அட்டக்கத்தி’யிலேயே
தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்தவர் சந்தோஷ் நாராயணன். பின்னர் பிஸ்ஸா’வில்
மோகத்திரை’யில் நம்மை மயக்கிவிட்டு இங்கு முழுக்க ஒரு கலவையாக ஜூகல்பந்தி
வைத்திருக்கிறார். மெலிதான ராப், கொஞ்சம் ட்விஸ்ட்டும், கொஞ்சம் Yodelingம் கலந்து, ஒரு பாடல் முழுக்க பழைய பாடலை ஞாபகப்படுத்துவதாகவும்,
இன்னொன்று ஜேம்ஸ்பாண்டின் பின்னணி இசைக்கலவையோடு விருந்து படைத்திருக்கிறார்,
யுவன் “ஆரண்ய காண்டத்தில்” பரீட்சித்துப்பார்த்து வெற்றி பெற்றது போல இங்கும்
வென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு பாடலும் பல காலங்களைக்கடந்து நம்மை
வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச்செல்கிறது. போலித்தனமான சமாளிப்புகள் ஏதுமின்றி அந்த
அந்தக்காலங்களில் உபயோகித்த இசைக்கருவிகளை வைத்து செவிக்குணவு கொடுத்திருக்கிறார்.
“நான் இமை ஆகிறேன்”
நான் கிட்டார் கற்றுக்கொள்ளும்போது ஆர்ச்சி ஹட்டன் மாஷே
(மாஸ்ட்டர்) இந்த Que Sera Sera வை இரண்டு மாதப்பயிற்சிக்குப்பிறகு , கொஞ்சம்
பிழையின்றி Chords எடுக்க முடியும் போது சொல்லிக் கொடுப்பார். ரொம்ப
ஈஸியாக எடுக்கலாம் இந்தப்பாட்டை, எப்போதும் கீழிருக்கும் Minor E Stringல எடுக்கச்சொல்லுவார்.
அதுக்கே ரொம்ப முக்கி முக்கி எடுப்பேன். இதே பாடலை அப்போது 1957ல் ஆரவல்லியில் இசையமைப்பாளர்
வேதா “சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே ( பட்டுக்கோட்டையார்
வரிகளில் ) என்று எடுத்தாட்கொண்டிருப்பார் :).
அதே பாடல் 2013ல் சந்தோஷ் நாரயணானால் மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது இந்த
“நான் இமை ஆகிறேன்” பாடலில். அருமையான வயலின் இழைத்து இழைத்து ஆரம்பிக்கிறது.
அவங்க Western Style ஆன Verse and Chorus-ல Chorus Missing.
Fantastic கட்டமைப்பு. தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தாளமேயில்லாது வெறும்
வயலினும் பின்னால் கூடவே வந்து கட்டிப்போடுகிறது கேட்பவரை. ஒரு
Christmas Carol கேட்ட Feeling வருவது இயற்கை. பல இழைகளாக வெவ்வேறு தளங்களில் ஒலிக்கும்
வயலின் இழைகள் மனதை உறிஞ்சிக்கொண்டு செல்கிறது. 0.48-ல் ஆரம்பிக்கும் Solo Violin அந்த
சோக இழையை நமக்குள் இசைத்துச்செல்கிறது. ஒரு Pure Symphonyக்குரிய அனைத்து அம்சங்களும்
நிறைந்த பாடல். என்னவொரு சோகமென்றால் பாடல் நீளமே 1:44 நிமிடங்கள் மட்டுமே…இருப்பினும் தொடர்ந்து Loop ல் வைத்துக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டுமென்று
தோணுகிறது. பாடிய “திவ்யா ரமணி” யும் உணர்ந்து பாடியிருக்கிறார்.
Que sera Sera – வில் மகள் அன்னையை நோக்கி சந்தேகத்துடன்
தனது வாழ்க்கை குறித்த கேள்வி கேட்பது போல பாடல் அமைந்திருக்கும்.
பட்டுக்கோட்டையார் அதை காதலன் காதலி தமக்குள் அளவளாவுவது போல அமைத்திருப்பார்.
இங்கு கொஞ்சம் சோகம் குழைய காதலி தன் காதலனை நோக்கிப்பாடுவது போல
அமைந்திருக்கிறது. எல்லாச்சூழல்களுக்கும் பிரமாதமாகப் பொருந்திப்போகும் இசையும்
அந்த ராகமும். “முன்பே வா என் அன்பே வா” பாடல் சோகராகம் அது. இயக்குநர்
கேட்டுக்கொண்டதற்காக அதைக்காதலுக்காக , மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும்
தருணத்தில் இருக்கும் காதலிக்காக போட்டிருப்பார் ரஹ்மான். இப்படி ராகங்கள் எல்லாம்
கேட்பவர் மனதைப்பொருத்தே தான் இருக்கிறது..!
