யுவன்-ன் "ஆரவாரக் கானகம்"
திரைப்படத்தின் பின்னணி இசையெனும் இளையராஜாவின் கோட்டையில் தானும் ஜெயித்துக்கொடி நாட்டியிருக்கிறார் யுவன் " ஆரண்ய காண்டத்தில்", யுவனின் பின்னணி இசைக்கெனவே படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தோணுமளவுக்கு.
சண்டைக்காட்சிகள் , மற்றும் ஆக்ஷ்ன் த்ரில்லர் வரிசையில் இளையராஜாவுக்கு ஒரு "உதயம்" படத்தில் ரகுவரன் தோன்றும் காட்சிகளில் வந்த பின்னணி இசை என்றும் மறக்க இயலாதது ,மற்றும் பழஸிராஜாவில் மம்மூட்டி கைகளில் இரும்புப்பட்டா'வைச்சுற்றிக்கொண்டு சண்டை போடும் காட்சியில் சுழலும்போது மட்டும் காற்றை கிழிக்கும் இடம், பின் அந்த அடியை/வெட்டை வாங்கியவர்களின் இயல்பான சப்தம் என வேறொரு பின்னணி இசையுமின்றி அமைத்திருக்கும் காட்சிகள் என குறிப்பாக சொல்லிக்காட்டக்கூடிய இடங்கள் என்றால் யுவனுக்கு இந்த ஆரண்ய காண்டம். அவர் முன்னர் செய்த விஷயங்களைத்தாண்டி வெகு தூரம் பயணித்திருக்கிறார்.க்ரைம் த்ரில்லர் பில்லா'விலும் இது போன்ற பின்னணி இசை அமையவில்லை.பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபடியால் அங்கு பின்னணி பற்றி அதிகம் சிலாகிக்க முடியவில்லை.16 படத்திலும் யுவனின் அந்த மலைப்பாங்கான கிராமீயப்பின்னணி இசை இன்னும் மனதிற்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.
ஆ.கா.வில் அவசியமான இடங்களில் அமைதியும் , தேவையான இடங்களில் பின்னணியில் பாத்திரங்களைச்சுற்றி நிகழும் இயல்பான சத்தங்களும், பின்னர் கதைக்கும் , பாத்திரங்களின் மனநிலையைப்பிரதிபலிக்கவுமாக இசைக்கோவைகளாகப் பின்னிப்பெடலெடுத்திருக்கிறார் யுவன் என்னும் புதிய 'இளைய' ராஜா.
படத்தின் நெடுகிலும் ஓங்கி ஒலிக்கும் மாதா கோயிலின் மணியோசை நடு நெஞ்சை அதிரவைத்து வலுவாக காயப்படுத்துகிறது.படத்தில் இசை மௌனித்துப்போய் அமைதியான இடங்கள் ஏதோ நடக்கப்போகிறது என வெகுவாக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.எங்கு இசை அவசியமில்லை
என்று தீர்மானிப்பவனே நல்ல இசைக்கலைஞன்.!
பசுபதி,கொடுக்காப்புளி,அவனது அப்பா, சிங்கப்பெருமாள்,சப்பை மற்றும் அந்தப்பெண் சுப்பு எனப்பல கதாபாத்திரங்கள் இருந்தபோதும் , அவற்றுக்கென தனி இசைக்கோவைகள் என வைத்துக்கொள்ளாமல் , கதை ஓட்டத்துக்கேற்றவாறு இசை நகர்ந்து செல்கிறது , மேலும் இவ்வாறான இசைப்பயணம் நமக்குப்புதிது,தீம் ம்யூஸிக் என்ற கட்டுப்பாட்டிலிருந்து வெகு தூரம் பயணிக்கும், யாராலும் அருகில் கூட நெருங்க முடியாத ,புதிய இசை.
கொடுக்காப்புளி மற்றும் அவனது அப்பாவின் காட்சிகளில் பியானோவின் தாள கதியில் தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக்கோவை , ராஜாவின் "ஹவ் டு நேம் இட்"டை சிறிது ஞாபகப்படுத்தியபோதும் நம்மை ஒன்றிப்போகச்செய்கிறது,சேவல் சண்டைக்கான இசைக்கோவை , சில நாட்களுக்கு முன் அதே கருத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தின் இசையை வெகு எளிதாக கடந்து செல்கிறது.
மேலும் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் வந்த இசைக்கோவைகள் இங்கே..!
ஐ வில் ஹைட் இட் ( I Will Hide It )
படத்தின் மையக்கருவை முழுதும் உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப இசையமைப்பது என்பது இளைய ராஜாவுக்கு மட்டுமே வாயத்த ஒன்று நானறிந்தவரை.எனினும் இசையில் பல படிகளை வெகு சுலபமாக ஏறிக்கொண்டிருக்கும் யுவனுக்கு இது ஒரு மணி மகுடம்.விருதுகள் பல உலக அரங்கில் குவிக்கப்போகும் யுவனுக்கு இந்தச்சின்னப்பயலின் அன்பு வாழ்த்துகள்...!
.

mp3 பாடல்களை பிளாக்கில் தாங்கள் இணைத்திருப்பது போல் இணைப்பது எப்படி என்று எனக்கு தெரியப் படுத்த முடியுமா?. தங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை.
ReplyDeleteசேக்காளி , வருகைக்கு நன்றி.. mp3 எம்ப்டிங் லின்க் உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
ReplyDelete