ஆறிய தேநீர்
நான் இல்லாமல் போகும்போது
நீங்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொள்வதற்கென
ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறேன்
ஒரு சிறு தேநீர் குடிக்கச் சென்று வரும்
நேரத்திற்குள் அதைப் பார்வையிட்டு விடுங்கள்
ஏனெனில் எனக்கு
ஆறிய தேநீர் அத்தனை பிடித்தமில்லை
நீங்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொள்வதற்கென
ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறேன்
ஒரு சிறு தேநீர் குடிக்கச் சென்று வரும்
நேரத்திற்குள் அதைப் பார்வையிட்டு விடுங்கள்
ஏனெனில் எனக்கு
ஆறிய தேநீர் அத்தனை பிடித்தமில்லை
சருகுகள்
அது வரை
சப்தமிட்டுக்கொண்டிருந்த
காய்ந்த சருகுகள்
மழை பெய்த ஈரத்தில்
தமக்குள் புழுங்கி
அமைதியாகிவிட்டன
கொஞ்சம் ஈரம்
எல்லா ஆற்றாமைகளையும்
அணைத்துத்தான் விடுகிறது.
சப்தமிட்டுக்கொண்டிருந்த
காய்ந்த சருகுகள்
மழை பெய்த ஈரத்தில்
தமக்குள் புழுங்கி
அமைதியாகிவிட்டன
கொஞ்சம் ஈரம்
எல்லா ஆற்றாமைகளையும்
அணைத்துத்தான் விடுகிறது.
வயது
என் வயதைக்கேட்கும்
அனைவரும்
தம் வயதில் இரண்டைக்கூட்டி
வைத்துக்கொண்டு
அதுதானே
என்றே கேட்கின்றனர்
உன் வயதை நான் எப்போதும்
என்னிலிருந்து
இரண்டைக்கழித்து விட்டே
நினைத்துக்கொள்கிறேன்
என் வயதைக்கேட்கும்
அனைவரும்
தம் வயதில் இரண்டைக்கூட்டி
வைத்துக்கொண்டு
அதுதானே
என்றே கேட்கின்றனர்
உன் வயதை நான் எப்போதும்
என்னிலிருந்து
இரண்டைக்கழித்து விட்டே
நினைத்துக்கொள்கிறேன்
வயது மனசோடு ஒட்டிக்கொண்டது தோழர் .. மற்ற படைப்புகள் நெஞ்சுக்கு இனியவை .. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகான கவிதைகள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி.. :) அரசன்.
ReplyDeleteஅழகான வாழ்த்துகள் ஸ்ரீவிஜி :)
ReplyDelete