Saturday, July 9, 2011

ஒரு நாள்

காட்சி இதழில் வெளியான கவிதை


நிறமிழந்து காரை
பெயர்ந்த சுவர்
என்னை முறைத்தது

எப்போதும்
விழுந்து விடும் என்ற
நிலையில்
கதவின் கீல் திருகி
நின்றது

வார் அறுந்த செருப்பு
நடக்கும் போதெல்லாம்
என்னை இழுத்து சென்று
காட்டியது

எனது கண்கள்
ஒரு நகை நட்டு உண்டா
என்ற இல்லாளின்
பார்வையை
விலக்கச்சொன்னது

நேற்று மறந்து போன
பணப்பயிருக்கு இன்று
நீரூற்றிக்கொண்டிருந்த
போது மேற்சொன்ன
இவை யாவும்
நினைவுக்கு வந்தது

அட, இன்னொரு
நாள் கழிந்து விட்டதே
என்று...


.

4 comments:

  1. supper poem..
    congratulation"



    can you come my said?

    ReplyDelete
  2. //அட, இன்னொரு
    நாள் கழிந்து விட்டதே
    என்று...//

    சிலரின் வாழ்கை இதுதான்

    ReplyDelete
  3. நன்றி விடிவெள்ளி...

    ReplyDelete
  4. பலரின் வாழ்க்கை இப்படித்தான் நிரூ,,நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..!

    ReplyDelete