Saturday, June 11, 2011

தொட்டுத்தொடரும் ஒரு ஜீன்ஸ் பாரம்பரியம்.

கீற்று இதழில் எனது கவிதை


என் பாட்டியின் ஜீன்ஸ்
நிறமிழந்து நிறமிழந்து
கொள்ளை அழகு
கூடிவிட்டது

என் அம்மாவின் ஜீன்ஸ்
என்னால் தான்
போட்டுக்கிழிக்கப்பட்டது,
டிஸ்ற்றெஸ்டு ஜீன்ஸ்
அருமை என எனது
தோழிகள் கொண்டாடுகின்றனர்.

சோழமன்னரின் அந்தப்புர
அழகிகளும் அதே ப்ராண்டு
ஜீன்ஸையே அணிந்து வந்தது
சமணர் இடுகைகளில்
காணக்கிடைக்கிறது.

என் மகளும் அதே
பாரம்பரிய ஜீன்ஸைத்தான்
விரும்புகிறாள்.

தொட்டுத்தொடரும் ஒரு
ஜீன்ஸ் பாரம்பரியம்.



.

No comments:

Post a Comment