Monday, October 21, 2013

துளிப்பாக்கள்



குழந்தை கையில் பிடித்துப் பறக்கவிட்ட
பட்டாம்பூச்சிகள் தாமிழந்த
நிறங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை

-

நான் கடந்து வந்துவிட்டதால்
எதுவும் இன்னமும் நிகழாமல்
இருக்கப்போவதில்லை

-

உனக்கு என்ன வேண்டும் என
என்னுள்ளிருந்துகொண்டே
கேட்கிறாய்

-

மன்னிக்கவியலாத
தவறுகள் செய்தபோதும்
கவனியாது விட்டுவிடுவது
உன்னிருப்பை என்னுடன்
உறுதி செய்துகொள்ளத்தான்

-

படகைப் பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதன் போக்கில் நீரில்
அலைந்து ஆடிக்கொண்டிருந்தது.
ஆகட்டும் என்று
அதற்குள் புகுந்துவிட்ட
நீரைப் பற்றி எழுதுகிறேன்
படகும் கூர்ந்து கவனிக்கிறது
‘மிதப்பது மூழ்க மட்டுமே’ என்ற
என் வரியைப் பற்றி
சிலாகித்துச் சொல்லிக்கொண்டே
கடைசியாக நீரில் அமிழ்ந்து
மூழ்கி வெளிவிட்டது
ஒரு சிறுகுமிழியை
எனக்காக.

-


.

3 comments:

  1. // மிதப்பது மூழ்க மட்டுமே // அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகான கவிதை...

    மிதப்பது மூழ்க மட்டுமே... சூப்பர்...

    ReplyDelete