புழு தின்னத்தொடங்கும்
சடலத்தின் நாற்றம்
எனக்குள்ளும் இருக்கிறது
சடலத்தின் நாற்றம்
எனக்குள்ளும் இருக்கிறது
-
இரண்டு நிலவுகள்
இருக்கும் வானில்
ஆதவனுக்கு வேலையில்லை
இருக்கும் வானில்
ஆதவனுக்கு வேலையில்லை
-
அவனைப் பைத்தியம்
என்று நினைக்கவேண்டாம்
அழிந்து கொண்டிருக்கும் அவன் மொழியை
தனக்குள் பேசிக்கொண்டிருக்கக்கூடும்
என்று நினைக்கவேண்டாம்
அழிந்து கொண்டிருக்கும் அவன் மொழியை
தனக்குள் பேசிக்கொண்டிருக்கக்கூடும்
-
ஒரு சகமனிதனுக்குரிய
மரியாதை
கிடைத்தால் மட்டும் போதும்
வாழ்ந்துவிடலாம்
மரியாதை
கிடைத்தால் மட்டும் போதும்
வாழ்ந்துவிடலாம்
-
இந்த வெய்யில் சுற்றிவந்து
என் அடுத்த ஜன்னலைத் தொட
இன்னும் ஆறுமாத காலம் பிடிக்கும்
என் அடுத்த ஜன்னலைத் தொட
இன்னும் ஆறுமாத காலம் பிடிக்கும்
-
என் நனவிலி மனதின்
திறவுகோல்
உன்னிடம் இருக்கிறது
திறவுகோல்
உன்னிடம் இருக்கிறது
-
மணற்கடிகாரத்தை
மீளத் திருப்பி வைக்கத்தான்
வேண்டியிருக்கிறது
அனைத்தும் அருமை... சில வரிகள் உண்மைகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஒரு சக மனிதனுக்குரிய ... மிக அருமை ராம்.வாசிக்கயில் சற்று எளிமையாக வரிகள் தோன்றலாம்.ஆனால் மிகப் பொருள் பொதிந்த வரிகள்.அதைக் கொடுத்து விட்டாலே சமச்சீர் சமுதாயம் மலர்ந்து விடும். தொடருங்கள் தோழா..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகீற்று இதழில் வெளிவந்தமைக்கு பராட்டுக்கள்
எனது பக்கம்-நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகு
ReplyDeleteநன்றி ரஞ்சித்மோ :) , தொடர்ந்து வாசியுங்கள்!
ReplyDeleteஹ்ம்...அருண்.. அது தான்..அது தான்
ReplyDeleteரூபன் , அந்த தளத்தில் எனது வலைப்பூவை அறிமுகம் செய்ய எத்தனித்தேன் ...இணைக்க இயலவில்லை..!
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDeleteதுளிப்பா கண்டேன்! களிப்பா உண்டேன்!
ReplyDeleteமிக்க நன்றி புலவர்.
ReplyDelete