Wednesday, August 25, 2010

பிடித்தம்... பிடிக்கவில்லை!



யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த என் ஆறு கவிதைகள்

நன்றி
யூத்ஃபுல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/chinnapayalpoem250810.asp


பிடித்தம்
பிடித்தம் போக
கைக்கு என்ன வரும்?
பிடித்தம் போனால்
கைக்கு எதுவும் வராது.
அவள் கேட்டது என்
சம்பளத்தை
நான் சொன்னது
என் காதலை
*
வலைமனை
என்னோடு வா
என் வலைப்பூ
வரைக்கும்
என் இடுகையைப் பார்
என்னைப் பிடிக்கும்..!
*
தப்பு... சரி!
நான் செய்த தப்புகளை
மட்டும் பார்க்காதே
எத்தனையோ 'சரி'
செய்திருக்கிறேன்
பார் என்றேன்
எல்லாமே தப்பு
தான் என்றாள்
அப்ப சரி' என்றேன்.
*
நினைவுகள்
பறக்கும் பறவைகளை
எண்ண முயற்சித்ததில்
கழிந்தது மாலை...
பல தடவைகள்
மீளப் பறந்து வரும்
பறவைகளை மீண்டும்
மீண்டும் எண்ண
கடந்து சென்றவையே
திரும்ப வந்தது
போலிருந்தது.
எண்ணி மாளவில்லை
என் நினைவுகளையும்
பறவைகளையும்.
*
பிடிக்கவில்லை
பிடித்தவை எல்லாம்
பிடிக்காமல் போகிறது
கொஞ்ச நாளில்
பிடிக்காதவையும்
பிடிக்கும் வரை.
*
காற்று
காற்றாடியிலிருந்து
காற்று வரவில்லையே
என்ற கவலை எனக்கு.
*


.

8 comments:

  1. நினைவுகள் அருமை.. எல்லா கவிதையும் நல்லா இருக்குங்க :)

    ReplyDelete
  2. //////பிடித்தம்
    பிடித்தம் போக
    கைக்கு என்ன வரும்?
    பிடித்தம் போனால்
    கைக்கு எதுவும் வராது.
    அவள் கேட்டது என்
    சம்பளத்தை
    நான் சொன்னது
    என் காதலை
    /////


    இன்றையக் காதல் எதிர்பார்ப்புகளுக்கு அடிமையாகிபோனதோ ! கவிதைகள் அனைத்தும் நல்ல இருக்கு . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @கண்ணன்
    நன்றி, வருகைக்கும், வாழ்த்துக்கும்

    @சங்கர்
    :-)

    ReplyDelete
  4. எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு. இப்படி எழுதுறவங்க நான் எழுதுனதையும் படிச்சீங்கன்னு தெரிஞ்சதுல ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete
  5. @பின்னோக்கி
    நன்றி, என் பூவைப்பார்க்க வந்ததுக்கு
    உங்களோட ஹைக்கூ எல்லாமே நல்லாருக்கு...
    பேர் கொஞ்சம் வித்தியாசமா..ஏன் ...பின்னோக்கி ?

    ReplyDelete
  6. ம்..ஆறும் அருமையா இருக்குங்க ...

    ReplyDelete
  7. எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு ராம்.. "பிடித்தம்" எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது :)

    ReplyDelete
  8. எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு ராம்.. "பிடித்தம்" எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது :)

    ReplyDelete