Showing posts with label அண்ணா ஹஸாரே. Show all posts
Showing posts with label அண்ணா ஹஸாரே. Show all posts

Friday, April 8, 2011

அண்ணா ஹஸாரே



என்ஜினீயரிங் காலேஜ்
சீட்டுக்கு தகுதியில்லாததால்
ஐந்து லெட்சம் கொடுத்து
சீட் வாங்கினேன்

சாதிச்சான்றிதழ் கிடைக்க
தாசில்தார் அலுவலகத்தில்
பெரும்புள்ளிகளை இனம் கண்டு
அவர்களைக்குளிர்வித்து
விரும்பிய சாதியை
நிரப்பி சான்றிதழ்
பெற்றுக்கொண்டேன்

அரசு வேலைக்கு விண்ணப்பித்து
கிடைக்காததால் நெருங்கிய
உறவினர் உதவி கொண்டு
எம்.பி.யைப்பிடித்து அவருக்கும்
கணிசத் தொகை கொடுத்து
வேலையும் வாங்கிவிட்டேன்

நல்ல கிம்பளம் கிடைக்கும்
துறை பார்த்து , அங்கங்கு
வெட்டவேண்டியதை தாராளமாக
வெட்டி அந்தத்துறைக்கே
என்னை மாற்றிக்கொண்டேன்

இதோ இன்று
அண்ணா ஹஸாரே'வின்
உண்ணாநிலையை ஆதரிக்கச்
செல்லும் வழியில்
ஒரு வழிப்பாதையில் சென்று
அதை மறைக்க ஐம்பது ரூபாய்
ட்ராஃபிக் போலீஸுக்கு
கொடுத்து சரிக்கட்டினேன்

ஏதோ
கரப்ஷனை ஒழி[ளி]க்க
என்னாலான
உதவி.


.