர் டயர் ஸைசுக்கு இருந்தது.உருட்டிக்கொண்டிருந்தான் ஸ்டீபன் ராஜ். ‘ஒரே  நேர்கோட்டில், பிசகாம ,,ஆங்..அப்டித்தான்ஆணை பிறப்பித்துக்கொண்டே ஒரு நர்ஸ்.அவள் பின்னால் கொஞ்சம் தொலைவில் இரண்டு ட்யூட்டி ப்ளூ யூனிஃபார்ம்கள். இந்த உருட்டுப்பிரட்டு சென்னை மத்தியப்பகுதியிலுள்ள மனநலக்காப்பகத்தில் நடந்து கொண்டிருந்தது. ‘ஸிஸ்டர் முடிஞ்சுதா ?’ ‘ம்..இன்னும் கொஞ்சந்தான் ஸ்டீபன் ராஜ் முதுகில் உடையில் மனநலக்காப்பகம், சென்னை பத்துஎன்று கொட்டை எழுத்தில் தந்தி பேப்பர் ஹெட்லைன் மாதிரி எழுதப்பட்டிருந்தது.

பின்னிருந்த வீல் சேரைத்தள்ளிக்கொண்டு வந்து அதில் உட்கார வைத்தனர் ஸ்டீபனை அந்த இரு ப்ளூ யூனிஃபார்ம்களும்.அவனது கை,கால்களை ஸ்ட்ராப் போட்டு இறுக்கி விட்டனர்.”இது அவசியம்தானா ? ” என்றாள் நர்ஸ். “குறுக்குக்கேள்வியெல்லாம் வேண்டாம் , என் ட்யூட்டிய செய்யவிடு என்று வெடுவெடுவெனக் கூறியது ப்ளூ. சக்கரவண்டி நகரத்தொடங்கியது,வராண்டாவில் ஒவ்வொரு விளக்காகப்பின் சென்றது. வீல் சேரைத்தள்ளிக்கொண்டே ஒருவன் மற்றொருவனிடம் இந்த ஸ்டீபன் பாக்கிறதுக்குதான் சாது , இவங்கிட்ட தப்பித்தவறிக்கூட பேச்சுக்குடுத்துடாத , உன்னய அவன் வழிக்கு இழுத்துட்டுப்போய்டுவான்..ஜெகஜ்ஜால வித்தையெல்லாம் காட்டுவானாம் ச்ச..இவன மாதிரி எத்தன பேரப்பாத்திருப்பேன் தெரியுமா? வாயமூடிட்டுத்தள்ளூடா..” வேணாம் ஒனக்கு தெரியாது பொலி போட்றுவாண்டி , இதொட பதினேழு பேர கொன்னுட்டான் , மெகா சீரியல் மாதிரி , மவனே ஒண்ணுக்குப்பக்கத்தில எட்டு போட வெச்சிராத நீ, ஜாக்ரதை…..”

வீல்சேரை செல்லுக்குள் தள்ளி அவனைப்படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்து கதவைப்பூட்டினார்.பூட்டை இரண்டு முறை இழுத்துப்பார்த்துவிட்டு திருப்தி அடைந்து நடந்து சென்றார் தன் இருப்பிடத்திற்கு.இருந்தாலும் மெகா தொடர்கொஞ்சம் பயமுறுத்தியது. என்னிக்குத்தான் இந்தப்பைத்தியங்களிடமிருந்து விடுதலை கிடைக்கப்போகுதோ என்று நினைத்துக்கொண்டே அருகிலிருந்த காஃபி மேக்கரில் காகிதக்கோப்பையை பைப்பிற்கு கீழேவைத்து பொத்தானை அழுத்திவிட்டு நிறைவதற்காகக் காத்திருந்தார்.காப்பி பொத்தான் சிவந்து கொண்டிருந்தது , ஏதோ முதுகில் ஊர்வது போலிருந்தது.திரும்பிப்பார்த்தால் ஸ்டீபன் அறையின் வெளியே சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

