Saturday, March 9, 2013

முள்



இந்த நொடிமுள்
இன்னும் 48 முறை
துடித்துத் துடித்து 12 ஐ
வந்தடையும்
பின்னர் அந்த நிமிட முள்
ஒரு எட்டு முன் போகும்
பின்னரும் அந்த நொடி முள்
நிற்காமல் 60 முறை
துடித்துத் துடித்து
12 ஐ வழக்கம் போல
வந்தடையும்
பிறகு அந்த நிமிட முள்
ஒரு எட்டு முன் போகும்.
கடிகாரம் எங்கனம் இயங்குகிறது
இப்படி உற்றுநோக்கித்
தெரிந்து கொள்ள
யாருக்காகவேனும்
காத்துக்கொண்டிருங்கள்.


4 comments:

  1. அன்பின் சின்னப் பயல் - காத்திருக்கும் நேரத்தினையும் சரியாகப் பயன்படுத்த உதவுக் கடிகாரம் .... நல்லதொரு சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. மராத்தான் பின்னூட்டங்களை ரசித்தேன்..சீனா.. வாழ்த்துகளுக்கு நன்றி..தொடர்ந்தும் வருகை புரிக, ;) ;)

    ReplyDelete