என்னய்யாது நாட்டுல என்னென்னவோ நடந்துக்கிட்டிருக்குது , நீ பாட்டுக்கு
சிப்பிச்சரம், வேளாங்கன்னி கருந்துளைன்னு சம்பந்தமில்லாம போஸ்ட்
போட்டுக்கிட்டிருக்கன்னு உட்பெட்டியில் பல அங்கலாய்ப்புகள். நானே இங்க நியூ
இயர் பார்ட்டி எல்லாம் கேன்ஸலாயிப்போச்சேன்னு கவலைல
உக்காந்துக்கிட்டிருக்கேன். இவா வேற எடைல வந்து கடுப்புகளை
கிளப்பிக்கொண்டிருக்கிறாங்கள்.
சரிய்யா, சொன்னத செஞ்சிருக்கார் அவ்வளவுதானே.? இப்ப என்ன? ஆட்சிக்கே வந்துட்டாப்ல குதிக்கணுமா ?,, தேர்தல், பரப்புரை, உள்ளடி வேலைகள், 20 ரூபா நோட்டு,சின்னம் கொடின்னு பல வேலைகள் இன்னும் இருக்கே அதுக்குள்ள ஏன் அவசரப்பட்டு கருத்து சொல்லணும்னு இருந்தேன். கிளப்பி விட்றீங்களேப்பா. சக நடிகர் பேபி ஸ்டெப்ஸ் வெச்சு அருமையா காய் நகர்த்தி,தொடர்ந்து நாட்டு நடப்புகளுக்கு எதிர்வினை, கருத்துகள்னு ராஜபாட்டை போட்டுக்கிட்டிருக்கார். மமதாவையும், கேரள, டெல்லி முக்யமந்த்ரிகளை சந்திச்சும்னு, பாதையை தெளிவுபடுத்தி அவர் வழியில் எந்த குழப்பமுமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

இவர் என்ன செய்தார், காலா ஷூட்டிங்ல சில ஸ்னாப்ஸ்களை வெளிய
விட்டுக்கிட்டு, உள்ளூர் வெளியூர்ல நடக்கிற எந்த விஷயத்தையும்
கண்டுக்காம,எந்தவிதமான எதிர்வினைகளையும் செய்யாது கம்முனு ஞானி மேரி
ஒக்காந்திருந்துக்கிட்டு திடீர்னு மோனத்துலருந்து எழுந்து வந்தா மேரி, 234
தொகுதியும் எனக்கேன்னு கூவினா சிரிக்கிறத தவிர வேற என்ன செய்யமுடியும் ஓய் ?
அனிதா,மீனவர், கர்நாடகால தமிழன தங்கத்தட்டுல ஏந்தி பாராட்டி சீராட்னது,சல்லிக்கட்டு, ஆர்கே நகர் 20 ரூபா, பணமதிப்பிழப்பு, காவிரி தீர்ப்பாயம் , இந்த மேரி எதுக்கும் வாய தொறக்காம சீல் வெச்சிண்டு இருந்துட்டு, இன்னிக்கே கட்சீ,ஆனா கொடி கெட்யாது,கொள்கே கெட்யாது,வாய மூடிண்டு சொம்மாரு, அப்பால பேத்துக்கலாம்னு ,ஆனாலும் 234ம் என்குதான்னு சொன்ன ஒரு கோமாளிக்குத்தான் இது நாள் வரை கோடி கோடியா கொட்டிக் கொடுத்தான் தமிழன். வெக்கமாயில்லயாடா ஒங்களுக்கு ? அடச்சீ. இதுல 'டேக்ட்டனிக் ஷஃபில்'னு பொடன்ட் குருமூர்த்தி சொல்லீட்டார். திராவிடக் கட்சிகளால பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகமே எந்திரிச்சி நிக்கப் போகுதூன்னு கப்ஸா வுட்றார்.
தமிழன தமிழன்தான் ஆளணும், மலயாளிய மலயாளிதான் ....அதப்பத்தீல்லாம் பேசவரல.இது நாள் வரை துரும்பக்கூட கிள்ளிப்போடாத உச்சம், பூரா தமிழ்நாடே எனக்குத்தான்னு மேடைல நின்னு கூவறப்போ கூசுதுடா. ங்கொய்யால.மொதல்ல ஒழுங்கா வரியக்கட்டுங்கடா. அப்பால சிஸ்டர சரிபண்ணலாம்.

Antha variya katrathoda, school vaadagai paakiyayum paisal pannu pakki.
ReplyDelete;) ;)
Delete