நோயாளிகளுக்கு உதவி தேவைஎன்றால் காவலர்களை அழைக்கும் சிக்னல்.கையில் காப்பிக்கோப்பையுடன் கைத்தடியையும் மறக்காமல் எடுத்துசென்றார், அவனது செல்லில் கதவருகில் நின்று உள்ளே பார்த்தார்.ஸ்டீபன் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.பின் எப்படி சிவப்பு விளக்கு? எதற்கும் உள்ளே சென்று பார்ப்போம் என்று கதவைத்திறந்து விட்டு உள்ளே சென்றார்.கதவு திறந்தே கிடந்தது.சிறிது நேரத்தில் மற்றொரு ப்ளூ யூனிஃபார்ம் அவசரஅவசரமாக ஓடிவந்து பார்த்ததில் கையில் காப்பிக்கோப்பையுடன் அவர் மட்டும் அமர்ந்திருந்தார். “என்ன ஆச்சு ?” “அவன் வெளியில போகணும்னு சொன்னான், அவன் வெளியில போகணும்னு சொன்னான், அவன் வெளியில போகணும்னு சொன்னான் , அதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்தார். கையில் காப்பி ஆறிவிட்டிருந்தது.

முழுக்கட்டிடமும் அவசரநிலைப்பிரகடனத்தில் இருந்தது.ஹூட்டர்கள் ஒலி எங்கும் முழங்கியது.முக்கியக்கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன, ஒவ்வொருவரும் நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.அவசர அழைப்பின் காரணமாக காப்பகத்தின் அனைத்து காவலர்களும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். இவன் கேஸை நடத்திக்கொண்டிருந்த சி.பி..யும் வந்திருந்தது. மைக்கில்லாமல் கணேஷ் கத்திக்கொண்டிருந்தான் இப்ப தப்பிச்சுப்போனவன் ஒரு மெகா சீரியல் கில்லர் , யாரையும் ஒரு நிமிடத்துக்குள்ளே பேச்சாலேயே தன்வயப்படுத்தக்கூடியவன், அவன் பேச்சுக்கிணங்கியவரை அவன் என்ன வேணாலும் செய்யத்தயங்கமாட்டான்.” “பொம்பளங்களாருந்தா என்ன பண்ணுவான் பாஸ்..வஸந்த் ,சும்மா நேரங்காலந்தெரியாமநீ வேற,, அவன் எங்கயும் தப்பிச்சு போயிருக்க முடியாது, கேட்டிலருந்து கன்ஃபர்ம் பண்ணீருக்காங்க.அவன் எந்த வாகனத்திலயும் போகலைன்னு , அதனால அவனப்பிடிக்கிறது சுலபம், இங்கதான் நடைதூரத்தில தான் போயிருக்கணும்..ம்..சீக்கிரம் கிளம்புங்க, என்று கூடியிருந்த அனைத்துக்காவலர்களுக்கும் ஆணை பிறப்பித்தான்.இன்னிக்கு ஸ்டீபன் வார்டுல டியூட்டிலருந்த டாக்டர்ஸ்,நர்ஸ்,அப்புறமந்த ப்ளூ யூனிஃபார்ம் அத்தனை பேரையும் கூப்டுங்க விசாரிக்கணும்.என்றான் வஸந்த். இங்க நிண்ணு விசாரிக்கிறத விட வார்டுக்கே போயிடலாம்னு இருவரும் வார்டு பக்கம் சென்றனர்.

அங்கு சேரில் அந்தக்காவலர் உட்கார்ந்திருந்தார்.கையிலிருந்த காப்பிக்கோப்பையை ஒருவாறு கீழே வைத்திருந்தார்.வஸந்த் அவரைக்குடைந்து கொண்டிருந்தான். கடைசியா உங்க கிட்ட என்ன சொன்னான்? ஆங் அதுவந்து…’என்று செந்தில் மாதிரி மண்டையைச்சொறிந்து கொண்டிருந்தார்.ம்ஹூம் இவர்கிட்ட ஒண்ணும் தேறாது ட்யூட்டி நர்ஸக் கூப்பிடுங்க..வந்தாள்..ம் ..உங்க பேரு ? காஞ்சனா..உங்க அக்கா பேரு நனஞ்சனாவா? அவள் சிரிக்கவேயில்லை.பயத்தில் உறைந்திருந்தாள்

