Thursday, September 6, 2018

'செக்கச்சிவந்த' மழைக்குருவி




ரஹ்மானின் ’மழைக்குருவி’ இங்கு கீச்சிடுகிறதா மக்களே… நல்ல ஃபாஸ்ட் டெம்ப்போல இருக்கிற இந்தப்பாட்ட அப்டியே தூக்கி ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டியேப்பா ..! என்னடா எங்கயோ கேட்டப்போலவே இருக்கேன்னு ஒரே ரோசனை தான் :) நாள்ப்பூஊரா ... :)

மழைக்குருவி, எங்கோ கூவ ஆரம்பித்து எங்கு முடிப்பது எனத்தெரியாமல் அநிருத் சந்தோஷின் காட்டுக்குள் வழி மறந்து அலைகிறது பாவம். எப்டீல்லாம் இருந்த மனுசன். சரி ஃபீல்டவுட் வைரமுத்து வரிகளை அடைகாத்துத்தானே ஆகவேண்டும். இவால்லாம் செத்த ஒதுங்கி ஓரமா ஒதுக்குப்புறமா இருந்து என்ன நடக்குது எண்டு பாத்துக்கிட்டு சொம்மா இருந்தாதான் என்ன ? அய்யனார் கோவில்ல பூசாரி மெதுவா ஆரம்பிப்பார் பயந்துகிட்டு அது மேரி ஆரம்பிக்கிறார் ரஹ்மான்.

“நான் இயற்கையில் திளைத்திருந்தேன்’ என்னா வைர வரிங்ணா..?! அடப்பாவமே.. ”கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து  பேசின பேச்சரவம் கேட்டிலையோ?  பேய்ப்பெண்ணே!”  திருப்பாவை’யை விட்டொழிங்க முத்து. ஏற்கனவே ஆண்டாள்கிட்ட வாங்கிக்கட்டினது போறாதா?!

சரணம் பல்லவின்னு ஒரு வேறுபாடின்றி, மொத்தமே வசனங்களை வாசித்து விட்டுப்போவதற்கு பாட்டு எதற்கு? தாளம் தன்னால் பின்னில் இசைக்கிறது, அதோடு எங்கும் பொருந்தாது வரிகள் செல்கிறது. கேட்கக்கேட்க இன்னமும் தப்பித்தான் போகிறது ரஹ்மான். 01:53 லிருந்து விலகல் ஆரம்பிக்கிறது. 03:04 ல் பாருங்க எங்க போனார்னு தேடத்தான் வேணும்.ஒரு போதும் திரும்பி வர அவரால் இயலவில்லை.

தேநீக்கள் எல்லாம் தம் திரும்பும் வழி மறந்து போகின்றன. எல்லாம் உரங்களும் செயற்கைத் தெளிப்பான்களும் தான் காரணம் என்றறிந்த மோர்கன் ஃப்ரீமேன் அமெரிக்காவில் இதற்கென ஒரு ஆர்கானிக் தோட்டமமைத்து செயற்கை உரம், சோதனைக்கூட தெளிப்புகளின்றி வளர்த்து வருகிறார் தேநீக்களை. அவை தம் வழி தப்பாது இசைக்க, தம் பாரம்பரிய வழியறிந்து கூட்டுக்கு திரும்ப வாழ்நாளில் ஒரு நல்ல விஷயத்தை செய்து வருகிறார். இந்த ரஹ்மான் தேநீக்கும் ஒரு மார்கன் ஃப்ரீமேன் கிடைத்தால் நல்லது.


1 comment:

  1. உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

    ReplyDelete