Thursday, March 16, 2023

வழிநெடுக காட்டுமல்லி

 


கூட வருவியா?’ வால்மீகி படத்துல வந்த பாலா ஷிண்டே (இவரும் மராத்தி பாடகி தான் ) பாடல் தான் இப்ப ‘வழிநெடுக காட்டுமல்லி’யா சுத்திக்கிட்டு இருக்கு :). அந்த ஞாபகமே வந்துவிடக்கூடாது என தாளக்கட்டினை மெதுவாக்கி இசைத்திருக்கிறார். இங்க வேகம் கம்மி ,,அவ்வளவுதான்.

ஒரு அடர் கானகத்தின் பின்னணியிலான இசை
. மெதுவாக வருடிச்செல்லும் மழைச்சாரல் போல. க்ஸைலஃபோனின் தாளம் (இப்ப வெகுவாக எல்லோருக்கும் தெரிந்த ஐஃபோனின் டீஃபால்ட் காலர் ட்யூன்..!) இங்கு 01:47 லிருந்து தொடங்கி 02:04 வரையிலான இடையிசையில் அந்த க்ஸைலஃபோனின் தாளம் கேட்கலாம் ..!

இந்தப்பாடலைக்கேட்ட நாள் முதல் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தது அதனின் மூலம், இருப்பினும் அத்தனை விரைவில் சிக்கி விடவில்லை அந்தக் ‘கூட வருவியா?’ சிறிதே கிளறிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு வாரமாகத்தேடியலைந்து ’எங்கூட வருவியா? என்று வந்து சேர்ந்தது.

அவர் வேலையை அவர் செய்துகொண்டிருக்கிறார். விமர்சனங்களை எதிர்பார்த்து அல்ல. அவரைப்பழிப்பதால் இவர்களுக்கு கூடுதல் விருப்பக்குறிகளும், இரண்டுநாட்புகழும் தவிர வேறேதும் கிட்டப் போவதில்லை. ஐயா நீங்க பாட்டு இசைத்துக்கொண்டேயிருங்க.. அந்த சிம்ஃபொனி பற்றியும் விரைவில் செய்தி தாருங்கள் ..! நன்றி #காட்டுமல்லி



No comments:

Post a Comment