Wednesday, October 7, 2020

கடைசி வரை - பாவண்ணனின் சிறுகதை

 

பாவண்ணனின் சிறுகதை ’கடைசி வரை’ வாசித்தேன் பதாகை இணைய இதழில். அத்தனை விவரிப்புகள் அத்தனையும் காட்சிக்கோவையாக மனதுள் வந்து நிற்கிறது. ஒரு எழவு வீட்டை இவ்வளவு அட்சர சுத்தமா விவரிக்க முடியுமா ? பேண்டு வாத்திய குழு, பறையடிப்பவர்கள், உறவுக்காரர்கள் ஊர்க்காரர்கள் , அவர்களுக்கிடையேயான உரையாடல் எதிலும் செயற்கை இல்லை. அந்த பேண்டு குழுவினரின் பாடல் தெரிவுகள் அபாரம்.  அண்ணனுக்கு இந்தப்பாடட வாசிச்சாதான் தூக்கமே வரும். வாசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கலைஞனாக மட்டுமே அந்த சூழலில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கிளாரினெட் கலைஞர். ஹ்ம்...அற்புதம்.

ஒரு முதுமையடைந்த  கீதாரி’யின் இறப்பு. மகன்கள் யாருமில்லை மூன்று மகள்கள் மட்டுமே. அத்தனைபேரையும் மணமுடித்துக்கொடுத்து விட்டு வயது மூப்பில் இறந்து போகிறார். துணைக்கென யாருமில்லை. சந்தையில் கிடைத்த ஒரு சிறுவன் மட்டுமே துணை.அவனுக்கோ ஒரு விபரமும் தெரியாது. அவர் இறந்தது கூட. கடைசி மயானக்காட்சிகள் எல்லாம் கண்ணுக்குள் நிற்கின்றன. முடிவு என்னவோ எனக்கு சம்மதமில்லையெனினும்  விவரித்த விதம், ஊர்க்காரர்கள்,பேண்டு வாத்திய கோஷ்டி தேர்நீர் கொண்டுவந்து கொடுக்கும் சிறுவர்கள் என அப்படியே ஒரு இழவு வீட்டின் கோலங்களை காட்டுகிறது.

https://padhaakai.com/2020/10/05/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/


 

No comments:

Post a Comment