Thursday, October 31, 2013

அம்மா

காய்கறி சாப்பிடவில்லையென்றால்
ஒரு கை மட்டுமே வளரும்
இன்னொரு கை குட்டையாகவே இருந்துவிடும்
பழத்தோடு கொட்டையை சேர்த்துச்சாப்பிட்டால்
வயிற்றில் மரம் முளைத்துவிடும்
இப்படியெல்லாம்
எனக்கு விளையாட்டுக்காட்டி
செல்லமாக பயமுறுத்திய
என் அம்மா இப்போது
உறங்கிக்கொண்டிருக்கிறாள்
எத்தனை கூப்பிட்டும் எழவில்லை
என் சின்னக்கைகள் கொண்டு
அசைத்தும் பார்த்துவிட்டேன்.
எழவேயில்லை.
இதற்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி
என்னை மகிழ்விப்பாள்
காத்திருக்கிறேன்
காலம் கடந்து கொண்டிருக்கிறது
அவளின் கைகள்
ஏன் குளிர்ந்துபோய்விட்டன
என்று மட்டும் தெரியவில்லை.


.

4 comments:

  1. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
  2. வணக்கம்

    சிறப்பான பதிவு கவிதையின் வரிகள் மிக மிக நன்று... வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete