Thursday, December 28, 2017

பீலா பீலா’ பீலா பீலா’

பீலா பீலா’ன்னு ஒரு பாட்டு போட்ருக்கான் தம்பி அநிருத் ஆஹா.. சிலோன் ‘பைலா’ மீசங்கி மச்சி. நல்ல ரெட்ரொ. அருமை. ரொம்ப நாளாச்சி இது மாதிரி பாடல் கேட்டு. அவனுக்கு எல்லாம் தெரியுதுடா. :) இதே பைலா’ இசையில் தேவா ரொம்ப நாள் முன்னால ‘சிலோனு சிங்களப்பெண்ணே சிணுங்காதே’ன்னு இசைத்திருந்தார். அப்புறமும் ரொம்ப பிரபலமான ‘சுராங்கனி சுராங்கனி’ சிலோன் மனோகரன் பாடினது தான் இந்தப்பைலா.! இதே பாடலை ராசைய்யா ‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் அப்படியே எடுத்து பயன்படுத்தியிருந்தார் மலேசியா வாசுதேவனைப்பாடவைத்து. வரிகள் மட்டும்.தமிழில்.. 





ஈழத்தில் எழுபதுகளில் பொப்பிசைப்பாடல்கள் ( பாப் இசைப்பாடல்கள் தான் …அஹ்ஹ்ஹ்ஹ்ஹா அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. :) ) வெளிவந்த ‘சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..பள்ளிக்கு போனாளோ ?” என்ற மிகப்பிரபலமான பாடல். எல்லாம் பைலா.! பைலா’ன்னா இசை’ என்றர்த்தமாம் சிங்களத்தில். இறங்கிப்போட்ருக்கான் தம்பி. எந்தவொரு மாற்றமும், இடைச் செருகலும் இல்லாது ஒரிஜினல் ரெட்ரோ. மீளக்கொணர்ந்து கொடுத்திருக்கிறார்.:) கேளுங்கோ கேளுங்கோ…கேட்டுக்கிட்டே இருங்கோ :)

No comments:

Post a Comment