இந்த ஆல்பத்தில் Best Music Scored இந்தப்பாடல்தான் :)
Que Sera Sera http://youtu.be/xZbKHDPPrrc
எல்லாம் கடந்து போகுமடா
எம்ஜியார்
மன்னாதி மன்னனில் “அச்சம் என்பது மடமையடா “ என்று குதிரையில் சென்றுகொண்டே பாடிக்கொண்டு
செல்வது போல அமைந்திருக்கிறது. தனியாக ஒரு தபேலாவும் , கொஞ்சம் வயலினுமாக நம்மை
அந்த 50-60 காலங்களுக்கு வெகு எளிதாகக் கூட்டிச்செல்கிறது. எந்த Synth
Music -ம் இல்லாமல். குதிரைக்
குளம்பொலிச்சத்தம் ரொம்பவும் Opt ஆக அமைந்திருக்கிறது பாடலில். கோவை ஜலீல்-ன் குரல் Period
Film Music ன் Feel கொண்டு வருவதில் பெரு
வெற்றி பெற்றிருக்கிறது. 1:16 ல் ஒலிக்கும் தபேலா தண்ணீர் சலசலத்து ஓடும்
நினைவைக்கொண்டு வந்து ,நமக்கு. குதிரை நீர் தேங்கிக்கிடப்பதைக்கடந்து செல்வது போல்
ஒலிக்கிறது. ஜலீல் ‘எல்லாம் கடந்து போகும்’ என்று எளிதாகக் கூறுவது போல அல்லாமல் இந்தப்பாடல்
நம்மைக்கடந்து செல்ல மறுக்கிறது.
காசு பணம் துட்டு Money Money
Mild Rap ஆக ஒலிக்கிறது இந்த காசு பணம் துட்டு Money Money.
நன்கு வெறும் கையால் தாளம் போட்டுக் கொண்டே ரசிக்கலாம் இந்தப்பாடலை. மிகவும் எளிமையாக
Bathroom Singers-க்காகவே இசைத்திருக்கிறார் சந்தோஷ். “சிஞ்ச்சுனுக்கான் சின்னக்கிளி
சிரிக்கும் பச்சக்கிளி” மோஸ்தரில் அமைந்துள்ள பாடல் இது :)
பின்னால் ஒலிக்கும் போலீஸ் சைரன் அவ்வப்போது வந்து போய்
அல்ர்ட் செய்துவிட்டுப்போகிறது :)
Come
Na Come
“வயலும் வாழ்வும்” நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல்
ஒரு Perfect Rap :). அதிரவைக்கும் இசையில்லாது மைல்டாக அடுக்கடுக்காக
ராப் பாடலுக்கேயுரித்தான அளவில் வார்த்தைகளை இடையிடையே அடுக்கி வைத்து ரஹ்மானின் பழைய
“பேட்டை ராப்” பை ஞாபகப்படுத்துகிறது. 3:17 ல் ஆரம்பிக்கும் “டன்டன்டான் டடடான்”
இசையோடு சேர்ந்தொலிக்கும்போது நம்மையும் பாடவைக்கிறது. தொடர்ந்து கேட்கும்போது பல
இடங்களில் போரடிப்பது இந்தப்பாடலுக்கு தோல்வி L.
வயலின் தொடர்ந்து பாடிக்கொண்டேயிருக்கிறது பாடல் முழுதும். என்னைக்கேட்டால் ராப்
இசை என்பது ஒரு Failure வடிவம் , ஏன் தொடர்ந்தும் கலைஞர்கள் இதை இசைத்துக்கொண்டேயிருக்கின்றனர்
என்பது புரியவேயில்லை. எப்போதும் கட்டமைப்பை மாற்றவியல்லாத அத்தனை ராப் பாடல்களும்
ஒருங்கே ஒலிக்கும்படியான சலிப்பூட்டும் இசை வடிவம் இது. Seasonal ஆக வந்து போகும் போது
கூட பழைய பாடல்களை உடனே ஞாபகப்படுத்துவதே இந்த மாதிரியான Genre ல் அமைந்த பாடல்களின்
சோகம்..! “கடல்”ல் ரஹ்மான் வாசித்த “மகுடி மகுடி” , ஆதிபகவனில்
யுவன் தொழுத “பகவான்” எல்லாம் இந்த வகையில் வந்து , யார் இசைத்தாலும் அவரவர்தம்
கற்பனை கலக்கவியலாது ஒரே மாதிரியாகத்தெரிந்து தொலைப்பதே இவ்வகைப்பாடல்களின்
தோல்வி.!
மாமா டவுஸர் கழண்டுச்சு
Typical Andrea வின் Yodeling உடன் அவருக்கேயுரித்தான
, தெனாவட்டுடன் அமைந்திருக்கிறது பாடல். அந்தக் காலத்தில் Twist என்ற பிரபலமாக இருந்த
ஆடலுக்கு பொருந்தக்கூடிய இசை,மறைந்த நடிகர் நாகேஷ் ஆடி ஆடி நம்மைக்களைத்துப்போக வைத்த
பாடல்/ஆடல் இது :). மன்மதன் அம்பு’வில் அமைந்த ஒரு பாடல் Whos the
Hero? போன்ற Genreல் ஒலிக்கும் இந்தப்பாடலுக்கு கூடவே இசைக்கும் Trumpet
நல்ல உறுதுணை.! மேலும் “கந்தசாமி”யின்
“அலெக்ரா” வகையில் இதுவும் ஒரு Smash Hit for Andrea..! :)
Sudden
Delight
இந்த Theme Music, James Bond-ன் வழக்கமான நம் காதுகளுக்கு புளித்துப்போன
பின்னணி இசையின் பாங்கில் அமைத்திருப்பது ரசிக்கும்படியில்லை. புதிதாக
ஏதாவது செய்திருக்கலாம்.
இருப்பினும் தம்மிடம் இருக்கும் Stuff இன்னும் குறையாமல் மூன்றாவது படத்திலும் (அட்டக்கத்தி,
பிஸ்ஸா, இப்போது சூது கவ்வும்) மற்ற சமகாலத்திய இசையமைப்பாளர்களிடமிருந்து வேறுபட்டு
ரசிக்கும் படியான இசையைத் தம்மாலும் கொடுக்க முடியும்
என்பதை நிரூபித்துத்தானிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். சபாஷ் சந்தோஷ்.!
.
No comments:
Post a Comment