மகளிர் மட்டும், அப்புறம் வீசேகர் எடுத்த சில திரைப்படங்கள்,
பாலச்சந்தரோட சில படங்கள் எல்லாமா சேர்த்து,படம் எடுத்த தன் கதையையும்
சேர்த்து அடிச்சு கொழப்பி வெச்சிருக்கார் கார்த்திக். இத்தனை டெலிகேட்டான
சப்ஜெக்ட்டை போற போக்கல சொல்லிட்டு போயிறலாம்னு நினைச்சிருக்கார்
கார்த்திக். சாரி.எதுவுமே ஒரு ஒழுங்கிலில்லை. நிறைய நல்ல காட்சிகளும்
அதைவிடவும் நிறைய சொதப்பல்களுமா அள்ளித்தெளிச்சா போல படம் வந்திருக்கு.
கோயிலுக்குள்ள இருக்கும் அம்மன் சிலையை வெளிய எடுக்கிற மாதிரிதான் பெண்
விடுதலையும்னு சொல்றார். இவ்வளவு தான் குறியீடு எல்லாம்.
அருள் (சூர்யா) தான் வாழ்ந்திருக்கார். பார்க்கில் விஜய் சேதுபதியுடன்
பேசும் காட்சி கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். இல்ல அருள் உன் படம் வெளிய
வரப்போகுது இன்னும் நல்லா சந்தோஷமா சொல்லு, என்ற காட்சி, பின்னர்
அந்தப்'பாரில் அடுத்த டைரக்டரைப்பற்றி பேசும் காட்சி,your ex would be's
current husband எனும் காட்சி, கமலினிக்கு திருமண நிச்சயதார்த்த
காட்சி,ஒவ்வொருமுறையும் அந்த நர்ஸ் வந்து அதட்டி விட்டுப்போகும்
ஆஸ்பத்திரிக்காட்சி மற்றும் கடைசிக்காட்சிகள் என வாழ்ந்து தானிருக்கிறார்
சூர்யா.வேறு யாரும் நெருங்கவியலாத நடிப்பு.
மொத்தமாவே எல்லா
ஆம்பளைங்களுக்கும் சொல்லி அழறதுக்கு (மட்டும் ) ஒரு பெண் தேவைப்படத்தான்
செய்றா. மூணு பேரும் வடிவுக்கரசியிடம் வந்து சொல்லி அழும் காட்சிகள் அதை
உறுதிப்படுத்துகின்றன. என்னை எவனுமே லவ் பண்ணல, கல்யாணம் ஆகி ஒரு
குழந்தையும் இருக்கு எனச்சொல்கிறார் அஞ்சலி. கல்யாணம் ஆகிவிட்ட விசே'வை
life is just a f&*^ எனக்கூறி திருப்பி அனுப்பும் மலர். அழகுப்பதுமை
கமலினி. நடிக்கத்தான் வரல பாவம்.ட்ரைலர்ல எனக்கு செலின் மாதிரி தெரிந்தது .
எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல அருள், உன்கூட இருக்கிறதா இல்ல
வேண்டாமான்னு சொல்லும்போது மட்டும் பரவால்ல. ஒனக்கெல்லாம் பொண்டாட்டின்னு
ஒருத்தி தேவையாடான்னு சொல்லாத மனைவிகளே தமிழகத்தில் இல்லை.
மழையில்
நனைஞ்சா உடைகள் நனைந்துவிடும்ங்கற அளவிலான சுதந்திரம் பற்றி பேசும்
பெண்கள். படத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் பெண் குழந்தைகளாகவே
இருக்கிறது.
ரொம்ப யோக்கியமா பேசிட்டு கடைசில இவனும்
இப்டித்தானான்னு ஆகும் வலுவான பாபி சிம்ஹா கேரக்டர்.அப்புறம்
அந்தச்சித்தப்பா, பிறகு .சூர்யா குடித்துவிட்டு அழும் காட்சியில்
ராதாரவியின் உடல் மொழி அபாரம்.பிசாசை விட அருமையாகச் செய்திருக்கிறார்.
நீளம் தேவைதான்..இருப்பினும் காட்சி ஒழுங்கின்மையால் போரடிக்கிறது. ஜிகர்
தண்டாவில் நான் லீனியர் திரைக்கதை பேசின கார்த்திக்கா இது .
இந்தப்படத்தையும் அதே நான் லீனியர் திரைக்கதை கொண்டு வடிவமைத்திருந்தால்
எங்கேயோ போயிருக்கும். வழக்கமான திரைக்கதையால் வந்த வினை இந்தச்சலிப்பு.
இத்தனை பேசினாலும் படத்தின் கேரக்டர்களின் பெயர் கொண்டு விமர்சனங்கள்
எழுதப்படுகின்றன, அதுவே படத்தின் வெற்றி. ஆழப்பதியும் கேரக்டர்கள்
நடிகர்களின் பெயரை முந்திக்கொண்டு பேசப்படுமானால் அது வெற்றி தவிர
வேறேதுமில்லை. எடுத்துக்காட்டு 'மெட்ராஸ்', 'ப்ரேமம்' போன்ற திரைப்படங்கள்.
இறைவி என்பதற்குப்பதிலாக 'மனைவி' என்றே பெயரிட்டிருக்கலாம்.
இசை
பேருக்குத்தான் சந்தோஷ் நாராயண். ரெண்டு படம் நல்லா வந்தா அப்புறம்
சொதப்புறார்.கடற்கரையில் பாடும் பாட்டு/சிறைப்பாடல் என ஒன்றிரண்டு மட்டும்
தேவலாம்.
பொண்ணுங்க எப்பவுமே சரியாத்தான் இருக்கிறார்கள். இந்தப்பயலுஹ தான் எப்பப்பாரு தப்பு பண்ணிட்டே இருப்பாங்ய.ஆண் நெடில் பெண் குறில்.
.
No comments:
Post a Comment