ரிலாக்ஸ்..ரிலாக்ஸ்பயப்படாதீங்க.. கண்டுபிடிச்சிருவோம்அதுக்கு தான நாங்க வந்துருக்கோம்..அப்டியே அவன் கெடக்காட்டியும் உங்க வேலை போயிரும்னு கவலப்படாதீங்கஎன் பாஸ்கிட்ட சொல்லி உங்களயே ஆஸ்தான நர்ஸா வெச்சிக்க சொல்றேன்.கடைசியா சொன்ன வாசகத்துல ஒரு வார்த்தையை மட்டும் அழுத்தி சொன்னான் வஸந்த்.டேய், அவங்களே ஏற்கனவே பயந்து போயிருக்காங்க..நீ வேற பயமுறுத்திக்கிட்டு.. நீங்க சொல்லுங்கம்மா,,என ஆரம்பித்தான் கணேஷ். ஸ்டீபன் ராஜ் எப்படி ஆளு,.,.?கட்டை எடுத்து அடிக்கிற ரகமா..இல்ல உம்மணாமூஞ்சி மாதிரி இருந்துக்கிட்டு கழுத்த அறுக்கிற ரகமா..? என்று கேட்டுக்கொண்டே இருந்தான் கணேஷ்எனினும் யாராலும் சரியாகப்பதில் சொல்ல இயலவில்லை.

நகரின் மத்தியிலிருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்.உள்ளே போனா இது கிடைக்கலன்னு திரும்பி வர முடியாது.எல்லாம் கிடைக்கும் அங்கே.பால்டின் ,சோப் எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணிக்கொண்டிருந்தான் முருகேசு.கவனம் எல்லாம் ஸ்டோரில் மேல் தட்டில் வைக்கப்பட்டிருந்த டிவியில் தான்.பாசமுள்ள மனிதனப்பா, நான் மீச வெச்ச குழந்தையப்பா ,என்றபோது முழந்தையாக மாறி பின் படையப்பாவாக மாறிக்கொண்டிருந்தார் ரஜினி.திடீரென ஒரு தடங்கல். முக்கிய செய்தி..நகரிலுள்ள மனநலக்காப்பகத்திலிருந்து ஒரு பைத்தியம் தப்பி விட்டான்.அவனது அங்க அடையாளங்கள் .போட்டோ காட்டிக்கொண்டிருந்தார்கள் டீவியில்.அதையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த முருகேசு சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தான். 

ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து முளைத்தவன் போல தோன்றினான்.கையை நீட்டி தரைகழுவப்பயன்படும் ப்ரஷ் கொண்ட நீளக்கட்டையை எடுக்கப்போனான் முருகேசு. எதுக்காக அந்தப்பாம்பை எடுக்கிற தம்பி,,அது உன்னத்தான் கடிக்கும்அத வெச்சிரு..கொஞ்சம் தள்ளீயே வெச்சிரு என்று ஸ்டீபன் ராஜின் குரல் மந்திரமாக ஒலித்தது அவனுக்கு.வலது கையை திரும்பிப்பார்க்கும் போது , அதில் நல்ல பாம்பு படமெடுத்துக்கொண்டிருந்தது.பயத்தில் அலற இயலாமல் தொண்டை அடைத்தது முருகேசுக்கு.

டிர்ரிங்க்.டிரிங்க.. மணி ஒலித்தது.கணேஷ் அமர்ந்திருந்த மேஜையில்.பாஸ் இதோட பேரலல் லைனை நான் எடுக்கிறேன்.இது அவனாகத்தான் இருக்கும்.காலர் ஐடி வெச்சு அவன் எங்கருந்து பேசரான்னு கண்டு பிடிக்கலாம்னு சொல்லிக்கொண்டே பக்கத்து லைன் ரிஸீவரைக்கையில் எடுத்துக்கொண்டான் வஸந்த்.ரிசீவரில் அதே மந்திரக்குரல்.. நாந்தான் கணேஷ்தேடுதல் வேட்டை ஆரம்பிச்சிடுச்சி போல.ஆனா உன்னால என்னப்பிடிக்கவே முடியாது..உனக்கு அப்பனையெல்லாம் நான் டேக்கா குடுத்துருக்கேன்.நீயாவது என்னப்பிடிக்கிறதாவது..? பாஸ் வெச்சிருங்க போதும்உங்களையும் ஒரு வழி பண்ணீருவான்.என்ற வஸந்த் கணேஷின் ரிஸீவரைப்பிடுங்கி கீழே வைத்தான்,.

