Friday, May 27, 2011

நிர்வாணா

கீற்று /உயிரோசையில் வெளியான கவிதை

எனது கழிவறையை
நானே கழுவுகிறேன்

அவ்வப்போது
உண்ணா நோன்பிருக்கிறேன்
உடல் மெலிவதற்கு

பருத்தி ஆடைகளை
தேடி அணிகிறேன்
வெய்யிலைத் தணிக்க

கழி ஒன்று வாங்கி
வைத்திருக்கிறேன் பாசத்தில்
வழுக்காமலிருக்க

உடம்பிலுள்ள உப்புக்கென
துள்ளல் நடையும் பயில்கிறேன்

எத்தனை முறை அடி விழுந்தாலும்
அனைத்தையும் வாங்கிக்கொண்டு
அமைதியாகத்தானிருக்கிறேன்

இனமே அழிக்கப்பட்ட போதும்
வன்முறை தீர்வாகாது
என்று கூறித்திரிகிறேன்

இப்போது
அரையினும் கூடுதல்
நிர்வாணம் காண்பித்து
சுதந்திரமும் வேண்டி நிற்கிறேன்

யார் சொன்னது
நான் காந்தியை
மறந்து விட்டேனென்று..?! 



.

2 comments:

  1. //இப்போது
    அரையினும் கூடுதல்
    நிர்வாணம் காண்பித்து
    சுதந்திரமும் வேண்டி நிற்கிறேன்

    யார் சொன்னது
    நான் காந்தியை
    மறந்து விட்டேனென்று..?! //

    ஒவ்வொரு வரியும் சொல்லி நிற்கின்றது!அருமை! நல்லதொரு ஒப்புமை! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. நன்றி சுப்ரஜா, உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..! :-))

    ReplyDelete