Friday, April 17, 2020

அங்க்ரேஸி மீடியம்


இர்ஃபானின் படங்கள் கொஞ்சம் பார்க்கப்பிடிக்கும் எனக்கு. கடைசியாகப்பார்த்தது மதாரி (ஹிந்தி), சிங்கிள் பேரண்ட்டாக நடித்திருப்பார். அந்தப்பையன் மேம்பாலம் இடிந்து விழுந்து இறந்து போவான். டெல்லியில் அப்போதெல்லாம் நிறைய பாலங்கள் இடிந்து விழுந்து பலர் மரணித்தனர் சாலைகளில். அப்படி ஒரு விபத்தில் இறந்த தம் மகனைப்பார்க்க மருத்துவமனை செல்வார். மேம்பால இரும்பு கர்டர்கள் விழுந்து பள்ளிசெல்லும் சிறுவனை நசுக்கி கொன்றுவிட பையில் போட்டுத்தரவா இல்லை மூட்டையாக கட்டித்தரவா என மருத்துவமனையில் கேட்பர். உடைந்து போவார் இர்ஃபான். அப்படி ஒரு கேரக்டர் அவருக்கு,

இப்ப அங்க்ரேஸி மீடியம் பார்த்தேன். கரோனா ப்ரச்னையில் தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருந்த படம் இணையத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. இதுலயும் அதே சிங்கிள் பேரண்ட். மனைவி குழந்தை பெற்றுவிட்டு இறந்துவிட இவர் ஒற்றைக்கு வளர்க்கிறார். இன்னொரு கல்யாணமேன் பண்ணலை ? தெரியலை. பொண்ணு மாடர்னா வளருது, லண்டன்லதான் போய்ப்படிப்பேன்னு அடம் புடிக்கிது. இதுல பங்காளி சண்டை. மிட்டாய்க்கடை பெயர் யாருக்கு பாத்தியதைன்னு. கோர்ட் கச்சேரி,ராத்திரி பார்ட்டில ஜட்ஜுக்கு ரோலக்ஸ் வாட்சு குடுத்து தன்னக்கட்டினத பங்காளி உளறிவிட எல்லாம் போச்சு. ஸ்கூல் பிரின்ஸிப்பிள் கணவர் தான் ஜட்ஜ். இர்ஃபான் மேடையிலயே போட்டுக் குடுக்க பயணம் பணால். அதுக்கப்புறம் செம இளுவை. ஏகத்துக்கு செண்டிமெண்ட். இண்டியன் கலாச்சாரம் கழிசடைன்னு எல்லாம். பதினெட்டு வயசுல தானா சம்பாதிச்சு தன்னைக் காப்பாத்திக்கணும்னு எல்லா வெளிநாட்டு பிள்ளைகள் போல இந்தப்பொண்ணும் நினைக்குது, அது மாதிரியே செய்ய ஆரம்பிக்குது.

அவர் கூட நடிக்கும் பங்காளி தீபக் (இவரும் நாடக நடிகர்) அற்புதம். விட்டால் இர்ஃபானையே தூக்கி சாப்பிட்டு விடுவார் போலருக்கு. (’தனு வெட்ஸ் மனு’வில் நடித்திருப்பார்.)


இதுல என்ன கூத்துன்னா கரீனா கபூர், டிம்பிள் கபாடியா எல்லாரும் இந்தப்படத்தில நடிச்சிருக்காங்க. மார்க்கெட் இல்லாம எம்புட்டு காஞ்சு கெடப்பாங்கன்னு இதுலயே தெரியுது. ’பதினெட்டு வயசுல தானா சம்பாதிச்சு சொந்தக் கால்ல நிக்கிறதுல்லாம் செரிதான் அதே அதுக்காக அப்பப்ப அம்மாஅப்பாவ பாக்கக்கூட வரக் கூடாதுன்னு இல்லயே’ இந்த ஒரு இடம் வசனம் தான் கொஞசம் கெத்து இர்பான் பேசுறதுல. அப்புறம் அந்தப்பொண்ணு எனக்காக இவ்வளவுல்லாம் பண்றியே இந்தப்படிப்பே வேணாம்னு சொல்லிட்டு ராஜஸ்தானுக்கே அப்பாவ கூட்டிட்டு வந்திருது எதிர்பார்த்த மாதிரியே. 

ஒரேமாதிரி கேரக்டர், டயலாக் டெலிவரி தண்ணியடிச்சு மப்புலயே செருகிக்கெடக்கிற கண்கள். சலிக்குது இர்ஃபான். நஸ்ருதீன் ஷா, ஓம் புரி போன்றவர்களின் கதாபாத்திரங்களை எடுத்து அபிநயிக்கக் கூடியவர் இர்ஃபான். தோற்றமும் அதற்கு இடம் கொடுக்கும், ஸப் வேஸ்ட் ஹோகயா இதர் #அங்க்ரேஸிமீடியம்

No comments:

Post a Comment