Friday, May 10, 2013

அதுமட்டும் மறந்து விட்டது



வலிந்து
ஏற்படுத்திக்கொள்ளும் சந்திப்புகள்,
வேண்டுமென்றே
மறந்து போனதைக் கொடுக்க வந்து
பேச்சை வளர்க்கும் முயற்சிகள்,
தவறிய அழைப்புகள் கொடுத்து
மீளக்கேட்கையில்
இல்லை மேலே உனது எண்தானிருந்தது
என்று சமாளிக்கும் மன்னிப்புகள்,
வரும் வேளையை தொடர்ந்தும்
கவனித்து
திரும்பிச் செல்லும் நேரத்தை
சரிசெய்து கொள்தல்,
இதுநாள் வரை பெயரெடுத்தாலே
பிடிக்காதிருந்த விஷயங்களைப்பற்றி
இணையத்தில் விடாது தரவுகள் சேகரித்தல்,
தாமே தமக்குள் யோசித்துவைத்து
அவையாவும் பொருந்திப் போகும்போது
மறைக்க எத்தனிக்கும் புருவ உயரல்கள்,

இவையெல்லாவற்றிற்கும்
ஒரு பெயர் இருக்கிறது
அதுமட்டும் மறந்து விட்டது.


6 comments:

  1. கவிதை அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி கும்மாச்சி. ;)

    ReplyDelete
  4. மிக்க நன்றி தனபாலன்.;)

    ReplyDelete
  5. //இவையெல்லாவற்றிற்கும்
    ஒரு பெயர் இருக்கிறது
    அதுமட்டும் மறந்து விட்டது//
    ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். "முதல் காதல்".

    ReplyDelete