Sunday, August 28, 2016

எனை முத்தமிடு


Kiss Me - Sixpence the Richer

இன்னொரு கிட்டார் பாடல். மறக்கவேயிலாத முழுமையான பாடல். 90களில் வெளிவந்த அற்புதமான பாடல். லீட் கிட்டாரில் இருந்தபோதிலும் , அருமையான பேங்கோஸும், கூடவே பயணிக்கும் அந்த அக்கார்டியனும்( நம்ம ஆர்மோனியம் போன்ற வாத்தியம்) கைபிடித்து கூட்டிச்செல்லும். யாரோ நமக்கு முத்தம் கொடுத்துவிட்ட அந்த தருணத்தைப் போலவே உணர வைக்கும் பாடல்  தொடக்கமே நல்ல Dmajor and D7 chord-ல் (என்று தான் நினைக்கிறேன்) ஆரம்பிக்கும் கிட்டாரின் ஒலி அழுத்தமாக வாங்க முத்தமிடலாம் என அழைத்துச்செல்லும். 0:47ல் திருப்பிக்கொடுக்கும் அந்த கிட்டாரின் கார்ட் என சுகானுபவம்டா... கழுத்தைத்திருப்பி முகத்தை முன்கொணர்ந்து உதடுகளைக்குவித்து என அத்தனையும் அற்புதமான கிரங்கடிக்கும் திருப்பங்கள். Silver moon's sparkling என்ற வரிக்குபிறகு  So kiss me என்று சொல்வதற்குள் ஒலிக்கும் அந்த கிட்டாரின் இனிய திருப்பங்கள்... ஆஹா... அனுபவிக்கணும்டா... இப்ப இந்த க்ரூப் பாடல்கள் ஏதும் வெளிவிடுவதில்லை.90களின் கடைசியில் இவர்களின் ஆதிக்கம் தான். நல்ல மெலடி, பாப் இசை என்ற வகைப்படுத்தப்படினும் அத்தனையும் மெலடி. மென்மையான ஜாஸ் ட்ரம்ஸ்  பாடல் கூடவே பயணிக்கும். பார்க் பெஞ்சில் நெருக்கடித்துக்கொண்டு அமர்ந்து பாடுவது போல ..ஆஹா.. 1:00லிருந்து ஆரம்பிக்கும் அந்த இடையிசை.. ஸொ கிஸ் மீ...ஹிஹி..  இவர்களின் "there she goes", அருமையான பாடல்.!


Oh, kiss me beneath the milky twilight
Lead me out on the moonlit floor
Lift your open hand
Strike up the band and make the fireflies dance
Silver moon's sparkling






#SIACheapThrills

இந்தப்பாடல் செம..அந்தக்காலத்து ப்ளாக் அன் வைட்டில் படமாக்கப்பட்ட இக்காலப்பாடல். (இதிலயே இன்னொரு வெர்ஷனும் இருக்கு,) தமிழ்ல கொஞ்ச நாள் முன்னால கெளதம் சூரியாவையும் சிம்ரனையும் வெச்சு எடுத்திருந்தார். ஐ லவ் யூ மாலினி'ன்னு. வாரணம் ஆயிரம்ல. இங்க இது ஒரு வீடியோ பதிவு போல எடுக்கப்பட்ட பாடல் , அதை அந்தக்கால டீவீயில் பார்ப்பது போல நாலு  இஞ்ச் க்ளாஸிற்குப்பின்னால இருக்கும் அந்த ஸ்கிரீன் , பழைய கால ஷட்டர் மாடல் டயனோரா டீவி போல.. அந்தக்குரலும் காட்சிகளும் பழைய ரிட்ரோ எஃபெக்ட். அவங்க போட்டிருக்கும் உடைகள், மேக்கப் எல்லாம் 50-60களை ஞாபகப்படுத்தும். பாடல் ராப்'பில் இசைத்தாலும் டெம்ப்பொ குறைவாக ராக்-அன் -ரோல் ஆடுவதற்கு வசதியாக இசைக்கப்படுகிறது. ஆண்களின் ஹேர்ஸ்டைலைப் பாருங்களேன்..நம்ம டணால் தங்கவேலு'வின் ஸ்டைலை ஞாபகப்படுத்தும். ஒடிவந்து முட்டியிட்டு பின்னில் சாய்ந்துகொண்டு கிட்டார் இசைப்பது என்ற மூவ்மென்ட்ஸ்கள் எல்லாம் ..ஆஹா..பிரபு தேவா இது போல ஒரு பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். 'மனதை திருடி விட்டாய்' படத்தில்.
#SIACheapThrills

No comments:

Post a Comment