திண்ணை'யில் எனது கவிதை
தனக்குத்தானே உருகிக்கொள்வது,
பின் தேற்றிக்கொள்வது,
நடந்தவற்றை மறுகோணம்
கொண்டு பார்ப்பது,
இப்படி நடந்திருந்தால் நான்
எப்படியோ இருந்திருப்பேன்
என்று நினைத்துக்கொள்வது,
ஏற்கனவே நடந்தவற்றில்
தனக்கு பிடித்த வகையில்
முடிவுகளை மாற்றி வைத்துக்கொண்டு
மனதிற்குள்ளேயே மகிழ்ச்சி கொள்வது,
பின் அதைப்பற்றி பலரிடம்
பெருமையாகப்பேசுவது
போல நினைத்துக்கொள்வது,
கடைசியில் மாய்ந்து மாய்ந்து
அதைப்பற்றியே
கவலை கொள்வது,
- இவை எல்லாம்
எதற்கான அறிகுறிகள்?!
.
தனக்குத்தானே உருகிக்கொள்வது,
பின் தேற்றிக்கொள்வது,
நடந்தவற்றை மறுகோணம்
கொண்டு பார்ப்பது,
இப்படி நடந்திருந்தால் நான்
எப்படியோ இருந்திருப்பேன்
என்று நினைத்துக்கொள்வது,
ஏற்கனவே நடந்தவற்றில்
தனக்கு பிடித்த வகையில்
முடிவுகளை மாற்றி வைத்துக்கொண்டு
மனதிற்குள்ளேயே மகிழ்ச்சி கொள்வது,
பின் அதைப்பற்றி பலரிடம்
பெருமையாகப்பேசுவது
போல நினைத்துக்கொள்வது,
கடைசியில் மாய்ந்து மாய்ந்து
அதைப்பற்றியே
கவலை கொள்வது,
- இவை எல்லாம்
எதற்கான அறிகுறிகள்?!
.
No comments:
Post a Comment