Sunday, June 11, 2017

Its complicated’


கேமிலா கேபெலொ' இவங்க 'ஃபிஃப்த் ஹார்மனி' ட்ரூப்ல ரொம்ப ஆக்டிவா இருந்தாங்கோ :) அப்பால வழக்கம்போல உள்ளுக்குள்ள பூசல் வந்து வெளீலே வந்துட்டாங்க. எனக்கு தீனி போட்றா மாதிரி எந்த வாய்ப்பும் இல்லை கேர்ள் பேண்ட்ல(girl band), அதான் தனிப்பாடல் திரட்டு போட்றேன்னு வெளீல வந்துட்டா. கூட்டத்தோட கோயிந்தா போட்றது யாருக்குத்தான் புடிக்கும் ?!...ஹ்ம்….இந்தப்பாட்டு ராப்'பும் கொஞ்சம் பாப்'பும் சேர்ந்த கலவை. Its complicated’ அப்டீன்னு சொல்றப்போ என்னா குழைவு அவா வாய்ஸ்ல. ஹ்ம்..அனுபவிக்கணூங்ணா. மஷின் கன் கெல்லி ராப்' பாட்றார். கொஞ்சம் ஹிப் ஹாப்' இருந்தாலும் கறுப்பினப் பாடகர்கள் போல அத்தனை அட்சர சுத்தம் இந்த வெள்ளைபயலுஹ கிட்ட இருக்கிறதில்ல. அப்பப்ப அந்தாதி' யும் பாடுவார் , கேமிலா முடிக்கும் வார்த்தையை வேறு ஒலியில்/வேற மாதிரி சொல்லிப்பாடுவார். அருமை.. !

எவ்வளவுதான் இருந்தாலும் 03:02 லயும் 03:04லயும் அந்த ஹஹ்ஹா ஹெஹ்ஹ்ஹே' மட்டும் இல்லாம இருந்தால் பாட்டு எங்கயோ போயிருக்கும். இந்த மாதிரி பாமரத்தனமான செய்கைகளாலதான் பாட்டு நாசமாவது. எல்லாருக்கும் அனுபவம் வர்ற வரைக்கும் இம்மாதிரி தப்பெல்லாம் பண்ணிண்டு தானிருப்பா :) தம்பி அனிருத் இதே மாதிரி தான் அப்பப்ப பண்ணிவெப்பான்.ஹிஹி.. 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' பாட்டுல அத்தனை அருமையான மெலடீல இடைல புகுந்து பாமரத்தனமா 'கத்தாள முள்ளா முள்ளா'ன்னு கிராமிய வரிகளை கொஞ்சமும் இந்தப்பாடலின் அலைவரிசைக்குப் பொருந்தாததை வைத்து ..ஹ்ம்.. என்ன சொல்றது.! அதுக்குத்தான் எக்ஸ்பீரியன்ஸ் வேணூங்கறது :)



____________________________________________________________________________

Sweet Escape


எத்தனையோ காதல் பாடல்கள்..ஹ்ம்.. இந்த வீடியோ சீக்வென்ஸ் பிரமாதம். ட்ராஃபிக் லைட்ஸ்லருந்து சிவப்பு மனிதனும் , பச்சை மனுஷியும் காதலைக்கொண்டாட என்னவெல்லாமோ செய்கிறார்கள். :) பச்சையும் சிவப்பும் எதிர் துருவங்கள்..என்னா ஒரு குறியீடு’'ங்ணா ;) சாலையில் கிடத்தி வைத்திருக்கும் சைக்கிளை உரித்தெடுத்து பயணிக்கின்றனர். அட அடா! 'நத்திங் கேன் ஸ்டாப் அஸ் நவ்' காதலைச்சொல்லும் வழி ட்ராஃபிக் சிக்னல்ஸ் ;)

சைக்கிள் மிதித்து களைத்துப்போகும் போது , சிக்னலில் இருக்கும் பைக், பின்னர் கார் சிம்பல் என ஒவ்வொன்றாக எடுத்து பயணிக்கின்றனர். ஆஹா! மேன் ஹோலைத்திறந்து அனைவரும் பார்ட்டி கொண்டாடுகின்றனர். குதிரைகள், நாய்கள் அனைத்துமென ஒவ்வொன்றாக சிம்பல்களிலிருந்து இறங்கி வந்து ..!!அட.. பாடல் முடிந்ததும் அவரவர் இடத்தில் சிக்னல் பலகைகளில் சென்று அமர்ந்துவிடுகின்றனர்.! #'ஸ்வீட் எஸ்கேப்'

No comments:

Post a Comment