Sunday, April 4, 2021

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல்

 

ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல் (Artificial Intelligence and Machine Learning - AIML ) ரோபோக்கள். 
 
2016ல் அமேசான் இது போன்ற ஒரு ரோபாட்’டை அறிமுகப்படுத்தியது. அந்த ரோபாட்’டிற்கு ட்ரெயினிங் கொடுக்கவேண்டி தமது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களின் லிஸ்ட்டைக் கொடுத்து இன்ன மாதிரியான வேலைக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிப் பணித்தது. அத்தனை பேரும் ஆண்களாக மட்டுமே அது தேர்வு செய்து கொடுத்தது. தகுதியான அறிவுள்ள எம்ப்ளாயீஸ் என முடிவுசெய்து கொடுத்த ஆட்கள் எல்லாரும் ஆண்கள் மட்டுமே..! இந்த ஒரு தலைப்பட்சமான முடிவை மாற்ற அமேசான் தமது நிரல்களில் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் வீணாகி பின்னர் அந்த ரோபோ’வை நீக்கியேவிட்டது அமேஸான்.
 
முகத்தின் நிறத்தையும் அதன் அமைப்பையும் பார்த்து பிரித்தெடுக்கும் ரோபோட்கள் இதே போல காவற்துறை பயன்படுத்திய ஒரு ரோபோ, கறுப்பர்களை எவ்வித தயக்கமுமின்றி வகைப்படுத்தியது குற்றவாளிகள் என. பின்னர் காவல் துறைக்கு அதிலிருந்த பிழைகளை நீக்க பகீரதப் பிரயத்னம் செய்ய வேண்டியிருந்தது. கூகிள் இது போன்ற ஒரு தலைப் பட்சமான முடிவுகளை எடுக்க வைத்த ஒரு ப்ரோக்ராமரை வேலையை விட்டு தூக்கி விட்டது. இருப்பினும் என்ன காரணம் என்று வெளியே சொல்லவில்லை.
 
எனினும் ரோபோட்களைப் பயன்படுத்தி இந்த மாதிரி முடிவுகளை எடுத்த நிறுவனங்களுக்கு நெகட்டிவ் மார்க்கெட்டிங்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக அழகிகளை தேர்ந்தெடுக்க உருவாக்கப்பட்ட அல்காரிதம் வெறும் வெள்ளை இனத்துப் பெண்களை மட்டுமே அழகிகள் என போட்டிக்கு அனுப்பி வைத்தது. 
 
இதேபோல ஒருமுறை வங்கியில் கடன் வேண்டி விண்ணப்பித்தவர்களை வகைப்படுத்த அவர்களின் பின்புலத்தை வைத்து நிராகரித்து விட்டது. பலருக்கு கடன் கிடைக்காமற் போனதிற்கு காரணம், அவர்களின் சம்பளம் மற்றும் ஸ்டேட்டஸ ஆஃப் லிவிங்கை வைத்து நிராகரித்தது தெரியவந்தது.
ரோபோட்களுக்கு கொடுக்கப்படும் டேட்டாபேஸில் தான் பல பிழைகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் மனிதர்களால் தொகுக்கப்பட்டவை ஒரு காலத்தில், அதையே தரவாக வைத்துக்கொண்டு முடிவுகள் எடுக்கப் பணிக்கும்போது செயற்கை நுண்ணறிவு கூட மழுங்கித்தான் போகிறது. ஒரு தலைப்பட்சமான( பயாஸ்டு) முடிவுகளையே எடுக்கின்றன. #AIML

No comments:

Post a Comment