சில்லா சில்லா,,, செமப் பாட்டூ.. அஜித்துக்கு இப்டி குத்தாட்டம், இல்ல ராவடி பாட்டெல்லாம் செட் ஆகறதேயில்லை. ஏன்னா அவர் சரியா ஆடமாட்டார்.! தம்பி போட்ட ’ஆலுமா டோலுமா’ அப்புறம் ஹாரிஸ் இசைத்த ‘அதாரு இதாரு’ அப்பால அப்டியே பின்னாடி போய் நம்ம பரத்வாஜ் இசைத்த ’தீபாவளி தல தீபாவளி’ (இது எஸ்பிபி பாடினது..!) , அப்புறம் யுவனின் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ எல்லாமே பாடல் நல்லாருந்ததால தான் கேட்டோம். கொஞ்சம் ஆடவும் வேணும்லா. இங்கயும் பாட்டு கெளப்பிருக்கு, ஆனா என்ன ஐயா அஜீத்து ஆடணும் அதான் அவ்வளவு பெரிய உடம்பை வெச்சுக்கிட்டு தெலுகுலோ சிரஞ்சீவி ஆடுவார். அற்புதமா இருக்கும் !
ஜிப்ரானுக்கு இது முதல் குத்துசாங்குன்னு நெனக்கிறேன். இறங்கி அடிச்சிருக்கார். சம்மதிக்கணும்! தம்பி தான் செட்டாவான்னு அனிரூத்தையே பாட வெச்சது ரொம்ப சரி. (கொஞ்சம் ஜலபுலஜங்கு ஸ்டைல்ல பாட்டு. ) வரிகள் இப்ப வர்ற ‘ப்பொயட்டு’ கள விட நல்லாவே இருக்கு. வைசாகா’ஆ...!
புடிச்சத செய்யுறது
என்னைக்குமே மாஸ்!
தினம் தினம் முக்கியம் பா
நம்ம இன்னர் PEACE!
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
இதுல ’கில்லா’ங்கறது இந்திச்சொல் (உருதும் கூட). கோட்டை எனப் பொருள்படும். லால் கிலா (ரெட் ஃபோர்ட்) .. மாஸ் பீஸ் சில்லா கில்லா ரைமிங்!. எலெக்ட்ரிக் கிட்டார் பேஸ்டு பாடல். இடையிசையிலும், முகப்பிலும் பின்னி எடுக்கிறது கிட்டார். சந்தோஷ் ரஜினிக்காக ஒரு ’நெருப்புடா’ போட்டார், இதே எலக்ட்ரிக் கிட்டார பேஸா வெச்சு. ஒரு மாஸ் குடுக்கும் அதான். தெறிக்கும் சும்மா. ஜிப்ரானின் 50 போலருக்கு... வாழ்த்துகள்.!
No comments:
Post a Comment