MS விஸ்வநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகள்லயும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடிக்க வந்தார், இங்க விஜய் ஆண்டனி, அவரோட Field-ல Music Direction – ல ஒரு நல்ல Status-ல இருக்கும்போதே நடிக்க வந்திருக்கார். இவரைப் பார்த்துவிட்டு DSP (தேவி ஸ்ரீபிரசாத்) யும் நடிக்க வந்து விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே ஒரு பாட்டுக்கு Dance ங்கற மாதிரி DSP அப்பப்ப வந்து தலயக்காட்டிட்டு போறார் சில படங்கள்ல.
Matt Damon –னின் Bourne பட வரிசைகள் போல தாம் யார் என்று தெரியாத Character ஆக உலா வராமல், தான் யாரென்று தெரிந்து சூழலுக்குத் தகுந்தவாறு இங்கு தம்மை மாற்றிக்கொள்ளும் விஜய் ஆண்டனி, கிட்டத்தட்ட ‘மௌனகுரு’" அருள்நிதி பாணிலயே அடிக்குரல்ல பேசி,தான் சரியா நடிக்கிறோமா/இல்லயான்னு தனக்குள்ள நினைச்சிக்கிட்டே படம் பூரா வர்றார். சொல்லப்போனா அவர் நடிச்சிருக்கிற "Character" தான் அவரக்காப்பாத்துது.Body Language, Dialogue Delivery போன்ற Technical விஷயங்கள்ல இன்னும் நிறைய உழைத்திருக்கலாம் விஜய் ஆண்டனி .
படத்தில் வரும் எந்தப்பெண்ணையும் மருந்துக்குக்கூடத் தொட்டுப்பார்க்கவில்லை விஜய் ஆண்டனி. அவர் படிப்பது மருத்துவமே என்றான போதிலும்.(ஒருவேளை அது அவர் மனைவியின் அன்புக் கட்டளையாகக்கூட இருக்கலாம் )

பாடல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை/உழைப்பை பின்னணி இசைக்கும் கொடுத்திருக்கலாம். எப்போதும் போல பாடலின் ராகத்தை இஸ்லாமியப் பின்னணிக்கென "Mandolin" கொண்டே இசைத்திருப்பது பெரிய Drawback. Psycho படத்தில் வரும் கொலைக்காட்சிகளுக்கான Viloin, Double Bass இங்கும் அவ்வப்போது வந்து போகிறது.
இப்போது இருக்கிற இசையமைப்பாளர்களுக்கு எங்கிருந்தாவது உருவி பாடல்களை அமைத்துவிடுவது எளிதாக இருக்கிறது.படத்தின் காட்சிகளை உள்வாங்கி அதன் கதையை உணர்ந்து , Theme Music Concepts களை வைத்துக்கொண்டு இசைப்பது என்பது இமாலய முயற்சியாகத்தான் தோன்றுகிறது அவர்களுக்கு. கற்பனை வளம் குன்றிய பின்னணி இசை, இது போன்ற Thriller படத்திற்கு உரமேற்றத் தவறுகிறது. Thriller படங்களுக்கெனவே பழைய காலங்களில் வேதா" என்பவரின் இசை வெகுவாகப் பாராட்டப்பட்டது." ‘அதே கண்கள்’" பின்னணி இசை இன்னும் நிலைத்திருப்பதே அதற்குச் சான்று. படத்தின் பல இடங்களில் "Predator 1" ன் பின்னணி இசையை உணரமுடிகிறது.
முன்னெல்லாம் English கலந்துதான் Lyrics எழுதினாங்க, இப்ப "Spanish, Portugese" லாம் கூட தமிழ்ப்பாடல்களில் காண முடிகிறது. "மக்காயேலா மக்காயேலா காய மவ்வா " என்ற வரியை பாடலின் துவக்கத்திற்கென ரைமிங்கிற்கென எடுத்துக்கொண்டாலும் ஹாரீஸ்’ போல அனைவரும் இறங்கியிருப்பது வருந்தத்தக்கதே. அந்தப்பாடலைப் பாடகர்கள் Spanish Background-லேயே பாடியுமிருக்கின்றனர். ராஜா சார் " Elvis Presly " Style ல் அமைத்திருந்த பாடல் " ரம்பம்பம் ஆரம்பம் , ரம்பம்பம் பேரின்பம் " ,எப்போது கேட்டாலும் அது தமிழ்ப்பாடல் போலத்தான் ஒலிக்கும், ஆங்கிலப்பாடல் நமக்கு ஞாபகம் வரவே வராது. பிற தேசத்து பாணி இசையை இங்கு கொண்டுவருதல் தவறில்லை. அதை நமக்குத் தகுந்தவாறு அதன் வாசனை சிறிதும் இல்லாமல் கொடுப்பதில் இருக்கிறது இசையமைப்பாளனின் பங்கு.