ஸைரன் ஒலிக்க பத்து ஜீப்புகள் புடைசூழ அந்த நகர்மத்தி ஸ்டோர் சுற்றி வளைக்கப்பட்டது.பாஸ்..இங்க தான் எங்கயாவது ஒளிஞ்சிருப்பான் பிடிச்சிடலாம் என்றான் வஸந்த்.போலீஸ் உள்ளே புகுந்து கடைக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே அனுப்பிக்கொண்டிருந்தனர். நீங்க ரெண்டு பேரும் குடவுன சோதனை போடுங்க என்றான் கணேஷ்.அருகில் நின்ற இரு காவலர்களும் குடவுனின் கதவு திறந்த ஒலி எக்கொ அடித்தது.ரிவர்ப்ரேஷன் ஜாஸ்தி அந்த ரூமில.துப்பாக்கியை கையில் உயர்த்திப்பிடித்தவாறே அடிமேலடி எடுத்து வைத்து சென்றனர்.இன்ஸ்பெக்டர் நம்பர் 2 அவரைப்பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். 

மேலே ஏறி சாமன்களை எடுப்பதற்கான ஏணியில் ஏறி சோதனை போட்டுக்கொண்டிருந்தார்.உள்ளே சென்று பார்த்ததில் யாரோ ஓடுவது போல சத்தம் கேட்டது.பின்பக்கமாக இருந்த கதவு திறந்து கிடந்தது.மேலே அதிக சத்தம் கேட்டதில் இரண்டாவது காவலரும் மேலே சென்றார். பிடிச்சிட்டேன் பிடிச்சிட்டேன் என்ற சத்தம் கேட்டு அனைத்து காவலரும் ஏணியில் ஏறினர்.வஸந்தும், கணேஷை இழுத்துக்கொண்டு ஓடினான்.போய்ப்பார்த்ததில் முதல் காவலர் கைகளைப்பரப்பியபடி படுத்துக்கிடந்தார், அருகிலிருந்தவர் என்னைப்பார்த்து பிடிச்சிட்டேன் பிடிச்சிட்டேன்னு ஏன் சொல்றார்னு தெரியல என்றார்.

சோர்வடைந்து அனைவரும் கீழிறங்கி வெளியே வந்தனர்.கணேஷ் கடை முதலாளியிடம் ஸாரி சொல்லிக்கொண்டிருந்தான்.வெளியே வந்த வஸந்த் விட்டேத்தியாகச்சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தான்.கூப்பிடு தொலைவில் ஸ்டீபன்ராஜ்பனியன் முதுகுப்புறம் மன நலக்காப்பகம் , சென்னைஎன்ற கொட்டை எழுத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.கால்கள் பிடறியிலடிக்க ஓடி அவனைத்திருப்பி பார்த்ததில் நான் போகணும்னு சொன்னான் நான் போகணும்னு சொன்னான்என்றவாறே பிதற்றிக்கொண்டே நின்றான் முருகேசு.போலீஸ் ஜீப் அனைத்தும் ஸைரன் மைனஸாகி ஒன்றன்பின் ஒன்றாகத்திரும்பிச்சென்று விட்டன.

பாஸ் நாளைக்கு மீட்டிங் சீஃப் தடியன் வர்றானாம், ஜானிவாக்கரை கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக்கிட்டே நம்மள முழுங்கிடுவான் பாஸ். டேய் ஏண்டா இப்டி ஜன்னி கண்டவன் மாதிரி ஒளர்ற..? இல்ல பாஸ் நான் ஜனனியப்பாத்தாக்கூட இப்டித்தான் ஒளறுவேன்.ஸ்டீபன் ராஜுக்கு யாராவது சொந்தக்காரங்க,பொண்டாட்டி புள்ளன்னு யாராவது ? ம்ஹூம்..இந்த சைக்கோவயெல்லாம் யார் பாஸ் கண்ணாலம் கட்டிப்பா ?..என்னவோ அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கிறதா ஒரு கேள்வி ம்..அவளப்போய்ப்பாத்தா என்ன ?””ஐயையோ..நான் வரல பாஸ்..இந்த ராத்திரி நேரத்தில மோகினி வந்தாக்கூட பரவால்ல,மோகினிப்பிசாசுங்க உலவுற நேரத்துல, நம்மால முடியாது பாஸ் டேய் கெளம்புடா என்றவாறு லெவாய்ஸ் ஜீன்ஸின் ஜிப்பை இழுத்து டைட்டாக்கினான் கணேஷ்.ஜெர்க்கினை எடுத்து ஞாபகமாகப்போட்டுக்கொண்டு வெளியே வந்தான்

