பார்வதி கேரக்டர் பேபீஸ் டே அவுட்( பணிப் பெண்ணிடம் கதை கேட்ட சிறு குழந்தை ஒவ்வொரு இடமாகச்செல்லும் அதே இங்கு பார்வதி செய்வார்) , துல்கர் கேரக்டர் டார்ஸான் ( அழிவின் விளிம்பில் இருக்கும், கைவிடப்பட்ட அத்தனை விலங்குகளையும் தாமே உருவாக்கி வைத்திருக்கும் சரணாலயத்தில் கொணர்ந்து சேர்ப்பார் ) என ரெண்டும் கலந்த கலவை சார்லி. அற்புதமான மேஜிக்கல் ரியலிஸமாக பரிணமித்தது அங்கு அதற்கேயுரித்தான ‘ரா’ வான வடிவத்தில்.. சின்னச்சின்ன வேடத்தில் வருபவரும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள். சுவரில் அந்த ஒரு பற்றுக்குறடு தொங்கும் காட்சி மானின் கொம்புகளை உணர்த்தும். துல்கரின் வீட்டில், அதை தொட்டுப்பார்த்து விட்டுச்செல்வார் பார்வதி. எத்தனை பேர் கவனித்தனர் என்று தெரியாது.. மேலும் முதலில் வந்திறங்கும் பார்வதியை தலை முழுக்க பூந்தொட்டியைக் கவிழ்த்துக் கொண்டு பைக்கில் ஓட்டிச்சென்று கொண்டு சேர்ப்பார் துல்கர். இப்படி ஒவ்வொரு காட்சியுமாக இழைத்திருப்பர் சார்லியில். வண்ணக் குழம்புகள் அள்ளித்தெளித்து ஒரு ஓவியனின் சித்திரங்களாக படம் முழுதும் விரவிக்கிடக்கும்.
அடிப்படை நிகழ்வுகளை “மாறா”வில் மாற்ற(றா)’ வில்லை தான் இருப்பினும் மூலத்தின் சிலிர்ப்பில் ஒரு துளி போலும் இல்லை இங்கு, திருடனும் துல்கரும் ‘போர்த்து’ கழிப்பர் (பன்றிக்கறி). இப்படியெல்லாம் சமரசம் செய்து கொண்டு மூலத்தை ஏன் அழிக்க வேணும்? சார்லியில் அகில உலக அபிநய சரஸ்வதி பராசக்தி பார்வதி’யின் வேடத்தில் ஒரு வில்லி போன்ற முகத்தில் ஒரு கதாநாயகி இங்கு. இத்தனை சீரியஸான ஒரு பாவம், தேவையா? உள்ளத்தில் முகிழ்க்கும் ஆவல் கண்களில் தெரிய வேணும் அம்மணி! இத்தனை வயதான ஒரு தலைவன், களைப்பு உடலிலும் முகத்திலும் மண்டிக்கிடக்குறது மாதவனுக்கு. போது மய்யா உங்க பொங்கச்சோறு! #என்றும்மாறாச்சார்லி
No comments:
Post a Comment