என்னய்யா ரொம்பவே அடக்கியே வாசிக்கிறாரே நம்ம விஜய் ஆண்டனி, எடுத்து அடிக்க மாட்டாரான்னு நினைக்கும்போது , அவரின் அப்பா என்று கூறிக்கொண்டு வரும் ராட்டினம் சுற்றுபவரை Barல் வைத்து சந்திக்கும் போது, ஏற்கனவே பெண் விஷயத்தில் பிரச்சினை செய்தவர்களை "Beer Bottle" ஐ எடுத்து அந்த "அப்பாவி(யி)"ன் தலையிலடித்து உடைத்து அடிக்கும் Stunt Scene Fasntastic. நிஜமாகவே தனக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை சீறும் புலி போலக் காட்டியிருக்கிறார். சபாஷ் விஜய் ஆண்டனி!
அஷோக் (சித்தார்த் வேணுகோபால்)கின் நண்பன் சுரேஷைக்கொல்லும் காட்சிக்கென Home Theaterல் "Oh Fortuna" என்ற விதி மற்றும் எதிர்காலத்தைப்" பற்றிக்கூறும் நாடகக்கதைப் பாடல் (Opera Choir Music) இசைக்கிறது . இந்தக்காயர் ம்யூஸிக்’கின் கட்டமைப்பு மிக மெதுவாகத்தொடங்கி , கிசுகிசுக்கும் ஒலியுடன் சேர்ந்திசைத்து , பின் Drums ம் யாழுமாக இசைத்து எதிர்பாராத சமயத்தில் சடாரென முடியும் ஒரு இசைக்கோவை. அவனைக் கொலை செய்வதும் அவ்வாறே தொடங்குகிறது. கட்டையை வைத்து அடிக்கத் தொடங்கி பின்னர் எதிர்பாராத விதமாக மேஜை நாற்காலிகளை வைத்து அடித்து பின்னர் உருட்டுக்கட்டையால் அடித்து மாடிப்படிகளில் ஏறுபவனின் கால்களை இடறி குப்புற விழவைத்து நடுமண்டையில் ஓங்கி அடித்துக் கொல்லும் காட்சிக்கு மிகவும் பொருத்தமான இசைக்கோவை.
இந்தக் Choir -ன் ஒலி அளவைக் கூட்டிவைத்துப் பெரும் சப்தத்துடன் பின்னணியில் இசைக்க அவரைக் கொன்று பின் புதைத்துவிட்டு வீடு திரும்பும்போது சுரேஷின் பைக்" வாசலில் நிற்கிறது. விஜயோடு சேர்ந்து நமக்கும் தூக்கிவாரிப் போடுகிறது . பின்னரும் சாவியைத்தேடி அலைந்து களைத்துப்போய் புதைத்த இடம் வரை சென்று மீண்டும் பிணத்தைத்தோண்டி எடுத்து ஜீன்ஸ் பாக்கெட்டில் இருக்கும் சாவியை எடுத்து திரும்ப வந்து பைக்கை யாருமில்லா சாலையில் கொண்டுபோய் நிறுத்தி விட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்த பின்னர் அப்பாடா", என்று பெருமூச்சு விடுகிறாரே, அந்த அத்தனை காட்சியிலும் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் அவ்வாறே தோணுவது ஓடிக்கொண்டிருக்கும் படத்துடன் சேர்த்து நம்மையும் கட்டிப்போடுகிறது.

இத்தனை கொலைகளையும் செய்து விட்டு சாமர்த்தியமாக எல்லா இடங்களிலிருந்தும் தப்பிக்கிறார் என்பது நம்ப முடியவில்லையே , எப்பேர்ப்பட்ட தேர்ந்த குற்றவாளியாக இருப்பினும் , To Err is human என்பதற்கிணங்க ஏதேனும் சிறு தடயமேனும் விட்டுச்செல்லமாட்டானா என்ற நமது ஆதங்கம் , அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் கடைசியில் வருவது நம்மை ஓரளவு ஆசுவாசப்படுத்துகிறது. மேலும் "எதையும் நிரூபிக்க தடயங்கள் கிடைக்கவில்லை. அதனால நீ தப்பிக்கிற"" என்று அந்த இன்ஸ்பெக்டர் வலிய வந்து விஜய் ஆண்டனியிடம் வழக்கம் போலச் சொல்லாமலிருப்பதும் பெரிய ஆறுதல் நமக்கு.
"பட்டுக்கோட்டை பிரபாகர்" 80-களின் பிந்தைய காலங்கள்ல "மூன்றாம் கை"" (நம்பிக்கை)ங்கற தலைப்பில ஒரு குற்றப்பின்னணி கொண்ட புதினம் எழுதியிருந்தார்,அதிலயும் கதாநாயகன் இதுபோலவே மூன்று கொலைகளைச் செய்து விட்டு நகரின் மணிக்கூண்டில் ஏறி ஒளிந்துகொண்டு அத்தனை களேபரங்களும் அடங்கிய பின்னர் அமைதியாக இறங்கி வந்து தன் வழமையான வாழ்க்கையைத் தொடங்குவான் , அதுபோலவே இந்தக் கதையும் அமைந்திருக்கிறது.
Star Value இல்லாதது ஒரு பெரிய குறை படத்திற்கு.எத்தனை அழகான பெண்கள் வந்து சென்ற போதிலும் யாருக்கும் பெரிதாக தமது திறமை காட்ட வாய்க்கவில்லை. அவர்களில் ஒருவர் கூட நம் மனதில் நிற்கவில்லை.விஜய் ஆண்டனியே படம் முழுக்க வியாபித்திருக்கிறார்.
இந்த ‘நான்’" பார்க்கும் அனைவருக்குள்ளும், மிகச்சரியான தவறேயில்லாத திரைக்கதையினால் ,எத்தனை தவறு செய்தாலும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தினால் தப்பிக்க வழியுண்டு என்ற ஒரு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. திரைப்பட அரங்கை விட்டு வெளியே வரும்போது அதை அங்கேயே விட்டுவிட்டு வருதல் மிகவும் நலம்...
.