டேய் வஸந்த்  சீக்கிரம் வா. வெளியேயிருந்து கணேஷ் குரல் கேட்டது..ம் இந்த பாஸுக்கு வேற வேலயில்ல,அந்த மெண்ட்டல் ஆஸ்பத்திரிக்கி போனாலும் காஞ்சனா நர்ஸ்கிட்ட வழிஞ்சிக்கிட்டு இருக்கலாம்இந்த ஸைக்கோ ஸிஸ்டரப்பாக்கறதுல என்ன யூஸ்? என்று முணுமுணுத்துக்கொண்டே கதவை இழுத்து மூடினான் வஸந்த். இடுப்பைத் தொட்டுப் பார்த்தில் பிஸ்டல் இருந்தது.

அந்த இரவில் ஸைக்கோ ஸிஸ்டரின் வீட்டைக்கண்டுபிடித்துப் போனபோது மணி 11:30.பெல்லை அழுத்த உள்ளே குயில் கூவியது.வர்றேன் வர்றேன்என்று  சொல்லிக்கொண்டே ட்டக் என்ற சத்தத்துடன் கதவைத்திறந்தாள்.அவனின் ஸிஸ்டர். என்ன விஷயம்..நீங்க யாரு..எதுக்கு இந்த ராத்திரில..? எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாக தனது ஐடி கார்டைக்காட்டினான் கணேஷ். சுருக்கமா சொல்றேன்.. உங்க பிரதர் ஸ்டீபன் ஆஸ்பத்திரிலருந்து தப்பிட்டார்.எப்படியும் உங்களத்தேடித்தான் வந்திருப்பார்னு இங்க வந்தோம்.ஸிஸ்டர் கவலையில் மூழ்கினார். 

வஸந்த் மெள்ள நடந்து அறைகளை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தான். வெகு நேர அமைதிக்குப்பின் சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவீங்கல்ல.. அவனால எத்தனையோ பேருக்கு ஆபத்து..? என்று கொஞ்சம் அழுதாள்.அழுகை போலி போலத்தோன்றியது, வந்தா எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க..பயப்படவேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தனர்.

காலையில் சீஃப் மீட்டிங்கிற்கு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கும் வேளையில் சைக்கோஸிஸ்டரிடமிருந்து ஃபோன்.அவளின் வேலைக்காரி பேசினாள்.விரைந்து சென்று பார்த்ததில் சைக்கோஸிஸ்டரின் கணவர் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.அதுவும் மிக நூதனமாக.பெயிண்ட் டப்பாவைக்கவிழ்த்து உடம்பு முழுக்க பெயிண்ட்டைப்பூசி வைத்து , புலி வேஷம் போடுவது போல.பெயிண்ட் காய்ந்து போய் மூக்கு கண் மற்றும் எல்லா அவயவங்களின் ஓட்டைகளும் மூடப்பட்டு கொடூரமான முறையில்.வஸந்த் அவரின் பேண்ட் ஜிப்பைத் திறக்க முயன்று கொண்டிருந்தான்.அந்த அறை முழுதும் ஏதோ பெங்காலியில் எழுதப்பட்டிருந்த்து.வஸந்த் அதை இந்த வாரம் பெங்காலி வாரம் என்று தப்புத்தப்பாக முழிபெயர்த்துக் கொண்டிருந்தான். கணேஷுடன் வந்த அந்த பெங்காலிப்பெண் கணேஷ் வஸந்த் , கணேஷ் வஸந்த்ன்னு எழுதிருக்கு என்று சரியாக மொழிபெயர்த்துச்சொன்னாள்.


- தொடரும்



.

1 comment:

  1. அருமை ராம், பாத்திரமும் சூழலும் நன்றாக பொருந்தியிருக்கின்றன.
    சைக்கோ சிஸ்டருக்கும் ஒரு பேரு குடுத்திருக்கலாம்ல :)
    அடுத்த பாகங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.


    ReplyDelete