Thursday, December 19, 2013

ஞானப்பறவை


ஞானப்பறவை

பறவைகளுக்கும் அவ்வப்போது
ஞானம் பிறந்துவிடும்
போலிருக்கிறது

அசையாது ஒரே இடத்தில்
நின்றுகொண்டே பறக்கிறது
எத்தனை காற்றடித்தாலும்
மரக்கிளையை விட்டு விழாது
அமர்ந்திருக்கிறது
மழை,புயல்,வெய்யில்
என எதையும்
பொருட்படுத்துவதேயில்லை
கிடைத்ததை உண்டுகொள்கிறது
உடையென எதையும்
உடுத்தி நான் இதுவரை
பார்த்ததில்லை

அவைகளை மட்டுமே
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
எப்போது பிறக்கும் என
நினைத்துக்கொண்டிருக்கும்போது
தமது அழகிய குரலால்
என்னைக்கலைத்துவிட்டது



புரியாத கவிதை

அந்தப்புரியாத
பின்னவீனத்துவக்கவிதையை
தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்
நீயும் என்னுடன் அமர்ந்து வாசியேன்
புரிகிறதா என்று பார்ப்போம்
உன்னை என்னுடன் அமர்த்தி
வைப்பதற்குள் போதும் போதும்
என்றாகிவிடுகிறது
எதோ காதலைப்பற்றித்தான்
இதுவும் பேசுகிறது என்றெண்ணுகிறேன்
உனக்கு எதேனும் புரிகிறதா ?
புரியாவிடில் விட்டுவிடு
நமது காதலைப்போலத்தான்
அதுவும் என்றெண்ணுகிறேன்
இருப்பினும்
மீண்டும் அந்தக்கவிதையை
சிறிது காலம் கழித்தே
வாசிக்கலாமென்றிருக்கிறேன்
இயன்றால் உன்னை அழைப்பேன்
இல்லையேல்..


.

8 comments:

  1. அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஞானப்பறவை கவிதை அருமை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்
    கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. #மீண்டும் அந்தக்கவிதையை
    சிறிது காலம் கழித்தே
    வாசிக்கலாமென்றிருக்கிறேன்#
    அவள் இல்லாதபோது இதற்கான தேவையும் இருக்காது !
    த ம +1

    ReplyDelete
  5. மிக்க நன்றி பகவான்ஜி... தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..! :)

    ReplyDelete