Saturday, September 14, 2013

சருகுகள்



ஆறிய தேநீர்

நான் இல்லாமல் போகும்போது
நீங்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொள்வதற்கென
ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறேன்
ஒரு சிறு தேநீர் குடிக்கச் சென்று வரும்
நேரத்திற்குள் அதைப் பார்வையிட்டு விடுங்கள்
ஏனெனில் எனக்கு
ஆறிய தேநீர் அத்தனை பிடித்தமில்லை

சருகுகள்

அது வரை
சப்தமிட்டுக்கொண்டிருந்த
காய்ந்த சருகுகள்
மழை பெய்த ஈரத்தில்
தமக்குள் புழுங்கி
அமைதியாகிவிட்டன
கொஞ்சம் ஈரம்
எல்லா ஆற்றாமைகளையும்
அணைத்துத்தான் விடுகிறது.

வயது

என் வயதைக்கேட்கும்
அனைவரும்
தம் வயதில் இரண்டைக்கூட்டி
வைத்துக்கொண்டு
அதுதானே
என்றே கேட்கின்றனர்
உன் வயதை நான் எப்போதும்
என்னிலிருந்து
இரண்டைக்கழித்து விட்டே
நினைத்துக்கொள்கிறேன்


4 comments:

  1. வயது மனசோடு ஒட்டிக்கொண்டது தோழர் .. மற்ற படைப்புகள் நெஞ்சுக்கு இனியவை .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துகளுக்கு நன்றி.. :) அரசன்.

    ReplyDelete
  3. அழகான வாழ்த்துகள் ஸ்ரீவிஜி :)

    ReplyDelete